AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

IPL 2026: பேட்டிங்கிற்கு சாதகமான பிட்ச்.. RCB vs SRH போட்டியில் ரன் மழை பொழியுமா?

RCB vs SRH Pitch Report: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் சொந்த ஸ்டேடியமான எம்.சின்னசாமி ஸ்டேடியத்தில் இதுவரை 100 ஐபிஎல் போட்டிகளை நடந்துள்ளது. இதில் முதலில் பேட் செய்த அணி 43 முறையும், சேஸ் செய்த அணி 53 முறையும் வெற்றி பெற்றுள்ளன. இந்த ஸ்டேடியத்தில் அதிகபட்ச தனிநபர் ஸ்கோரை கிறிஸ் கெய்ல் தன்வசம் வைத்துள்ளார்.

IPL 2026: பேட்டிங்கிற்கு சாதகமான பிட்ச்.. RCB vs SRH போட்டியில் ரன் மழை பொழியுமா?
ரஜத் படிதார் Vs இஷான் கிஷன்
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 28 Mar 2026 14:42 PM IST

இந்தியன் பிரீமியர் லீக் 19வது சீசன் (IPL 2026) இன்று அதாவது 2026 மார்ச் 28ம் தேதி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (RCB vs SRH) அணிகளுக்கு இடையேயான போட்டியுடன் தொடங்குகிறது . ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, தங்களது சொந்த ஸ்டேடியமான எம்.சின்னசாமி ஸ்டேடியத்தில் இரவு 7.30 மணிக்கு நடைபெறும் இந்தப் போட்டியில் வெற்றி பெற்று, ஒரு சிறப்பான தொடக்கத்தைப் பெற முயற்சிக்கும். இந்த அணி கடந்த 2025 சீசனில் தனது முதல் சாம்பியன் பட்டத்தை வென்றது. இதற்கிடையில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 2016-ல் தங்களது ஒரே பட்டத்தை வென்றது. தற்போது, ​​ஹைதராபாத் அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் காயம் காரணமாக விளையாடவில்லை. அவருக்குப் பதிலாக இஷான் கிஷன் தற்போது கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்தநிலையில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான இன்றைய போட்டியின் முழுமையான விவரங்களைத் தெரிந்துகொள்வோம்.

ALSO READ: பெங்களூருவில் மழை எச்சரிக்கை.. தடை படுமா RCB vs SRH போட்டி?

எம். சின்னசாமி மைதானத்தின் ஐபிஎல் பதிவுகள்:

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் சொந்த ஸ்டேடியமான எம்.சின்னசாமி ஸ்டேடியத்தில் இதுவரை 100 ஐபிஎல் போட்டிகளை நடந்துள்ளது. இதில் முதலில் பேட் செய்த அணி 43 முறையும், சேஸ் செய்த அணி 53 முறையும் வெற்றி பெற்றுள்ளன. இந்த ஸ்டேடியத்தில் அதிகபட்ச தனிநபர் ஸ்கோரை கிறிஸ் கெய்ல் தன்வசம் வைத்துள்ளார். கடந்த 2013ம் ஆண்டு ஐபிஎல் வரலாற்றிலேயே அதிகபட்ச தனிப்பட்ட ஸ்கோரான 175 ரன்களை புனே வாரியர்ஸுக்கு எதிராக ஆட்டமிழக்காமல் கிறிஸ் கெய்ல் பதிவு செய்துள்ளார்.

எம். சின்னசாமி ஸ்டேடியத்தில் முதல் இன்னிங்ஸின் சராசரி ஸ்கோர் 166 ஆகும். இங்கு எடுக்கப்பட்ட அதிகபட்ச ஐபிஎல் ஸ்கோரான 287-ஐ, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஆர்சிபி அணிக்கு எதிராக எடுத்தது.

எம். சின்னசாமி ஸ்டேடியத்தின் பிட்ச் ரிப்போர்ட்:

எம். சின்னசாமி ஸ்டேடியம் பேட்டிங்கிற்குச் சாதகமான தன்மைக்குப் பெயர் பெற்றது. இன்றும் அதே போன்ற ஆடுகளம் எதிர்பார்க்கப்படுகிறது. குறுகிய பவுண்டரி லைன்கள் பந்துவீச்சாளர்களுக்குச் சவாலாகவும், பேட்ஸ்மேன்களுக்கு உதவியான சூழலாகவும் அமைகின்றன. அதன்படி, டாஸ் வெல்லும் அணியின் கேப்டன் பந்துவீச்சை தேர்வு செய்வார்கள். ஏனெனில் இங்கு சேஸிங் செய்யும் அணிகளே பலமுறை வெற்றி பெற்றுள்ளன. முதலில் பேட்டிங் செய்தால் 200 ரன்கள் கூட பாதுகாப்பானதாக இருக்காது. ஆனால் அது ஒரு நல்ல ஸ்கோராக அமையக்கூடும்.

ALSO READ: ஐபிஎல் 2026 சீசனின் முதல் போட்டி.. பெங்களூரு vs ஹைதராபாத் போட்டியை எங்கு காணலாம்?

கணிக்கப்பட்ட ஆர்சிபி அணியின் விவரம்:

விராட் கோலி , பில் சால்ட், தேவ்தத் படிக்கல், ரஜத் படிதார் (கேப்டன்), டிம் டேவிட், ஜிதேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), ரொமாரியோ ஷெப்பர்ட், க்ருனால் பாண்டியா, ஜேக்கப் டஃபி, மங்கேஷ் யாதவ், புவனேஷ்வர் குமார்.

கணிக்கப்பட்ட எஸ்ஆர்ஹெச் அணியின் விவரம்:

அபிஷேக் சர்மா, டிராவிஸ் ஹெட், இஷான் கிஷன் (கேப்டன்), ஹென்ரிச் கிளாசென் (விக்கெட் கீப்பர்), அனிகேத் வர்மா, லியாம் லிவிங்ஸ்டோன், நிதிஷ் குமார் ரெட்டி, ஹர்ஷ் துபே, ஹர்ஷல் படேல், ஜெய்தேவ் உனத்கட், பிரைடன் கார்சே.

Follow Us