நீங்கள் நாய்கள் மீது பிரியமானவர்கள் என்று சொல்ல தகுதியற்றவர்கள் – நடிகை சதா
Actress Sadaa: நடிகையும் விலங்குகள் நல ஆர்வளருமான நடிகை சதா தொடர்ந்து விலங்குகள் நலன் குறித்து தனது சமூக வலைதளப் பக்கங்களில் பேசி வருகின்றார். இந்த நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சமீபத்தில் தெரு நாய்கள் குறித்து நீதிமன்றம் அளித்த உத்தரவை விமர்சித்து பேசியுள்ளார்.

தெலுங்கு சினிமாவில் கடந்த 2002-ம் ஆண்டு வெளியான ஜெயம் படத்தின் மூலம் சினிமாவில் நடிகையாக அறிமுகம் ஆனார் நடிகை சதா (Actress Sadaa). இந்தப் படத்தை தேஜா தயாரித்து இயக்கி இருந்தார். மேலும் இந்தப் படத்தில் நடிகர் நித்தின் நாயகனாக நடித்து இருந்த இந்தப் படத்தில் நடிகர் கோபிசந்த் வில்லனாக நடித்து இருந்தார். தொடர்ந்து தெலுங்கு படங்களில் நடித்த நடிகை சதா தெலுங்கு சினிமாவில் இவர் நடிப்பில் வெளியான ஜெயம் படத்தின் தமிழ் ரீமேக்கான ஜெயம் படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே அறிமுகம் ஆனார். இந்தப் படத்தில் தான் நடிகர் ரவி மோகன் நாயகனாக அறிமுகம் ஆகி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து தமிழ் சினிமாவில் நடிகை சதா நடிப்பில் எதிரி, அந்நியன், பிரியசகி, திருப்பதி, நான் அவள் அது, உன்னாலே உன்னாலே, புளி வேஷம், எலி, டார்ச் லைட் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
மேலும் இறுதியாக மத கஜ ராஜா படத்தில் ஒரு கேமியோ ரோலில் நடித்து இருந்தார். இந்தப் படம் கடந்த ஜனவரி மாதம் திரையரங்களில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. தற்போது நடிகை சதா படங்களில் நடிப்பது குறைந்துவிட்டது. அவர் வனவிலங்கு புகைப்படம் எடுத்தலை மிகுந்த ஆர்வத்துடன் செய்து வருகிறார். இது தொடர்பான பல புகைப்படங்களையும் வீடியோக்களையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகை சதா தொடர்ந்து பதிவிட்டு வருகிறார். இவரின் போட்டோகிராபி திறமையை ரசிகர்கள் பாராட்டியும் வருகின்றனர்.
அழுது புழம்பும் நடிகை சதா… இணையத்தில் கவனம் பெறும் வீடியோ:
இந்த நிலையில் நடிகை சதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அழுதுகொண்டே வெளியிட்டுள்ள வீடியோ தற்போது ரசிகரக்ளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி சமீபத்தில் டெல்லியில் 6 வயது சிறுமி தெரு நாய் கடித்து உயிரிழந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் ஒரு தீர்ப்பு ஒன்றை வழங்கி இருந்தது. அந்தத் தீர்ப்பில் டெல்லி மாநகரில் திரியும் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட தெரு நாய்களைப் பிடித்து அவற்றிற்கு கருத்தடை ஊசி போட்டு காப்பகங்களில் அடைக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்து இருந்தனர்.
இதற்கு பல விலங்குகள் நல ஆர்வளர்கள் தங்களது எதிர்ப்பை தொடர்ந்து பதிவு செய்து வருகின்றனர். அந்த வரிசையில் நடிகை சதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியுள்ளதாவது, நான் உட்பட பலர் தெருக்களில் இருக்கும் நாய்களுக்கு எங்களால் முடிந்த அளவில் பணம் செலவு செய்து உணவுகளை வழங்கி வருகிறோம். ஆனால் அது போதுமானதாக இல்லை.
Also Read… திரைத்துறையில் 50 ஆண்டுகளை நிறைவு செய்த ரஜினிகாந்த்… வாழ்த்தும் பிரபலங்கள்!
அனைவரும் தங்கள் வீட்டில் அழகான நாய் இருக்க வேண்டும் என்று நினைத்து காசு கொடுத்து விலை உயர்ந்த நாய்களை வாங்கி வளர்க்கிறார்கள். அவர்கள் எல்லாம் தங்களை விலங்குகள் நல ஆர்வளர்கள் அல்லது டாக் லவ்வர்ஸ் என்று கூற தகுதியற்றவர்கள். மேலும் தெருக்களில் உள்ள நாய்களுக்கு உரிய கருத்தடை ஊசியைப் போடத் தவறியது மாநகராட்சியின் தவறு. தற்போது பல நாய்கள் உயிரை விடபோகின்றன என்று அழுதுக்கொண்டே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இது தற்போது வைரபாகி வருகின்றது.
நடிகை சதா வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் பதிவு:
View this post on Instagram
Also Read… ஒன்றாம் வகுப்பில் இருந்து இப்போ வரைக்கும்… வைரலாகும் கார்த்திக் சுப்பராஜின் இன்ஸ்டாகிராம் பதிவு