AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

IPL 2026: பேட்டிங்கில் பலம்.. பந்துவீச்சில் பலவீனம்.. RCB vs SRH அணியில் பிளேயிங் லெவன் விவரம்!

RCB vs SRH Playing 11 Prediction: நடப்பு சாம்பியனான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு ரஜத் படிதாரும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு இஷான் கிஷனும் தலைமை தாங்குவார்கள். கேப்டனாக இஷான் கிஷனுக்கு முதல் ஐபிஎல் போட்டி என்பதால் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவுகிறது. பாட் கம்மின்ஸ் காயம் காரணமாக ஒரு சில போட்டிகளில் விளையாட மாட்டார் என ஹைதராபாத் நிர்வாகம் ஏற்கனவே அறிவித்திருந்தது.

IPL 2026: பேட்டிங்கில் பலம்.. பந்துவீச்சில் பலவீனம்.. RCB vs SRH அணியில் பிளேயிங் லெவன் விவரம்!
இஷான் கிஷன் - ரஜத் படிதார்
Mukesh Kannan
Mukesh Kannan | Updated On: 28 Mar 2026 17:04 PM IST

ஐபிஎல் 2026 சீசனானது (IPL 2026) ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (Royal Challengers Bengaluru) மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையேயான போட்டியுடன் இன்று அதாவது 2026 மார்ச் 28ம் தேதி தொடங்குகிறது. இந்த போட்டியானது பெங்களூருவில் உள்ள எம்.சின்னசாமி ஸ்டேடியத்தில் தொடங்குகிறது. நடப்பு சாம்பியனான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு ரஜத் படிதாரும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு இஷான் கிஷனும் தலைமை தாங்குவார்கள். கேப்டனாக இஷான் கிஷனுக்கு (Ishan Kishan) முதல் ஐபிஎல் போட்டி என்பதால் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவுகிறது. பாட் கம்மின்ஸ் காயம் காரணமாக ஒரு சில போட்டிகளில் விளையாட மாட்டார் என ஹைதராபாத் நிர்வாகம் ஏற்கனவே அறிவித்திருந்தது.

ALSO READ: பேட்டிங்கிற்கு சாதகமான பிட்ச்.. RCB vs SRH போட்டியில் ரன் மழை பொழியுமா?

காயத்தால் தவிக்கும் பெங்களூரு:

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவை பொறுத்தவரை, யாஷ் தயால் தனிப்பட்ட காரணங்களால் இந்த சீசனில் விளையாடவில்லை. அதேநேரத்தில் ஜோஷ் ஹேசில்வுட் காயத்தால் தவித்து வரும் நிலையில், இலங்கை வேகப்பந்து வீச்சாளர் நுவான் துஷாரா உடற்தகுதி சோதனையில் தேர்ச்சி பெறவில்லை. நியூசிலாந்து அணியின் முன்னணி பந்துவீச்சாளரான ஜேக்கப் டஃபி மட்டுமே ஆர்சிபி அணிக்கு பலமாக இருப்பார். எனவே, ஆர்சிபி தங்களது பலவீனமான பந்துவீச்சை பேட்டிங் மூலம் ஈடு செய்ய வேண்டும்.

பேட்டிங்கில் விராட் கோலியும் கேப்டன் ரஜத் படிதாரும் முதுகெலும்பாக இருப்பார்கள். மேல் வரிசையில் பில் சால்ட் மற்றும் ஜேக்கப் பெத்தேலும், கீழ் வரிசையில் டிம் டேவிட் மற்றும் ரொமாரியோ ஷெப்பர்ட் கூடுதல் பலம். அதேநேரத்தில், விக்கெட் கீப்பர் ஜிதேஷ் சர்மா, வெங்கடேஷ் ஐயர் மற்றும் க்ருனால் பாண்டியா குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்குவார்கள்.

கணிக்கப்பட்ட ஆர்சிபி பிளேயிங் லெவன்:

பில் சால்ட், விராட் கோலி, ரஜத் படிதார் (கேப்டன்), ஜேக்கப் பெத்தேல், வெங்கடேஷ் ஐயர், ஜிதேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), டிம் டேவிட், ரொமாரியோ ஷெப்பர்ட், க்ருனால் பாண்ட்யா, மங்கேஷ் யாதவ், புவனேஷ்வர் குமார்.

இம்பாக்ட் வீரர் – சுயாஷ் சர்மா

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்:

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் காயம் காரணமாக, அந்த அணி பந்துவீச்சில் பின்னடைவை சந்தித்துள்ளது. அதன்படி, ஹைதராபாத் அணியின் பேட்டிங் வரிசை வலுவாக இருந்தாலும், பந்துவீச்சு மிகவும் பலவீனமாக உள்ளது. இருப்பினும், ஹர்ஷல் படேல் மற்றும் ஜெய்தேவ் உனத்கட் தாக்கத்தை ஏற்படுத்தலாம். கம்மின்ஸ் இல்லாத நிலையில், இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் பிரைடன் கார்ஸுக்கு வாய்ப்பு கிடைக்கலாம்.

அதிரடிக்கு பெயர் போன டிராவிஸ் ஹெட் மற்றும் அபிஷேக் சர்மா தொடக்க ஜோடியாக களமிறங்குவார்கள். இது தவிர, இஷான் கிஷன் மற்றும் ஹென்ரிச் கிளாசன் போன்ற பேட்ஸ்மேன்களும் உள்ளனர். நிதிஷ் ரெட்டி மற்றும் லியாம் லிவிங்ஸ்டன் போன்றோரும் ஆதிக்கம் செலுத்துகின்றனர்.

ALSO READ: பாட் கம்மின்ஸ் டவுட்.. இஷான் கிஷனை கேப்டனாக நியமித்த SRH!

கணிக்கப்பட்ட எஸ்ஆர்ஹெச் பிளேயிங் லெவன்:

அபிஷேக் சர்மா, டிராவிஸ் ஹெட், இஷான் கிஷன் (கேப்டன்/விக்கெட் கீப்பர்), ஹென்ரிச் கிளாசென், நிதிஷ் குமார் ரெட்டி, லியாம் லிவிங்ஸ்டோன், அனிகேத் வர்மா, ஹர்ஷ் துபே, ஹர்ஷல் படேல், ஜெய்தேவ் உனட்கட், பிரைடன் கார்சே.

இம்பாக்ட் வீரர் – ஜீஷன் அன்சாரி

Follow Us