AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

IPL 2026: களமிறங்கும் ரோஹித்.. வான்கடே ஸ்டேடியத்தில் கொல்கத்தா – மும்பை பிளேயிங் லெவன் எப்படி இருக்கும்?

MI vs KKR Probable Playing 11: மும்பை அணியில் ரோஹித் சர்மா, சூர்யகுமார் யாதவ் மற்றும் திலக் வர்மா போன்ற நட்சத்திர வீரர்களுடன், கேப்டன் ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியா அணியின் முதுகெலும்பாக இருக்கிறார். இதற்கிடையில், ஜஸ்பிரித் பும்ரா மற்றும் டிரென்ட் போல்ட் ஆகிய பந்துவீச்சு ஜோடி எதிரணியின் பேட்ஸ்மேன்களுக்கு மிகப்பெரிய சவாலாக அமையும்.

IPL 2026: களமிறங்கும் ரோஹித்.. வான்கடே ஸ்டேடியத்தில் கொல்கத்தா – மும்பை பிளேயிங் லெவன் எப்படி இருக்கும்?
பயிற்சியின்போது மும்பை மற்றும் கொல்கத்தா வீரர்கள்Image Source: KKR/X
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 29 Mar 2026 15:21 PM IST

இந்தியன் பிரீமியர் லீக் (IPL 2026) 2026 சீசனின் இரண்டாவது போட்டியில், மும்பை இந்தியன்ஸ் (MI) மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) அணிகள் இன்று அதாவது 2026 மார்ச் 29ம் தேதி மோதுகின்றன. இப்போட்டி மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் இரவு 7 மணிக்குத் தொடங்கும். 5 முறை ஐபிஎல் சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி, தங்களது சாம்பியன்ஷிப் வறட்சியை முடிவுக்குக் கொண்டுவர முனைந்துள்ளது. மும்பை அணி கடைசியாக 2020-ல் கோப்பையை வென்றனர். அதன் பிறகு கோப்பையை கடுமையாக முயற்சித்து வருகிறது. கடந்த 2025 சீசனில், கேப்டன் ஹர்திக் பாண்டியா தலைமையில் அணி மூன்றாவது இடத்தைப் பிடித்தது. அதேநேரத்தில், மும்பை அணி தற்போது வலுவான நிலையில் உள்ளதால், தனது ஆறாவது பட்டத்தை வெல்ல கடைசி வரை போராடும்.

மும்பை அணியில் ரோஹித் சர்மா, சூர்யகுமார் யாதவ் மற்றும் திலக் வர்மா போன்ற நட்சத்திர வீரர்களுடன், கேப்டன் ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியா அணியின் முதுகெலும்பாக இருக்கிறார். இதற்கிடையில், ஜஸ்பிரித் பும்ரா மற்றும் டிரென்ட் போல்ட் ஆகிய பந்துவீச்சு ஜோடி எதிரணியின் பேட்ஸ்மேன்களுக்கு மிகப்பெரிய சவாலாக அமையும். இவர்களுடன், ஏராளமான வெளிநாட்டு வீரர்களும் ஆதிக்கம் செலுத்தலாம்.

ALSO READ: 3 ஆண்டுகளாக சிஎஸ்கேவில் இணைய விரும்பிய சாம்சன்.. ருதுராஜ் கெய்க்வாட் சுவாரஸ்ய தகவல்!

தாக்கத்தை ஏற்படுத்துவார்களா வெளிநாட்டு வீரர்கள்:

மிட்செல் சான்ட்னர், குயின்டன் டி காக், ரியான் ரிக்கல்டன் மற்றும் வில் ஜாக்ஸ் போன்ற வீரர்கள் அணிக்கு பலம் சேர்க்கின்றனர். இருப்பினும், தொடரின் மெதுவான தொடக்கம் மும்பை இந்தியன்ஸுக்கு எப்போதுமே மிகப்பெரிய சவாலாக இருந்து வருகிறது. இந்த முறை அவர்கள் பட்டத்தை வெல்ல விரும்பினால், தொடக்கத்திலிருந்தே ஒரு சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தி, சரியான ஆடும் லெவனைக் களமிறக்க வேண்டும்.

கொல்கத்தா:

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பல கேள்விகளுடன் இந்தப் போட்டியை எதிர்கொள்கிறது. கேப்டன் அஜிங்க்யா ரஹானே தலைமையிலான அணி, தனது பந்துவீச்சுத் தாக்குதல் சற்று பின் தங்கிய நிலையிலேயே உள்ளது. முஸ்தபிசூர் ரஹ்மான் அணியிலிருந்து விடுவிக்கப்பட்டது அணிக்கு ஒரு பெரிய பின்னடைவை ஏற்படுத்தியது. அதே நேரத்தில், ஆகாஷ் தீப் மற்றும் ஹர்ஷித் ராணா ஆகியோர் காயம் காரணமாக அணியிலிருந்து விலக்கப்பட்டனர். இதன் விளைவாக, பந்துவீச்சுப் பொறுப்பு பெரும்பாலும் வருண் சக்கரவர்த்தி மற்றும் பிளெஸ்ஸிங் முசர்பானி மீது அதிக அழுத்தத்தை கொடுக்கும்.

ஃபினிஷர் பொறுப்பிற்கு ரிங்கு பொருத்தமானவராக இருப்பாரா?

பேட்டிங்கில் போட்டியின் போக்கையே மாற்றும் திறன் கொண்ட ரிங்கு சிங், ரச்சின் ரவீந்திரா மற்றும் ராகுல் திரிபாதி போன்ற வீரர்கள் கேகேஆர் அணியில் உள்ளனர். ஒட்டுமொத்தமாக, இந்தப் போட்டி வலுவான மற்றும் சமநிலையான மும்பை இந்தியன்ஸ் அணிக்கும், சில பலவீனமான இணைப்புகளால் தடுமாறி வரும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கும் இடையே நடைபெறும். தங்களது வலுவான அணியை நம்பியிருக்கும் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றியுடன் தொடங்குமா அல்லது கேகேஆர் அணி எதிர்பாராத வெற்றியைப் பெறுமா என்பதே கவனத்தின் மையமாக இருக்கும். இந்தியன் பிரீமியர் லீக்கில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை விட மும்பை இந்தியன்ஸ் அணி வலுவான அணி வரிசையைக் கொண்டுள்ளது. இந்த இரு அணிகளும் இதுவரை 35 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ளன. இதில், மும்பை இந்தியன்ஸ் அதிகபட்சமாக 24 போட்டிகளிலும், 3 முறை ஐபிஎல் சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 11 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன.

ALSO READ: மும்பையில் மோதும் MI vs KKR.. பிட்ச் யாருக்கு சாதகம்..? வானிலை எப்படி?

மும்பை இந்திய அணியின் உத்தேச ஆடும் XI

ரோஹித் சர்மா, குயின்டன் டி காக் (விக்கெட் கீப்பர்), திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா (கேப்டன்), நமன் திர், ஷெர்பான் ரூதர்ஃபோர்ட், தீபக் சாஹர், அல்லா கசன்பர், டிரெண்ட் போல்ட் மற்றும் ஜஸ்பிரித் பும்ரா.

இம்பாக்ட் வீரர்கள்: மயங்க் மார்கண்டே/ஷர்துல் தாக்கூர்/அஷ்வினி குமார்

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் உத்தேச ஆடும் XI

ஃபின் ஆலன், டிம் சீஃபர்ட் (விக்கெட் கீப்பர்), அஜிங்க்யா ரஹானே (கேப்டன்), அங்கிரிஷ் ரகுவன்ஷி, கேமரூன் கிரீன், ரின்கு சிங், ராமன்தீப் சிங், வைபவ் அரோரா, பிளஸ்ஸிங் முஜர்பானி, வருண் சக்ரவர்த்தி மற்றும் உம்ரான் மாலிக்.

இம்பாக்ட் வீரர்கள்: அனுகுல் ராய்/ராகுல் திரிபாதி/கார்த்திக் தியாகி

Follow Us