AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

IPL 2026: அரைசதம் அடித்து கோளாறு கொடுத்த கோலி.. பெங்களூரு அதிரடியால் வீழ்ந்த ஹைதராபாத்!

RCB vs SRH Highlights: 202 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூரு அணியின் தொடக்க வீரர்களாக பில் சால்ட் மற்றும் விராட் கோலி களமிறங்கினர். 2 பவுண்டர்களுடன் தொடங்கிய பில் சால்ட் 7 பந்துகளில் 8 ரன்கள் எடுத்து உனத்கட் பந்தில் ஆட்டமிழந்தார். இதையடுத்து, விராட் கோலியுடன் படிக்கல் இணைந்து, ஹைதராபாத் பந்துவீச்சாளர்கள் பாடம் எடுக்க தொடங்கினர்

IPL 2026: அரைசதம் அடித்து கோளாறு கொடுத்த கோலி.. பெங்களூரு அதிரடியால் வீழ்ந்த ஹைதராபாத்!
விராட் கோலி - தேவ்தத் படிக்கல்Image Source: IPL/BCCI
Mukesh Kannan
Mukesh Kannan | Updated On: 28 Mar 2026 23:11 PM IST

ஐபிஎல் 2026-ன் (IPL 2026) முதல் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) அணி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணிக்கு எதிராக முதலில் பேட் செய்து 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 201 ரன்கள் எடுத்தது. இலக்கை துரத்திய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வெறும் 15.4 ஓவர்களில் 203 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது. டாஸ் வென்ற பெங்களூரு முதலில் பந்துவீச்சைத் தீர்மானித்தது. இதையடுத்து, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் தொடக்க வீரர்களாக உள்ளே வந்த அபிஷேக் சர்மா 7 ரன்களிலும், ஹெட் 11 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அடுத்ததாக உள்ளே வந்த நிதிஷ்குமார் ரெட்டியும் 1 ரன்னில் ஆட்டமிழந்தார். இதன் காரணமாக, 5வது ஓவரின் இரண்டாவது பந்திற்குள், பெங்களூரு வெறும் 29 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்திருந்தது.

ALSO READ: 3 ஆண்டுகளாக சிஎஸ்கேவில் இணைய விரும்பிய சாம்சன்.. ருதுராஜ் கெய்க்வாட் சுவாரஸ்ய தகவல்!

இஷான் கிஷன் அதிரடி:

சிக்கலான நிலைமையில் உள்ள வந்த கேப்டன் இஷான் கிஷன் 38 பந்துகளில் 8 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்கள் அடித்து 80 ரன்கள் எடுத்து அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்ய, கிளாசன் 22 பந்துகளில் இரண்டு பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடித்து 31 ரன்கள் எடுத்தார். இஷான் கிஷன் மற்றும் ஹென்ரிச் கிளாசன் நான்காவது விக்கெட்டுக்கு 97 ரன்கள் (53 பந்துகளில்) பார்ட்னர்ஷிப் அமைத்து, அணி ஒரு நல்ல ஸ்கோரை எட்ட உதவினர். தொடர்ந்து, ஏழாவது இடத்தில் களமிறங்கிய அனிகேத் வர்மா, 18 பந்துகளில் 3 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் அடித்து 43 ரன்கள் எடுத்து ஹைதராபாத் அணி 200 ரன்களை கடந்த உதவி செய்தார். பெங்களூரு அணிக்காக ஜேக்கப் டஃபி மற்றும் ரொமாரியோ ஷெப்பர்ட் தலா மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

ALSO READ: 19 ஆண்டுகளில் முதல்முறை.. ஐபிஎல்லில் 10 அணிகளுக்கும் இந்திய கேப்டன்கள்!

கலக்கிய கோலி – படிக்கல் கூட்டணி:


202 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூரு அணியின் தொடக்க வீரர்களாக பில் சால்ட் மற்றும் விராட் கோலி களமிறங்கினர். 2 பவுண்டர்களுடன் தொடங்கிய பில் சால்ட் 7 பந்துகளில் 8 ரன்கள் எடுத்து உனத்கட் பந்தில் ஆட்டமிழந்தார். இதையடுத்து, விராட் கோலியுடன் படிக்கல் இணைந்து, ஹைதராபாத் பந்துவீச்சாளர்கள் பாடம் எடுக்க தொடங்கினர். இருவரும் இணைந்து பவுண்டரிகளையும், சிக்ஸர்களையும் ஓடவிட்டனர். இதன் காரணமாக, ஆர்சிபி 8 ஓவர்களிலேயே 100 ரன்களை கடந்தது. 8.4 ஓவர்களில் ஆர்சிபியின் ஸ்கோர் 110 ஆக இருந்தபோது, அதிரடியாக விளையாடிய படிக்கல் 26 பந்துகளில் 7 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 61 ரன்கள் எடுத்து ஹர்ச் துபே பந்தில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து கேப்டன் ரஜத் படிதார் 12 பந்துகளில் 31 ரன்களும், விக்கெட் கீப்பர் ஜிதேஷ் சர்மா முதல் பந்திலேயேயும் ஆட்டமிழந்து வெளியேறினர். மறுமுனையில் விராட் கோலி 33 பந்துகளில் அரைசதத்தை கடந்தார். உள்ளே வந்த டிம் டேவிட்டும் 10 பந்துகளில் 16 ரன்கள் எடுக்க, பெங்களூரு அணி 15 ஓவர்களில் இலக்கை எட்டியது. விராட் கோலி கடைசி வரை ஆட்டமிழக்காமல் 38 பந்துகளில் 5 பவுண்டரி, 5 சிக்ஸர்களுடன் 69 ரன்கள் எடுத்திருந்தார்.

Follow Us