IPL 2026: ஜடேஜா முதல் மார்கண்டே வரை.. பழைய அணியில் பந்தா காட்டப்போகும் வீரர்கள்!
6 Players Will Play Old Team In IPL 2026: ஐபிஎல் 2026 சீசனில் பல வீரர்கள் மீண்டும் தங்கள் பழைய அணிகளுக்கு திரும்பி, விளையாடவுள்ளனர். சீசன் தொடங்க இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், அத்தகைய சில வீரர்களை பற்றி இங்கே தெரிந்து கொள்வோம்.
மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்தியன் பிரீமியர் லீக் (IPL 2026 ) 2026 சீசன் விரைவில் தொடங்கவுள்ளது. ஐபிஎல் 2026ன் 19-வது பதிப்பு வருகின்ற 2026 மார்ச் 28ம் முதல் தொடங்க உள்ளது. முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (Royal Challengers Bengaluru) மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெறுகிறது. இந்த போட்டியில் குறிப்பிடத்தக்க வகையில், ஐபிஎல் 2026 சீசனில் பல வீரர்கள் மீண்டும் தங்கள் பழைய அணிகளுக்கு திரும்பி, விளையாடவுள்ளனர். சீசன் தொடங்க இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், அத்தகைய சில வீரர்களை பற்றி இங்கே தெரிந்து கொள்வோம்.
ALSO READ: ஐபிஎல் 2026-ல் அமல்படுத்தப்படவுள்ள 7 புதிய விதிகள் இவைதான்!
ரவீந்திர ஜடேஜா (ராஜஸ்தான் ராயல்ஸ்)
இந்திய அணியின் முக்கியமான ஆல்ரவுண்டர்களில் ஒருவரான ரவீந்திர ஜடேஹா, நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிலிருந்து விலகி, ஒரு பரிமாற்ற வர்த்தகத்தின் (trade deal) மூலம் மீண்டும் தனது முதல் ஐபிஎல் அணியான ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்குத் திரும்பியுள்ளார். ஜடேஜா இதற்கு முன்னதாக கடந்த 2008 மற்றும் 2009ம் ஆண்டுகளில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடியுள்ளார்.




2008ம் ஆண்டில் பேட்டிங் மூலம் ஜடேஜா 19.28 சராசரியில் 135 ரன்களும், ஆனால் பந்துவீச்சில் அவரால் விக்கெட்டுகள் எதையும் வீழ்த்த முடியவில்லை. அதேநேரத்தில் 2009ம் ஆண்டில், ஜடேஜா 26.81 சராசரியில் 295 ரன்களைக் குவித்ததுடன், 25.16 சராசரியில் 6 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார்.
மயங்க் மார்கண்டே (மும்பை இந்தியன்ஸ்)
ஐபிஎல் 2026 சீசனுக்கு முன்னதாக, மயங்க் மார்கண்டே கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியிலிருந்து விலகி, ரூ. 30 லட்சத்திற்கு மீண்டும் மும்பை இந்தியன்ஸ் அணியில் இணைந்தார். கடந்த 2018ம் ஆண்டில் எந்த அணியில் விளையாடி தனது ஐபிஎல் அறிமுகத்தைச் செய்தாரோ, அதே அணிக்குத் திரும்பியுள்ள மார்கண்டே, மும்பை இந்தியன்ஸ் அணியின் சுழற்பந்துவீச்சுத் துறைக்கு மேலும் வலு சேர்த்துள்ளார்.
பிரித்வி ஷா (டெல்லி கேப்பிடல்ஸ்)
ஐபிஎல் 2026 சீசனுக்காக, முன்னாள் இந்திய அண்டர் 19 கேப்டன் பிரித்வி ஷாவை ரூ. 75 லட்சத்திற்கு மீண்டும் டெல்லி கேப்பிடல்ஸ் (DC) அணி எடுத்தது. ஐபிஎல் 2025 மெகா ஏலத்திற்கு முன்னதாக டெல்லி கேப்பிடல்ஸ் அணியால் விடுவிக்கப்பட்ட அவரை மீண்டும் டெல்லி அணியே ஏலத்தில் எடுத்தது. கடந்த 2024 ஐபிஎல் சீசனில் டெல்லி அணிக்காக 7 சீசன்கள் விளையாடினார்.
ALSO READ: ஒரு சீசனில் அதிக சிக்ஸர்கள்.. ரெக்கார்ட் மேல் ரெக்கார்ட் வைத்த கெய்ல்..!
டிம் சைஃபர்ட் (கொல்கத்தா நைட் ரைடர்ஸ்)
நியூசிலாந்தின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான டிம் சைஃபர்ட், இந்த சீசனில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடவுள்ளார். கடந்த 2026 டி20 உலகக் கோப்பையில் நியூசிலாந்து அணிக்காக டிம் சைஃபர்ட் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஐபிஎல் 2026 மினி ஏலத்தில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி டிம் சைஃபர்ட்-ஐ ரூ.1.50 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது.
குறிப்பிடத்தக்க வகையில், டிம் சைஃபர்ட் ஐபிஎல் 2021 சீசனில் கேகேஆர் அணிக்காக ஒரே ஒரு போட்டியில் மட்டுமே விளையாடி, 2 ரன்கள் எடுத்திருந்தார்.
ராகுல் திரிபாதி (கொல்கத்தா நைட் ரைடர்ஸ்)
ராகுல் திரிபாதி 2026 ஐபிஎல் சீசனுக்காக மீண்டும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) அணியுடனேயே இணைந்துள்ளார். முன்னதாக ஐபிஎல் 2026 மினி ஏலத்தில் அவர் ரூ. 75 லட்சத்திற்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார். கடந்த 2020 மற்றும் 2021 ஆகிய 2 சீசன்களிலும் கொல்கத்தா அணிக்காக ராகுல் திரிபாதி விளையாடி முறையே 230 மற்றும் 397 ரன்களைக் குவித்திருந்தார்.
குவின்டன் டி காக் (மும்பை இந்தியன்ஸ்)
ஐபிஎல் 2026 தொடரில் குவின்டன் டி காக் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடவுள்ளார். ஐபிஎல் வரலாற்றில் 6 வெவ்வேறு அணிகளுக்காக விளையாடியுள்ள டி காக், கடந்த சீசனில் கொல்கத்தா அணிக்காக விளையாடினார்.
இந்த மினி ஏலத்தில், மும்பை இந்தியன்ஸ் அணி டி காக்கை ரூ. 1 கோடிக்கு வாங்கியது.
முன்னதாக, டி காக் 2019, 2020 மற்றும் 2021 ஆகிய சீசன்களில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி முறையே 529, 503 மற்றும் 297 ரன்களை சேர்த்துள்ளார்.