Ajith Kumar Tattoo: வலது மார்பில் பகவதி அம்மன்.. அஜித் குமாரின் புதிய டாட்டூ வைரல்..!
Ajithkumar at Palakkad Temple: நடிகர் அஜித் குமார் தனது வலது பக்க மார்பில் டாட்டூ குத்திக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வேகமாக வைரலாகி வருகிறது. குட் பேட் அக்லி படத்தை தொடர்ந்து நடிகர் அஜித் குமார் மீண்டும் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் படத்தில் நடிக்கவுள்ளார். இந்த திரைப்படம் முழு கமர்சியல் திரைப்படமாக இருக்கும் என்று ஆதிக் ரவிச்சந்திரன் தெரிவித்திருந்தார்.
நடிப்பில் இருந்து கொஞ்ச நாளாக விலகியுள்ள நடிகர் அஜித் குமார் (Actor Ajith Kumar) தற்போது கார் ரேஸில் கவனம் செலுத்தி வருகிறார். சமீபத்தில் கூட நடிகர் அஜித் குமார் ஸ்பெயினின் அண்டலூசியாவில் நடந்த கார் ரேஸின்போது மஹிந்திரா ஃபார்முலா E ஜெனரல் 2 (Mahindra Formula E Gen 2) காரை பயன்படுத்தினார். இந்தநிலையில், நடிகர் அஜித் குமார் சமீபத்தில் தனது குடும்பத்தினருடன் கோயிலுக்கு சென்று புகைப்படம் எடுத்து கொண்டார். அந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலானது மட்டுமின்றி, அஜித் குமாரின் தனிப்பட்ட ஒரு விஷயத்தை கவனித்து அதை கொண்டும் விவாதித்து வருகின்றனர்.
ALSO READ: சூர்யா 46 படத்தின் இசை குறித்து கேள்வி எழுப்பிய ரசிகர்… மாஸான அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ் குமார்!




அஜித் குமாரிடம் ரசிகர்கள் கவனித்தது என்ன..?
நடிகர் அஜித் குமார் தனது வலது பக்க மார்பில் டாட்டூ குத்திக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வேகமாக வைரலாகி வருகிறது. குட் பேட் அக்லி படத்தை தொடர்ந்து நடிகர் அஜித் குமார் மீண்டும் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் படத்தில் நடிக்கவுள்ளார். இந்த திரைப்படம் முழு கமர்சியல் திரைப்படமாக இருக்கும் என்று ஆதிக் ரவிச்சந்திரன் தெரிவித்திருந்தார். இந்த படத்தின் ப்ரீ புரோடக்ஷன் பணிகள் தற்போது வேகமாக நடைபெற்று வரும் சூழலில், நடிகர் அஜித் குமார் பாலக்காட்டில் உள்ள பகவதியம்மன் கோயிலில் தனது குடும்பத்தினருடன் தரிசனம் செய்தார். இந்த புகைப்படத்தை ஏகே ரசிகர்கள் வழக்கம்போல் சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் செய்தபோது, வித்தியாசமான டாட்டூ ஒன்றை நடிகர் அஜித் குமார் வலது பக்க மார்பில் ரசிகர்கள் கண்டனர்.
தெய்வத்தின் புகைப்படம் என்றாலும், என்ன கடவுள் என்று தெரியாமல் பலரும் இதுகுறித்து சமூக வலைதளஙக்ளில் தேட தொடங்கினர். அப்போதுதான், இந்த டாட்டூவில் இடம்பெற்றிருந்த கடவுள் நடிகர் அஜித் குமாரின் குல தெய்வமான பகவதியம்மன் என்பது தெரிய வந்தது.
ALSO READ: மமிதா பைஜுவா இது? இணையத்தில் வைரலாகும் பழைய வீடியோ!
நடிகர் அஜித் குமாரின் குல தெய்வம் எங்கு உள்ளது..?
Ajith Kumar Sir and Family in Kerala temple…🤩🤩
Ajith Kumar Sir with Shiva Tattoo…🤩🤩
Ajith Kumar Sir is a proud Sanatani Hindu Actor…🤩🤩#AK64 #Bollywood #AjithKumar #AK #Kollywood #Tollywood pic.twitter.com/tIvDY99ifD
— Proud Indian (@proudindian_kl) October 24, 2025
நடிகர் அஜித் குமாரின் குல தெய்வம் ஊட்டுகுளங்கரா பகவதி அம்மன் கேரளாவின் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள பெருவெம்பா கிராமத்தில் அமைந்துள்ளது. இங்கு நடிகர் அஜித் குமார் குறைந்தது வருடத்திற்கு ஒரு முறை சென்று வருவார் என்றும், சமீப காலமாக அடிக்கடி சென்று வருவதாகவும் கோயில் நிர்வாகம் தெரிவித்தது. இருப்பினும், சிலர் இதை சிவன் என்று தெரிவித்து வருகின்றனர்.