Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

திரைத்துறையில் 50 ஆண்டுகளை நிறைவு செய்த ரஜினிகாந்த்… வாழ்த்தும் பிரபலங்கள்!

50 Years Of Rajinikanth In Cinema: உலக சினிமா ரசிகர்களால் சூப்பர் ஸ்டார் என்று அன்புடன் அழைக்கப்படுபவர் நடிகர் ரஜினிகாந்த். இவர் சினிமாவில் நடிகராக அறிமுகம் ஆகி தற்போது 50 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதற்காக நடிகர் ரஜினிகாந்திற்கு ரசிகர்களுக் பிரபலங்களும் தொடர்ந்து தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

திரைத்துறையில் 50 ஆண்டுகளை நிறைவு செய்த ரஜினிகாந்த்… வாழ்த்தும் பிரபலங்கள்!
ரஜினிகாந்த்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 13 Aug 2025 19:11 PM

இயக்குநர் கே. பாலசந்தர் இயக்கத்தில் வெளியான அபூர்வ ராகங்கள் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகம் ஆனவர் நடிகர் ரஜினிகாந்த் (Rajinikanth). இந்தப் படத்தில் சின்னதாக ஒரு கதாப்பாத்திரத்தில் நடித்த இவர் தொடர்ந்து சினிமாவில் அறிமுகம் ஆன ஆரம்ப காலக்கட்டத்தில் வில்லனாக நடித்து வந்தார். அதனைத் தொடர்ந்து பைரவி என்ற படத்தில் இருந்துதான் நடிகர் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவில் நாயகனாக நடிக்கத் தொடங்கினார். பின்பு பல ஹிட் படங்களில் நடித்து நடிகர் ரஜினிகாந்தை ரசிகர்கள் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கத் தொடங்கினர். நீ நடந்தால் நடை அழகு, நீ சிரித்தால் சிரிப்பழகு என்ற பாடலுக்கு ஏற்ப திரையரங்குகளில் ரஜினிகாந்தின் ஒவ்வொரு அசைவையும் ஆராவாரம் செய்து ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

இந்த நிலையில் அபூர்வ ராகம் படம் திரையரங்குகளில் கடந்த 1975-ம் ஆண்டு வெளியாகி உள்ளது. அதன்படி தற்போது நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சினிமாவில் நடிகாராக அறிமுகம் ஆகி தற்போது 50 வருடங்கள் நிறைவு செய்த்துள்ளார். இதற்கு தமிழ் சினிமா பிரபலங்கள் மட்டும் இன்றி பான் இந்திய அளவில் உள்ள சினிமா பிரபலங்கள் அனைவரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

நடிகர் ரஜினிகாந்திற்கு வாழ்த்து தெரிவித்துள்ள நெல்சன் திலீப்குமார்:

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து ஜெயிலர் என்ற சூப்பர் ஹிட் படத்தை முன்னதாக இயக்கி இருந்தார். தற்போது இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி வருகிறார். நடிகர் ரஜினிகாந்த் கூலி படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்ததும் ஜெயிலர் 2 படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது இயக்குநர் நெல்சன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவு இணையத்தில் வைரலாகி வருகின்றது.

இயக்குநர் நெல்சன் திலீப்குமார் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவு:

நடிகர் சூரி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவு:

நடிகர் சூரி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் இணைந்து அண்ணாத்த படத்தில் நடித்து இருந்தார். அந்தப் படத்தில் ரஜினிகாந்த் வீட்டில் வேலை செய்யும் நபராகவும் ரஜினிகாந்திற்கு மிகவும் நெருக்கமான நபராகவும் நடிகர் சூரி நடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

Also Read… த்ரிஷாவின் சினிமா வளர்ச்சி குறித்து பெருமையாக பேசிய சிம்ரன்!

நடிகர் மோகன்லால் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவு:

மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் நடிகர் மோகன்லால் நடிகர் ரஜினிகாந்திற்கு வாழ்த்து தெரிவித்து பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில், ஐம்பது வருடங்களாக திரையில் இணையற்ற கவர்ச்சி, அர்ப்பணிப்பு மற்றும் மாயாஜாலம் இந்த மகத்தான மைல்கல்லுக்கு ஒரே ஒரு ரஜினிகாந்திற்கு வாழ்த்துகள் என்று தெரிவித்து இருந்தார்.

நடிகர் சூர்யா வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவு:

நடிகர் ரஜினிகாந்த் சார் 50 ஆண்டுகள் சினிமாவில் நிறைவு செய்ததற்கு என் மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் கூலி படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மற்றும் படக்குழுவிற்கு வாழ்த்துகள் என்று  அந்தப் பதிவில் தெரிவித்து இருந்தார்.

Also Read… சினிமாவில் 50 ஆண்டுகளை நிறைவு செய்த ரஜினிகாந்த் – சிறப்பு அனிமேஷன் டைட்டில் கார்டை உருவாக்கியது கூலி படக்குழு