AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

IPL 2026: ஐபிஎல் 2026 தொடக்க விழா நடைபெறாதா..? பிசிசிஐ செயலாளர் விளக்கம்!

IPL 2026 Opening Ceremony: 2026 மார்ச் 28ம் தேதி தொடங்கும் ஐபிஎல் தொடரின் முதல் போட்டிக்கு முன்பு எந்தவிதமான கொண்டாட்டங்களையும் நடத்த வேண்டாம் என பிசிசிஐ முடிவு செய்துள்ளது. இருப்பினும், ஐபிஎல் 2026 தொடருக்கு ஒரு பிரம்மாண்டமான நிறைவு விழாவை நடத்த பிசிசிஐயும், ஐபிஎல் நிர்வாகக் குழுவும் திட்டமிட்டு வருவதாக பிசிசிஐ செயலாளர் தேவாஜித் சாய்கியா தெரிவித்துள்ளார்.

IPL 2026: ஐபிஎல் 2026 தொடக்க விழா நடைபெறாதா..? பிசிசிஐ செயலாளர் விளக்கம்!
ஐபிஎல் 2026 தொடக்க விழா
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 26 Mar 2026 16:00 PM IST

ஐபிஎல் 2026ன் (IPL 2026) முதல் போட்டி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (Royal Challengers Bengaluru) மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே வருகின்ற 2026 மார்ச் 28ம் தேதி நடைபெற உள்ளது. பெங்களூருவில் உள்ள எம்.சின்னசாமி ஸ்டேடியத்தில் இந்திய நேரப்படி இரவு 7:30 மணிக்கு இப்போட்டி தொடங்க இருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் ஐபிஎல் தொடங்கும்போது முதல் நாளில் தொடக்க விழா பிரமாண்டமாக பிசிசிஐ நடத்தும். ஆனால்,  இந்த 2026ம் ஆண்டு ஐபிஎல் தொடக்க விழா நடைபெறாது என பிசிசிஐ செயலாளர் தேவாஜித் சாய்கியா உறுதிப்படுத்தியுள்ளார்.

கடந்த 2025ம் ஆண்டு ஜூன் 4ம் தேதி, ஆர்சிபி அணியின் வெற்றி அணிவகுப்பின் போது எம்.சின்னசாமி ஸ்டேடியத்திற்கு வெளியே ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழந்தனர். மேலும், பலரும் காயமடைந்தனர். இதையடுத்து, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு மரியாதை செலுத்தும் விதமாகவும், அவர்களை நினைவுகூரும் வகையிலும், தொடக்க விழாவை நடத்த வேண்டாம் என பிசிசிஐ முடிவு செய்துள்ளது. கடந்த 2025 ஆண்டு, பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தனது முதல் ஐபிஎல் பட்டத்தை வென்றது குறிப்பிடத்தக்கது.

ALSO READ: 18 ஆண்டுகளை கடந்த ஐபிஎல்.. முறியடிக்க முடியாத அனில் கும்ப்ளேவின் சாதனை!

பிசிசிஐ உறுதி:

2026 மார்ச் 28ம் தேதி தொடங்கும் ஐபிஎல் தொடரின் முதல் போட்டிக்கு முன்பு எந்தவிதமான கொண்டாட்டங்களையும் நடத்த வேண்டாம் என பிசிசிஐ முடிவு செய்துள்ளது. இருப்பினும், ஐபிஎல் 2026 தொடருக்கு ஒரு பிரம்மாண்டமான நிறைவு விழாவை நடத்த பிசிசிஐயும், ஐபிஎல் நிர்வாகக் குழுவும் திட்டமிட்டு வருவதாக பிசிசிஐ செயலாளர் தேவாஜித் சாய்கியா தெரிவித்துள்ளார். இதுகுறித்து டைம்ஸ் ஆஃப் இந்தியாவுக்கு அளித்த பேட்டியில் தேவ்ஜித் சாய்கியா, “கடந்த 2025ம் ஆண்டு ஜூன் 4 அன்று நடந்த துயரச் சம்பவம் காரணமாக, ஐபிஎல் 2026 தொடக்க நாளில் முறையான விழா எதுவும் நடைபெறாது. பிசிசிஐ எந்தவொரு கலாச்சார நிகழ்வையும் ஏற்பாடு செய்யவில்லை” என்றார்.

பிரம்மாண்ட நிறைவு விழா:

ஐபிஎல் இறுதிப் போட்டி நடைபெறும் நாளன்று ஒரு பிரம்மாண்டமான நிறைவு விழாவை நடத்த பிசிசி திட்டமிட்டுள்ளது. ஐபிஎல் 2026 இறுதிப் போட்டி 2026 மே 31ம் தேதி நடைபெறும். 5 மாநில சட்டமன்ற தேர்தல் காரணமாக 10 அணிகள் பங்கேற்கும் ஐபிஎல் 2026 சீசனுக்கு பிசிசிஐ 20 போட்டிகள் கொண்ட அட்டவணையை மட்டுமே இதுவரை அறிவித்துள்ளது.

கடந்த 2025 ஐபிஎல் சீசனின் பிரம்மாண்டமான தொடக்க விழாவில் ஷாருக் கான், ஸ்ரேயா கோஷல், கரண் அவ்லா மற்றும் திஷா பதானி ஆகியோர் பங்கேற்று சிறப்பு நிகழ்ச்சி நடத்தினர்.

ALSO READ: காத்திருக்கும் ரசிகர்கள்! ஐபிஎல் 2026ல் அசத்தப்போகும் 3 கேப்டன்கள் யார்?

ஆர்சிபி – எஸ்ஆர்ஹெச் போட்டியில் மழைக்கு வாய்ப்பா?

2026 மார்ச் 28ம் தேதி ஐபிஎல் 2026 சீசன் தொடங்க இருக்கிறது. போட்டி தொடங்கும் அன்றைய போட்டி நாளில் பெங்களூருவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. வானிலை ஆய்வு மையத்தின்படி, போட்டி தொடங்கும் நாளில் 10 முதல் 15 சதவீதம் மழை பெய்ய வாய்ப்புள்ளது. கடந்த 2026 சீசனில் தங்களது முதல் பட்டத்தை வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, நடப்பு சாம்பியனாக இந்த லீக் தொடரில் பங்கேற்கிறது.

Follow Us