AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

IPL 2026: ஹிந்தியில் வர்ணனையாளராக களமிறங்கும் அஸ்வின்.. வெளியான வர்ணனைக் குழு பட்டியல்..!

IPL 2026 Commentary Panel: ஐபிஎல் 2026 சீசனில் முதல் முறையாக உமேஷ் யாதவ் மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் போன்ற இந்திய வீரர்களும் வர்ணனைப் பெட்டியில் இடம் பெறவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அஸ்வின் கடந்த 2025 சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பெற்றிருந்தார், ஆனால் அவர் 2026 சீசனுக்கு முன்பே கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார்.

IPL 2026: ஹிந்தியில் வர்ணனையாளராக களமிறங்கும் அஸ்வின்.. வெளியான வர்ணனைக் குழு பட்டியல்..!
ரவிச்சந்திரன் அஸ்வின்
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 27 Mar 2026 21:16 PM IST

ஐபிஎல் 2026 (IPL 2026) தொடங்குவதற்கு இன்னும் ஒரே ஒரு நாள் மட்டுமே உள்ளது. அதாவது, இந்த சீசன் 2026 மார்ச் 28ம் தேதியான நாளை முதல் தொடங்குகிறது. அதற்கு ஒரு நாள் முன்னதாக, 2026 மார்ச் 27ம் தேதியான இன்று வரவிருக்கும் தொடருக்கான வர்ணனைக் குழு அறிவிக்கப்பட்டது. இதில் 12 மொழிகளில் 160-க்கும் மேற்பட்டோர் வர்ணனை வழங்க உள்ளனர். எனவே, ரசிகர்கள் எந்தெந்த மொழிகளில் யாருடைய குரல்களைக் கேட்கப் போகிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்வோம். ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சமூக வலைதளங்கள் மூலம் இந்தத் தகவலைப் பகிர்ந்துள்ளது. அதன்படி, வர்ணனைக் குழுவில் 160-க்கும் மேற்பட்டோர் இடம்பெறுவார்கள். கிரிக்கெட் ரசிகர்கள் தமிழ் (Tamil) , இந்தி, ஆங்கிலம், தெலுங்கு, கன்னடம், போஜ்புரி, ஹரியான்வி, மராத்தி, பெங்காலி, குஜராத்தி, பஞ்சாபி மற்றும் மலையாளம் உட்பட 12 மொழிகளில் வர்ணனைகளில் போட்டியை கண்டு ரசிக்கலாம்.

ALSO READ: பெங்களூருவில் மழை எச்சரிக்கை.. தடை படுமா RCB vs SRH போட்டி?

பல முன்னணி வர்ணனையாளர்கள் அனைத்து மொழிகளிலும் வர்ணனை செய்யவுள்ளனர். இம்முறை முதல் முறையாக உமேஷ் யாதவ் மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் போன்ற இந்திய வீரர்களும் வர்ணனைப் பெட்டியில் இடம் பெறவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அஸ்வின் கடந்த 2025 சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பெற்றிருந்தார், ஆனால் அவர் 2026 சீசனுக்கு முன்பே கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார்.

வர்ணனையாளர்கள் மற்றும் தொகுப்பாளர்களின் முழுப் பட்டியல் இங்கே:

ஐபிஎல் 2026க்கான தமிழ் வர்ணனையாளர்கள்

முரளி விஜய், சுப்பிரமணியன் பத்ரிநாத், லட்சுமிபதி பாலாஜி, யோமகேஷ், சடகோபன் ரமேஷ், ஸ்ரீதர், ரஸல் அர்னால்டு, அபினவ் முகுந்த், திரிஷ் காமினி, பாபா அபராஜித், பாபா இந்திரஜித், ஆர்.ஜே.பாலாஜி, நானி, முத்து பிரதீப், அஷ்வந்த் முகுந்தன், பாவ்னா, சமீரா அன்வர், விஷ்ணு ஹரிஹரன், கௌதம் தவமணி,

ஐபிஎல் 2026-க்கான இந்தி வர்ணனையாளர்கள்

ரவிசந்திரன் அஷ்வின், சுரேஷ் ரெய்னா, ஹர்பஜன் சிங், இர்பான் பதான், வீரேந்தர் சேவாக், அனில் கும்ப்ளே, பியூஷ் சாவ்லா, உமேஷ் யாதவ், ஆகாஷ் சோப்ரா, சேதேஷ்வர் புஜாரா, ஆதித்யா தாரே, நவ்ஜோத் சிங் சித்து, சுனில் கவாஸ்கர், சஞ்சய் பங்கர், அஜய் ஜடேஜா, முகமது கைஃப், சபா கரீம், தீப் தாஸ் குப்தா, பதம்ஜீத் செஹ்ராவத், அனந்த் தியாகி, சுனில் தனேஜா

ALSO READ: இல்லாத அதிர்ஷ்டம்! ஐபிஎல்லில் இதுவரை எந்த அணிகள் கோப்பையை வெல்லவில்லை!

ஐபிஎல் 2026-க்கான ஆங்கில வர்ணனையாளர்கள்

ரவி சாஸ்திரி, சுனில் கவாஸ்கர், ஏபி டி வில்லியர்ஸ், டேல் ஸ்டெய்ன், ஃபாஃப் டு பிளெசிஸ், கெவின் பீட்டர்சன், ஆரோன் ஃபின்ச், இயோன் மோர்கன், மைக்கேல் கிளார்க், எம் மெக்லெனகன், தீப் தாஸ் குப்தா, ஹர்ஷா போக்லே, இயன் பிஷப், சைமன் டூலி, டேனி மோரிசன், ஸ்வான், மபாங்வா, காட்டிச், முரளி கார்த்திக், டபிள்யூ.வி. ராமன், அஞ்சும், அபினவ் முகுந்த், வில்கின்ஸ், கேட்டி மார்ட்டின், ரவுனக் கபூர்

 

Follow Us