RJ Balaji : எனது பெயரை RJB- னு போடச் சொன்னதே அவர்தான்.. இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி ஓபன் டாக்!
RJ Balaji About Urvashis Advice : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் மற்றும் இயக்குநராக இருந்து வருபவர் ஆர்.ஜே. பாலாஜி. இவர் சூர்யாவின் கருப்பு படத்தையும் உருவாக்கி வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் அப்படத்தின் டைட்டில் ரிலீஸ் போஸ்டரில் RJB என்று பெயர் இடம் பெற்றிருந்த நிலையில், அது குறித்து விளக்கம் கொடுத்துள்ளார்.

இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி (RJ Balaji) ஆரம்பத்தில் சினிமாவில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடிக்க தொடங்கினார். இவரின் நடிப்பில் பல படங்கள் வெளியாகி சூப்பர் ஹிட்டாகியிருக்கிறது. நடிகராக இருந்த இவர் கடந்த 2020ம் ஆண்டு வெளியான மூக்குத்தி அம்மன் (Mookuthi Amman) என்ற படத்தை இயக்கி இயக்குநராக அறிமுகமானார். இந்த படத்தில் முன்னணி கதாநாயகியாக நடிகை நயன்தாரா (Nayanthara) நடித்திருந்தார். இந்த திரைப்படமானது கொரோனா காலத்தில் நேரடியாக ஓடிடியில் இப்படம் வெளியாகியிருந்தது. இப்படமானது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று ஹிட்டானது.
அதை தொடர்ந்த வீட்டுல விசேஷம் என மற்றொரு படத்தையும் இயக்கியிருந்தார். இப்படமும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. இதை தொடர்ந்து தனது இயக்கத்தில் உருவாகும் 3வது படத்தில் சூர்யாவுடன் (Suriya) இணைந்தார். கருப்பு (Karuppu) என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் டைட்டில் போஸ்டர், கடந்த 2025, ஜூன் 20ம் தேதி ஆர்.ஜே. பாலாஜியின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியானது. இந்த போஸ்டரில் ஆர்.ஜே. பாலாஜியின் பெயர் RJB என்று குறிப்பிடப்பட்டிருந்தது .




இதைப் பற்றிய தகவல்கள் இணையதளங்களில் வைரலாகி வந்தது. இந்நிலையில். அவர் முன்னதாக பேசியிருந்த நேர்காணல் ஒன்றில் அந்த பெயர் மாற்றம் பற்றி கூறியிருக்கிறார். அவர் வேறு யாருமில்லை நடிகை ஊர்வசிதான் (Urvashi). மேலும் ஆர்.ஜே. பாலாஜி சொன்னதை பற்றி விரிவாக பார்க்கலாம்.
RJB என பெயரை அறிவுறுத்தியவர் பற்றி ஆர்.ஜே. பாலாஜி பேச்சு :
அந்த நேர்காணலில் கலந்துகொண்ட ஆர்.ஜே. பாலாஜி, “ஊர்வசி மேடம் எனக்குக் கால் பண்ணி, இனி நீ ஆர்.ஜே. பாலாஜினு டைட்டில் கார்டில் பெயர் போடுவதற்கு பதிலாக, RJB என்று உனது பெயரைப் போடு என்று என்னிடம் கூறினார். ஏனென்றால் அவர் எல்லா பெரிய நடிகர்கள் மட்டும் பிரபலங்களைப் பற்றிக் கூறி, பார் அவர்களுக்கெல்லாம் மூன்று எழுத்துதான். அதனால் உனது பெயரையும் RJB என்று படத்தில் இனி பயன்படுத்து என ஊர்வசி மேடம் என்னிடம் கூறினார்.
ஆனால் எனக்குக் கூச்சமாக இருக்கிறது, ஊர்வசி மேடம் சொன்னது சரியாகத்தான் இருக்கிறது. ஆனால் நான் பண்ணவா, வேண்டாமா என யோசித்தேன். ஆனால் ஊர்வசி மேடம் சொன்னதன் காரணமாக எனக்கு ஆர்ஜேபி என்றே வைக்கத் தோன்றியது என இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி ஓபனாக பேசியிருந்தார்.
இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி வெளியிட்ட கருப்பு பட அப்டேட் பதிவு :
Thank you ❤️ #Karuppu 🔥 pic.twitter.com/ODpNxq54f8
— RJ Balaji (@RJ_Balaji) June 21, 2025
கருப்பு திரைப்படம் :
நடிகர் சூர்யாவின் முன்னணி நடிப்பில் இந்த கருப்பு திரைப்படம் உருவாகியிருக்கிறது. இந்த படமானது ஆரம்பத்தில் சூர்யா 45 என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த படத்தை ஆர்.ஜே. பாலாஜி இயக்க, திரிஷா சூர்யாவிற்கு ஜோடியாக நடித்துள்ளார். இந்த படமானது கிராமம் மற்றும் கமர்ஷியல் திரைப்படமாக உருவாகிவருகிறது. இப்படத்தின் ஷூட்டிங் முழுமையாக முடிந்ததாகக் கூறப்படும் நிலையில், இந்த 2025ம் ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.