AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

IPL 2026: ஐபிஎல் வரலாற்றில் அதிக ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி.. டாப் 2வில் மும்பை, பெங்களூரு!

Biggest victories in IPL history: ஐபிஎல் லீக்கின் வரலாற்றிலேயே மிகப்பெரிய வெற்றி சாதனைகள் அதிகளவில் படைக்கப்பட்டுள்ளன. அந்தவகையில், அதிக ரன்கள் வித்தியாசத்தில் எந்த அணி வெற்றி பெற்றுள்ளது..? எத்தனை ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை பதிவு செய்தனர் உள்ளிட்ட விவரங்களை தெரிந்து கொள்வோம். 

IPL 2026: ஐபிஎல் வரலாற்றில் அதிக ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி.. டாப் 2வில் மும்பை, பெங்களூரு!
மும்பை - பெங்களூருImage Source: Twitter
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 25 Mar 2026 14:39 PM IST

ஐபிஎல் 2026 சீசனானது (IPL 2026) வருகின்ற 2026 மார்ச் 28ம் தேதி தொடங்கவுள்ளது. முதல் ரஜத் படிதார் தலைமையிலான நடப்பு சாம்பியன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (Royal Challengers Bengaluru) அணியும், இஷான் கிஷன் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதுகிறது. அதன்படி, கிரிக்கெட் ரசிகர்கள் சிறந்த போட்டிகளை காண ஆவலுடன் காத்திருக்கின்றனர். இதற்கிடையில், இந்த ஐபிஎல் லீக்கின் வரலாற்றிலேயே மிகப்பெரிய வெற்றி சாதனைகள் அதிகளவில் படைக்கப்பட்டுள்ளன. அந்தவகையில், அதிக ரன்கள் வித்தியாசத்தில் எந்த அணி வெற்றி பெற்றுள்ளது..? எத்தனை ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை பதிவு செய்தனர் உள்ளிட்ட விவரங்களை தெரிந்து கொள்வோம்.

ALSO READ: ஐபிஎல் 2026ல் எண்ட் கார்டு? 19வது சீசனுக்கு பிறகு இந்த வீரர்கள் ஓய்வா?

மும்பை இந்தியன்ஸ்:

ஐபிஎல் வரலாற்றில் மிகப்பெரிய ரன்கள் வித்தியாசத்தில் பெற்ற வெற்றிக்கான சாதனையை மும்பை இந்தியன்ஸ் அணி படைத்துள்ளது. கடந்த 2017ம் ஆண்டு மும்பை அணி டெல்லி டேர்டெவில்ஸ் (தற்போது டெல்லி கேப்பிட்டல்ஸ்) அணியை 146 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 212 ரன்கள் குவித்தது. 213 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 13.4 ஓவர்களில் 66 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன்மூலம், மும்பை இந்தியன்ஸ் அணி 146 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தச் சாதனை இன்றும் நிலைத்து நிற்கிறது.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு:

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு இரண்டாம் இடத்தில் உள்ளது. கடந்த 2016ம் ஆண்டு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு  அணி குஜராத் லயன்ஸ் அணியை 144 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது. இந்தப் போட்டியில், முதலில் பேட்டிங் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 248 ரன்கள் என்ற பிரம்மாண்டமான ஸ்கோரை பதிவு செய்தது. இலக்கை துரத்திய குஜராத் லயன்ஸ் அணி 104 ரன்களில் ஆல் அவுட்டானது.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்:

இந்த பட்டியலில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 3வது இடத்தில் உள்ளனர். கடந்த 2008ம் ஆண்டு கொல்கத்தா அணி, பெங்களூரு அணியை 140 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது. இது ஐபிஎல்-இன் முதல் சீசனில் நடந்த ஒரு போட்டியாகும். முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா 222 ரன்களை குவிக்க, அடுத்ததாக பேட்டிங்கில் களமிறங்கிய பெங்களூரு அணி 82 ரன்களில் ஆட்டமிழந்தது.

மீண்டும் பெங்களூரு:

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மீண்டும் 4வது மற்றும் 5வது இடங்களில் ஆதிக்கம் செலுத்துகிறது. இந்த அணி 2015-ல் கிங்ஸ் XI பஞ்சாப் அணியை 138 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது. அதே நேரத்தில் 2013-ல் புனே வாரியர்ஸுக்கு எதிராக 130 ரன்கள் வித்தியாசத்தில் ஒரு பிரம்மாண்டமான வெற்றியையும் பதிவு செய்தது. குறிப்பிடத்தக்க வகையில், அதே 2013 போட்டியில், ஆர்சிபி 263 ரன்கள் எடுத்தது. இது நீண்ட காலமாக ஐபிஎல்-லில் அதிகபட்ச ஸ்கோராக இருந்தது.

ALSO READ: ஐபிஎல் 2026ல் எந்த 4 அணிகள் பிளே ஆஃப்க்கு தகுதி பெறும்? பட்டியலில் சிஎஸ்கே உள்ளதா?

ஐபிஎல் 2026 தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு நடப்பு சாம்பியனாக களமிறங்கும். கடந்த 2025 சீசனில் பட்டத்தை வென்றதன் மூலம், அந்த அணி 18 வருட காத்திருப்புக்கு முற்றுப்புள்ளி வைத்தது.

Follow Us