ராஜமௌலி இயக்கத்தில் கூட நடிச்சுட்டேன்… ஆனா தனுஷ் கூட வேலை செய்வது கடினம் – சத்யராஜ்

Actor Sathyaraj: நடிகர் தனுஷின் இட்லி கடை படத்தின் வெளியீட்டிற்கு இன்னும் சில நாட்களே உள்ளது. இந்த நிலையில் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா இன்று கோயம்புத்தூரில் நடைப்பெற்றது. இந்த விழாவில் நடிகர் சத்யராஜ் பேசியது தற்போது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

ராஜமௌலி இயக்கத்தில் கூட நடிச்சுட்டேன்... ஆனா தனுஷ் கூட வேலை செய்வது கடினம் - சத்யராஜ்

சத்யராஜ்

Published: 

20 Sep 2025 20:27 PM

 IST

கோலிவுட் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர் சத்யராஜ் (Actor Sathyaraj) . இவர் தமிழ் சினிமாவில் வில்லன், நாயகன், காமெடியன் என பல கதாப்பாத்திரத்தில் நடித்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தொடர்ந்து தற்போது தமிழ், தெலுங்கு என தென்னிந்திய மொழிகளில் பிசியான நடிகராக வலம் வருகிறார் நடிகர் சத்யராஜ். இவர் தற்போது தமிழ் சினிமாவில் நடிகர் தனுஷ் (Actor Dhanush) இயக்கி நாயகனாக நடிக்கும் இட்லி கடை படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தில் நடிகர் சத்யராஜ் விஷ்ணு வர்தன் என்ற கதாப்பாத்திரத்தில் நடித்து உள்ளதாக முன்பு படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிமுகம் செய்தது குறிப்பிடத்தக்கது. அந்த கதாப்பாத்திர போஸ்டர் ரசிகர்களிடையே வைரலானது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் படம் வருகின்ற 1-ம் தேதி அக்டோபர் மாதம் 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. படம் வெளியாக் இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் படம் குறித்த அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. முன்னதாக படத்தின் இசை வெளியீட்டு விழா செப்டம்பர் மாதம் 14-ம் தேதி 2025-ம் ஆண்டு சென்னையில் நடைப்பெற்றது. இதனைத் தொடர்ந்து இன்று செப்டம்பர் மாதாம் 20-ம் தேதி 2025-ம் ஆண்டு கோயம்பத்தூரில் உள்ள ப்ரோசோன் மாலில் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நடைப்பெற்றது. இந்த விழாவில் நடிகர் சத்யராஜ் பேசியது இணையத்தில் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

தனுஷ் கூட வேலை செய்வது கடினம் – சத்யராஜ்

அந்த விழாவில் பேசிய நடிகர் சத்யராஜ், கோயம்புத்தூர் ஸ்லாங்கில் பேசிய நடிகர் சத்யராஜ் நானும் ராஜமௌலி இயக்கத்தில் எல்லாம் நடிச்சு இருக்கேன். ஆனா தனுஷ் இயக்கத்தில் நடிப்பது கஷ்டம். ஒரு காட்சியை அவர் எப்படி நினைக்கிறாரோ அப்படி வரும் வரை திரும்ப திரும்ப நம்மிடம் அதை செய்ய சொல்லி கூறுவார் என்று மிகவும் கலகலப்பாக நடிகர் சத்யராஜ் பேசியுள்ளார். இது தற்போது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

Also Read… அந்த நடிகர் மீது எனக்கு க்ரஷ் இருந்தது… ஆனால் அவர் என்ன தங்கச்சினு சொல்லிட்டாரு – பிரபல நடிகை ஓபன் டாக்

இணையத்தில் கவனம் பெறும் சத்யராஜின் பேச்சு:

Also Read… நடிகர் விஜயின் மியூசிக் டேஸ்ட் நல்லா இருக்கும் – விஜய் ஆண்டனி சொன்ன விசயம்