கருப்பு படத்தின் கதை தளபதி விஜய்காக எழுதியதா? ஆர்.ஜே.பாலாஜி ஓபன் டாக்

RJ Balaji Talks About Karuppu Movie : தமிழ் சினிமாவில் அடுத்ததாக ரசிகர்களிடையே அதிக அளிவில் எதிர்பார்ப்பை தூண்டியுள்ள படம் கருப்பு. இந்தப் படத்தின் வெளியீட்டிற்காக மக்கள் காத்திருக்கும் நிலையில் படத்தின் இயக்குநர் சமீபத்தில் பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

கருப்பு படத்தின் கதை தளபதி விஜய்காக எழுதியதா? ஆர்.ஜே.பாலாஜி ஓபன் டாக்

ஆர்.ஜே.பாலாஜி

Updated On: 

23 Feb 2026 10:53 AM

 IST

கோலிவுட் சினிமாவில் அடுத்ததாக வெளியாக உள்ள பெரியப் படம் என்றால் அது நடிகர் சூர்யாவின் நடிப்பில் உருவாகி உள்ள கருப்பு படம் ஆகும். இந்தப் படம் கடந்த 2025-ம் ஆண்டிலேயே வெளியாகும் என்று ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் காத்திருந்த நிலையில் ஒரு சில காரணங்களால் படத்தின் வெளியீடு தொடர்ந்து தள்ளிப்போனது. அதனைத் தொடர்ந்து படம் இந்த 2026-ம் ஆண்டில் நிச்சயமாக வெளியாகும் என்று அவரது ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இந்த நிலையில் கருப்பு படத்தின் பணிகள் முடிவடைந்து தற்போது படம் வருகின்ற ஏப்ரல் மாதம் திரையரங்குகளில் வெளியாகும் என்று சினிமா வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகின்றது. இந்தப் படத்தில் நடிகர் சூர்யா நாயகனாக நடித்துள்ள நிலையில் அவருக்கு ஜோடியாக நடிகை த்ரிஷா கிருஷ்ணன் நடித்துள்ளார்.

இவர்களுடன் இணைந்து பலர் இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். மேலும் இந்த கருப்பு படத்திற்கு இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைத்துள்ள நிலையில் படத்தில் இருந்து பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்தது. மேலும் படத்தின் டீசரும் நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில் சமீபத்தில் ஆர்.ஜே.பாலாஜி விழா ஒன்றில் கலந்துகொண்டு பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

கருப்பு படத்தின் கதை தளபதி விஜய்காக எழுதியதா?

முதலில் இந்தக் கதையை தளபதி விஜய்க்காக எழுதினீர்களா? பிறகு த்ரிஷாவுக்காக மாற்றினீர்களா? பின்னர் சூர்யாவுக்காக மாற்றி எழுதியீர்களா? அல்லது சூர்யாவுக்காகவே எழுதப்பட்டதா என்று ஆர்.ஜே.பாலாஜியிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த ஆர்.ஜே. பாலாஜி கூறியதாவது, இந்தக் கதையை ஆகஸ்ட் 21, 2023 அன்று எழுத ஆரம்பித்தேன். ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கும் ஒவ்வொரு கதை வந்தது, வதந்திகள் வதந்திகளாகவே இருக்கட்டும். சூர்யா சாரிடம் கதையைச் சொல்லச் சென்றபோது, ​​அவரை மனதில் வைத்துத்தான் எழுதினேன். நான் அதை வெறும் 40 நிமிடங்கள் மட்டுமே சொன்னேன், ஒரு மாதத்திற்குள், நாங்கள் படத்தை தொடங்கினோம் என்றும் ஆர்.ஜே.பாலாஜி தெரிவித்து இருந்தார்.

Also Read… 70வது தென்னிந்திய ஃபிலிம் ஃபேர் விருது விழாவில் வெற்றிப் பெற்ற தமிழ் பிரபலங்கள் யார் யார்? லிஸ்ட் இதோ

இணையத்தில் வைரலாகும் ஆர்.ஜே.பாலாஜியின் பேச்சு:

Also Read… 13 வருசம் ஆகியிருக்கு முதல் வரிசைக்கு வர… ஃபிலிம் ஃபேர் விருது விழாவில் சிவகார்த்திகேயனின் நெகிழ்ச்சிப் பேச்சு

Follow Us
Related Stories
Kayadu Lohar: ஐஆம் கேம் படம் முற்றிலும் வித்தியாசமானது.. நிச்சயம் அனைவர்க்கும் பிடிக்கும் – கயாடு லோஹர் பேச்சு!
Hi Movie: நயன்தாரா – கவின் நடிக்கும் ஹாய் பட ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் எப்போது? தமிழ் புத்தாண்டை முன்னிட்டு படக்குழு அறிவிப்பு!
அவன் குறுக்க மட்டும் போயிடாதீங்க சார் – 4 ஆண்டுகளை நிறைவு செய்தது கேஜிஎஃப் சாப்டர் 2 படம்
சரி என்று தெரியாமல் தவறு என்று புரியாமல் எதில் வந்து சேர்ந்தேன் நான் எதிர்பார்க்கவில்லை நான் – 19 ஆண்டுகளை நிறைவு செய்தது உன்னாலே உன்னாலே படம்
GV Prakash: ஜோ பட இயக்குநரின் புது படத்தில் இணைந்த ஜி.வி. பிரகாஷ்.. நடிகை யார் தெரியுமா?
புத்தாண்டை முன்னிட்டு குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்ட ஹரிஷ் கல்யாண்
வரலாறு படைத்துள்ளீர்கள் - ஆர்தமிஸ் விண்வெளி பயணக்குழுவை பாராட்டிய டிரம்ப்
ஹோர்முஸ் நீரிணை வழியாக செல்லும் கப்பல்களுக்கு கட்டணம் விதிக்கத் திட்டம்!!
நடுவானில் விமானத்தின் 2 எஞ்சின்களும் செயலிழப்பு.. துரிதமாக செயல்பட்டு 69 பேரை காப்பாற்றிய பைலட்!
நடிகை ஹன்சிகா தனது மைத்துனி மீது கொடுத்த புகார்