AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

IPL 2026: பெங்களூருவில் மழை எச்சரிக்கை.. தடை படுமா RCB vs SRH போட்டி?

RCB vs SRH Bengaluru Weather: 2026 மார்ச் 28ம் தேதியான நாளை நடைபெறும் ஐபிஎல் 2026 தொடரின் முதல் போட்டியின் போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. பெங்களூருவில் பிற்பகலிலும் மழை பெய்ய வாய்ப்புள்ளது. இருப்பினும், மாலை நேரப் போட்டியின் போது மழை பெய்ய 5 சதவீதம் மட்டுமே வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

IPL 2026: பெங்களூருவில் மழை எச்சரிக்கை.. தடை படுமா RCB vs SRH போட்டி?
ஆர்சிபி - எஸ்ஆர்ஹெச் பெங்களூரு வெதர் அப்டேட்
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 27 Mar 2026 20:19 PM IST

ஐபிஎல் 19-வது சீசன் (IPL 2026) 2026 மார்ச் 28ம் தேதி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (Royal Challengers Bengaluru) மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையேயான போட்டியுடன் தொடங்குகிறது. இந்த போட்டியானது மிகப்பெரிய சர்ச்சைக்கு பிறகு பெங்களூருவில் உள்ள எம்.சின்னசாமி ஸ்டேடியத்தில் இந்தப் போட்டி நடைபெறும்.  இந்தநிலையில், பெங்களூருவில் மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், இந்தப் போட்டியின்போது மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையேயான போட்டியின்போது மழைக்கு வாய்ப்புள்ளதா என்பதை தெரிந்து கொள்வோம்.

ஐபிஎல் 2026 தொடங்குவதற்குமுன்பு வரை எம்.சின்னசாமி மைதானத்திற்குத் தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்தத் தடை நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தனது சொந்தப் போட்டிகளை அந்த ஸ்டேடியத்தில் விளையாட அனுமதிக்கப்பட்டது. ஐபிஎல் 2026ன் இரண்டாம் கட்ட அட்டவணையை பிசிசிஐ நேற்று அதாவது 2026 மார்ச் 26ம் தேதி அறிவித்துள்ளது. இந்த சீசனில் பெங்களூருவில் 5 போட்டிகள் நடைபெற உள்ளன.

ALSO READ: ஐபிஎல்லில் மற்றொரு சாதனை.. வரலாறு படைக்கப்போகும் விராட் கோலி..!

பெங்களூருவில் வானிலை எப்படி இருக்கும் ?

2026 மார்ச் 28ம் தேதியான நாளை நடைபெறும் ஐபிஎல் 2026 தொடரின் முதல் போட்டியின் போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. பெங்களூருவில் பிற்பகலிலும் மழை பெய்ய வாய்ப்புள்ளது. இருப்பினும், மாலை நேரப் போட்டியின் போது மழை பெய்ய 5 சதவீதம் மட்டுமே வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மழையின் காரணமாக ஆட்டம் அவ்வப்போது தடைபட வாய்ப்புள்ளது. ஆனால் இது ரத்து செய்யப்படுமா என்று கேட்டால், அதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு என்றே தெரிகிறது.

கடந்த 2025 சீசனிலும் எம்.சின்னசாமி ஸ்டேடியத்தில் 5 போட்டிகள் நடைபெற்றன. அதில் ஆர்சிபி 2 போட்டிகளில் வெற்றி பெற்று, 3 போட்டிகளில் தோல்வியடைந்தது. இந்த ஸ்டேடியத்தில் 106 இன்னிங்ஸ்களில் 3,618 ரன்கள் எடுத்து, விராட் கோலி அதிக ஐபிஎல் ரன்கள் எடுத்தவர் என்ற சாதனையை தன்வசம் வைத்துள்ளார்.

ஆர்சிபி மற்றும் எஸ்ஆர்ஹெச் அணிகளுக்கு இடையிலான போட்டி எங்கு நேரலையாக ஒளிபரப்பப்படும்?

ஐபிஎல் 2026-க்கு எம்.சின்னசாமி ஸ்டேடியத்தில் தொடக்க விழா நடைபெறாது. இந்திய நேரப்படி இரவு 7:30 மணிக்கு போட்டி தொடங்கும். அதேநேரத்தில், டாஸ் இரவு 7 மணிக்கு நடைபெறும். பெங்களூரு மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான போட்டி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பப்படும். இந்தப் போட்டி ஜியோஹாட்ஸ்டார் ஆப் மற்றும் இணையதளத்திலும் நேரலையாக காணலாம்.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு:

ரஜத் படிதார் (கேப்டன்), விராட் கோலி , டிம் டேவிட், பிலிப் சால்ட், ஜிதேஷ் ஷர்மா, தேவ்தத் பாடிக்கல், க்ருனால் பாண்டியா, ரொமாரியோ ஷெப்பர்ட், ஜோஷ் ஹேசில்வுட், ரசிக் சலாம் தார், ஜேக்கப் பெத்தேல், புவனேஷ்வர் குமார், சுயாஷ் சர்மா, ஸ்வப்னில் சிங், யஷ் தயால், வெங்கடேஷ், நுவான் துஸ் டேயால், விஹான் மல்ஹோத்ரா, கனிஷ்க் சவுகான், அபிநந்தன் சிங், மங்கேஷ் யாதவ், ஜோர்டான் காக்ஸ், விக்கி ஓஸ்ட்வால், சாத்விக் தேஸ்வால்.

ALSO READ: இம்பாக்ட் பிளேயர் விதி வேண்டாம்.. பிசிசிஐ கூட்டத்தில் கேப்டன்கள் கோரிக்கை!

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்:

இஷான் கிஷன் (கேப்டன்), டிராவிஸ் ஹெட், ஸ்மரன் ரவிச்சந்திரன், அபிஷேக் ஷர்மா, ஹர்ஷ் துபே, ஹென்ரிச் கிளாசென், கமிந்து மெண்டிஸ், இஷான் மலிங்கா, ஜெய்தேவ் உனட்கட், சலில் அரோரா, பிரஃபுல் ஹிங்கே, பாட் கம்மின்ஸ், நிதிஷ் குமார் ரெட்டி, சிவம் மாவி, ஜாக் மவி, ஜாக் குமார் எட்வர்ட்ஸ், எஃப். சாகிப் உசேன், ஜீஷன் அன்சாரி, அனிகேத் வர்மா, லியாம் லிவிங்ஸ்டோன், ஹர்ஷல் படேல்.

Follow Us