Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

இது வேறலெவல் ட்விஸ்டா இருக்கே… இந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பெண் போட்டியாளர்?

Bigg Boss Tamil Season 9: பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி தொடங்கியதில் இருந்து தற்போதுவரை எவிக்‌ஷனின் இரண்டு பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். இந்த வாரம் டபுள் எவிக்‌ஷன் இருக்கும் என்று எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் எந்த போட்டியாளர் வெளியேறியுள்ளார் என்பது குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளது.

இது வேறலெவல் ட்விஸ்டா இருக்கே… இந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பெண் போட்டியாளர்?
பிக்பாஸ்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 25 Oct 2025 15:22 PM IST

பிக்பாஸ் தமிழ் சீசன் 9 (Bigg Boss Tamil Season 9) நிகழ்ச்சி தொடங்கி தற்போது மூன்று வாரங்கள் நிறைவடைய உள்ளது. இந்த நிகழ்ச்சி தொடங்கியதில் இருந்தே பல சர்ச்சைகளை சந்தித்து வருகின்றது. பிக்பாஸ் தமிழ் சீசன் 1 நிகழ்ச்சி தொடங்கியதில் இருந்தே தொடர்ந்து அங்கு இருக்கும் போட்டியாளர்களிடையே சண்டைகள் வருவது வழக்கமான ஒன்றுதான். ஆனால் இந்த சீசனில் நிகழ்ச்சி தொடங்கிய முதல் நாள் இரவே வீட்டில் அனைவரும் செட்ட்லிலாகிக்கொண்டிருக்கும் போதே சண்டைகள் வெடித்தது. தொடர்ந்து அந்த சண்டை அதிகரித்துக்கொண்டேதான் இருக்கிறது. அதன்படி முதல் வாரம் முடிவதற்கு முன்பாகவே வீட்டில் உள்ள மற்றப் போட்டியாளர்களின் செயல்கள் தனக்குப் பிடிக்கவில்லை என்றும் இனிமேல் என்னால் பிக்பாஸ் வீட்டிற்குள் இருக்க முடியாது என்று கூறி நந்தினி போட்டியில் இருந்து விலகி பிக்பாஸ் வீட்டை விட்டு சென்றுவிட்டார்.

மொத்தம் 20 போட்டியாளர்களுடன் தொடங்கிய பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி முதல் வாரம் முடிவதற்கு முன்பாகவே 19 போட்டியாளர்களாம மாறியது. ஒருவர் நிகழ்ச்சியை விட்டு வெளியேறியதால் முதல் வாரம் பிக்பாஸ் வீட்டில் எவிக்‌ஷன் இருக்காது என்று அனைவரும் நினைத்துக்கொண்டிருந்த நிலையில் எதிர்பாராததை எதிர்பாருங்கள் என்பது போல முதல் வாரம் எவிக்‌ஷன் இருக்கிறது என்று கூறிய விஜய் சேதுபதி அந்த வாரம் நாமினேஷனில் இருந்து குறைவான வாக்குகளைப் பெற்ற இயக்குநர் பிரவின் காந்தி பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்படுகிறார் என்று அறிவித்தார். அதனைத் தொடர்ந்து கடந்த இரண்டாவது வாரமும் பிக்பாஸில் குறைவான வாக்குகளைப் பெற்ற அப்சரா பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார்.

பிக்பாஸில் இருந்து மூன்றாவதாக வெளியேறிய போட்டியாளர் யார் தெரியுமா?

இந்த நிலையில் இந்த பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியின் மூன்றாவது வாரத்திற்கான நாமினேஷனில் வினோத், ரம்யா ஜோ, துஷார், வியான, அரோரா, ஆதிரை, பிரவீன், சுபிக்‌ஷா மற்றும் கலையரசன் என 9 பேர் நாமினேட் செய்யப்பட்டு இருந்தனர். இதில் யார் வெளியேறுவார்கள் என்ற எதிர்பார்ப்பு வீட்டில் உள்ள போட்டியாளர்களைப் போல வெளியே இருந்த மக்களுக்கும் இருந்தது. இந்த நிலையில் இந்த மூன்றாவது வாரம் பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியை விட்டு குறைவான வாக்குகள் பெற்ற ஆதிரை வெளியேறுவதாக தகவல்கள் கசிந்துள்ளது.

Also Read… பரியேறும் பெருமாள் படத்திற்கு பிறகு மாரி செல்வராஜின் சிறந்த படைப்பு பைசன் – இயக்குநர் சேரன்

பிக்பாஸ் நிகழ்ச்சி குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… ஸ்கூல் படிக்கும்போதே துருவ் விக்ரமிற்கு வந்த சினிமா வாய்ப்பு… சூப்பர் ஹிட் படத்திற்கு நோ சொன்ன விக்ரம்!