ரசிகர்களிடையே கவனத்தை ஈர்க்கும் சமுத்திரகனியின் கார்மேனி செல்வம் பட ட்ரெய்லர்!

Carmeni Selvam Movie Trailer Viral On Social Media : நடிகரும் இயக்குநருமான சமுத்திரகனி நாயகனாக நடித்துள்ள படம் கார்மேனி செல்வம். இந்தப் படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகி உள்ளது. அந்த ட்ரெய்லர் இணையத்தில் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

ரசிகர்களிடையே கவனத்தை ஈர்க்கும் சமுத்திரகனியின் கார்மேனி செல்வம் பட ட்ரெய்லர்!

கார்மேனி செல்வம்

Published: 

27 Mar 2026 12:00 PM

 IST

தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆகி தற்போது அதிக அளவில் படங்களில் நடிகராக நடித்து வருகிறார் நடிகர் சமுத்திரகனி. இவரது நடிப்பில் திரையரங்குகளில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது. தமிழ் சினிமாவில் மட்டும் இன்றி தென்னிந்திய மொழிகளில் தொடர்ந்து பிசியாக நடித்து வருகிறார். தமிழ் சினிமாவில் அனைத்து விதமான கதாப்பாத்திரங்களை ஏற்று நடிகர் சமுத்திரகனி நடித்து வந்தாலும் தெலுங்கு சினிமாவில் பெரும்பாலான படங்கள் வில்லன் கதாப்பாத்திரத்தை ஏற்று நடித்து வருகிறார். மேலும் தெலுங்கு சினிமாவில் மோஸ்ட் வாண்டட் வில்லனாக வலம் வருகிறார் நடிகர் சமுத்திரகனி. இவரது நடிப்பில் தற்போது தமிழ் சினிமாவில் வெளியாக உள்ள படம் கார்மேனி செல்வம். இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாக இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகி உள்ளது.

இந்த கார்மேனி செல்வம் படத்தை இயக்குநர் ராம் சக்ரி எழுதி இயக்கி உள்ளார். மேலும் நடிகர் சமுத்திரகனி இந்தப் படத்தில் கதையின் நாயகனாக நடித்துள்ள நிலையில் இவருடன் இணைந்து நடிகர்கள் கௌதம் வாசுதேவ் மேனன், லட்சுமி பிரியா, அபிநயா, கார்த்திக் குமார், படவா கோபி, மதுமிதா, அர்ஜுனன், சங்கர நாராயண் வி, ஹரிதா பரக்கோடு, கோதண்டம், கரண் சக்ரவர்த்தி ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர். மேலும் இந்தப் படம் வருகின்ற 3-ம் தேதி ஏப்ரல் மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

பணக்காரனா ஆகுறதுக்கு முன்னாடி பணக்காரனா வாழ்ந்து பாக்கனும்:

மிடில் கிளாஸ் குடும்பத்தை சேர்ந்த சமுத்திரக்கனி தனது மகன் மற்றும் மனைவி உடன் இணைந்து வாழ்ந்து வருகிறார். கார் ட்ரைவராக இருக்கும் இவருக்கு விரைவில் பெரிய பணக்காரனாக ஆக வேண்டும் என்ற ஆசை ஏற்படுகிறது. அந்த ஆசை நோக்கி செல்லும் பயணத்தில் அவர் என்ன எல்லாம் செய்கிறார் என்பதே இந்த கார்மேனி செல்வம் படத்தின் கதை என்பது ட்ரெய்லரைப் பார்க்கும் போதே தெரிகிறது. இந்த ட்ரெய்லர் தற்போது இணையத்தில் ரசிகர்களிடையே கவனத்தை ஏற்படுத்து வருகின்றது.

Also Read… ஜெயராம் – பிரித்வி பாண்டியராஜனின் கதாப்பாத்திர போஸ்டர்களை வெளியிட்டது கர படக்குழு

கார்மேனி செல்வம் படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… ஹேப்பி ராஜ் முதல் சாத்தான் வரை… நாளை மார்ச் 27-ம் தேதி தமிழ் சினிமாவில் வெளியாகும் படங்களின் லிஸ்ட் இதோ!

Follow Us
ரயில்வே கேட்டரிங்கு 10 லட்சம் அபராதம் .. ரயில்வே அதிரடி..
ஹோர்முஸ் கடல் பாதை வழியாக இந்திய கப்பல்கள் செல்ல அனுமதி - ஈரான் அறிவிப்பு
மெட்டா மற்றும் கூகுள் எதிராக பெண் தொடர்ந்த வழக்கு.. 6 மில்லியன் டாலர் பெண்ணுக்கு வழங்க உத்தரவு..
அமெரிக்காவின் அமைதி பேச்சுவார்த்தையை நிராகரித்த ஈரான் - அதிகரிக்கும் எரிபொருள் தட்டுப்பாடு