AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

IPL 2026: ஐபிஎல்லில் மற்றொரு சாதனை.. வரலாறு படைக்கப்போகும் விராட் கோலி..!

Virat Kohli Record: ஐபிஎல் 2026-ல் ஒரு பெரிய சாதனையை விராட் கோலி நெருங்கிவிட்டார். ஆர்சிபியின் நட்சத்திர வீரர் விராட் கோலி இன்னும் 9 சிக்ஸர்களை அடித்தால், இந்த லீக்கில் 300 சிக்ஸர்களை அடித்த 3வது பேட்ஸ்மேன் என்ற பெருமையைப் பெறுவார். இந்த லீக்கில் அதிக சிக்ஸர்கள் அடித்த சாதனையை கிறிஸ் கெய்ல் 357 சிக்ஸர்களுடன் வைத்துள்ளார்.

IPL 2026: ஐபிஎல்லில் மற்றொரு சாதனை.. வரலாறு படைக்கப்போகும் விராட் கோலி..!
விராட் கோலி
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 27 Mar 2026 19:37 PM IST

ஐபிஎல் 2026 சீசன் (IPL 2026) வருகின்ற 2026 மார்ச் 28ம் தேதி முதல் தொடங்க உள்ளது. இதன் முதல் போட்டி பெங்களூருவில் உள்ள எம்.சின்னசாமி மைதானத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (Royal Challengers Bengaluru) மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற உள்ளது. விராட் கோலி, ரோஹித் சர்மா மற்றும் எம்.எஸ்.தோனி போன்ற ஜாம்பவான் வீரர்களைக் களத்தில் காண ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர். இந்த சீசனில், இதுவரை கிறிஸ் கெய்ல் மற்றும் ரோஹித் சர்மா மட்டுமே சாதித்துள்ள ஒரு அரிய சாதனையை விராட் கோலி படைக்கவுள்ளார்.

ALSO READ: 14 லீக் போட்டிகள்.. ஐபிஎல் 2026ல் சிஎஸ்கே எப்போது, யாருடன் மோதுகிறது?

விராட் கோலி படைக்கவுள்ள சாதனை:

ஐபிஎல் 2026-ல் ஒரு பெரிய சாதனையை விராட் கோலி நெருங்கிவிட்டார். ஆர்சிபியின் நட்சத்திர வீரர் விராட் கோலி இன்னும் 9 சிக்ஸர்களை அடித்தால், இந்த லீக்கில் 300 சிக்ஸர்களை அடித்த 3வது பேட்ஸ்மேன் என்ற பெருமையைப் பெறுவார். இந்த லீக்கில் அதிக சிக்ஸர்கள் அடித்த சாதனையை கிறிஸ் கெய்ல் 357 சிக்ஸர்களுடன் வைத்துள்ளார். ரோஹித் சர்மா கடந்த சீசனில் 300 சிக்ஸர்கள் என்ற சாதனையை எட்டினார்.

ஐபிஎல்லில் இவ்வாறு செய்த முதல் பேட்ஸ்மேன் கோலி:

கிரிஸ் கெய்ல் ஐபிஎல்-லில் நான்கு அணிகளுக்காக (KKR, PBKS, RCB) விளையாடியுள்ளார். ரோஹித் ஷர்மாவும் இரண்டு அணிகளுக்காக (DC, MI) விளையாடியுள்ளார். அவர் டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்காக 22 சிக்ஸர்களையும் அடித்துள்ளார். இருப்பினும், ஒரே அணிக்காக விளையாடும்போது 300 சிக்ஸர்களை அடித்த முதல் பேட்ஸ்மேன் என்ற பெருமையை விராட் கோலி படைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. கோலி, ஆர்சிபி அணியின் முதல் சீசனிலிருந்தே அந்த அணிக்காக விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

கோலி இதுவரை 267 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி, 259 இன்னிங்ஸ்களில் 8661 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 8 சதங்களும் அடங்கும், மேலும் ஐபிஎல் வரலாற்றில் அவரது அதிகபட்ச ஸ்கோர் 113* ஆகும். கோலி இதுவரை ஐபிஎல்லில் 291 சிக்ஸர்களையும் 771 பவுண்டரிகளையும் அடித்துள்ளார்.

ஐபிஎல்-லில் அதிக சிக்ஸர்கள் அடித்த பேட்ஸ்மேன்கள்:

  • 357 – கிறிஸ் கெய்ல்
  • 302 – ரோஹித் சர்மா
  • 291 – விராட் கோலி264 – எம்.எஸ். தோனி
  • 251 – கிறிஸ் கெய்ல்

ALSO READ: பெரும் எதிர்பார்ப்பு! ஐபிஎல் 2026ல் அறிமுகமாக வாய்ப்புள்ள 5 வீரர்கள்..!

கூட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழப்பு:

ஐபிஎல் 2026-ன் முதல் போட்டி வருகின்ற 2026 மார்ச் 28ம் தேதியான நாளை பெங்களூருவில் ஆர்சிபி மற்றும் எஸ்ஆர்ஹெச் அணிகளுக்கு இடையே நடைபெற உள்ளது. ஆனால், இந்த முறை லீக்கிற்கான தொடக்க விழா நடைபெறாது. கடந்த 2025ம் ஆண்டு வெற்றி ஊர்வலத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு பிசிசி இந்த முடிவை எடுத்துள்ளது. கடந்த 2025ம் ஆண்டு ஜூன் 4ம் தேதி ஆர்சிபி அணி தனது முதல் பட்டத்தை வென்றதைக் கொண்டாடியது. இருப்பினும், திரண்டிருந்த பெரும் கூட்டத்தை ஏற்பாட்டாளர்களால் கட்டுப்படுத்த முடியவில்லை. மைதானத்திற்கு வெளியே ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழந்தனர்.

Follow Us