எப்படி இருந்த என் மனசு அடி இப்படி மாறிப் போகிறது உன் கண்களில் என்ன காந்தம் இருக்கிறதா? 18 ஆண்டுகளை நிறைவு செய்தது சந்தோஷ் சுப்ரமணியம் படம்
18 Years Of Santhosh Subramaniam | நடிகர் ரவி மோகன் நடிப்பில் முன்னதாக திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றப் படம் சந்தோஷ் சுப்ரமணியம். இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி இன்றுடன் 18 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளதை படக்குழுவினர் கொண்டாடி வருகின்றனர்.

சந்தோஷ் சுப்ரமணியம்
தமிழ் சினிமாவில் கடந்த ஏப்ரல் மாதம் 11-ம் தேதி 2008-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான படம் சந்தோஷ் சுப்ரமணியம். இந்தப் படத்தை இயக்குநர் மோகன் ராஜா எழுதி இயக்கி இருந்தார். இந்த சந்தோஷ் சுப்ரமணியம் படத்தில் நடிகர் ரவி மோகன் நாயகனாக நடித்து இருந்த நிலையில் நடிகை ஜெனிலியா நாயகியாக நடித்து இருந்தார். மேலும் இந்தப் படத்திற்கு பிறகு ஜெனிலியாவிற்கு தென்னிந்திய சினிமாவில் அதிக அளவில் பிரபலம் கிடைத்தது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தில் இவர்களுடன் இணைந்து நடிகர்கள் பிரகாஷ் ராஜ், பிரேம் ஜி, சந்தானம், ஸ்ரீநாத், சத்யன், கௌசல்யா, கீதா, கிராத், சடகோப்பன் ரமேஷ், எம்.எஸ்.பாஸ்கர், விஜயகுமார், சாயாஜி ஷிண்டே, மாணிக்க விநாயகம், மனோபாலா, புஷ்பவனம் குப்புசாமி, ரவிராஜ், அனு ஹாசன், செவ்வாலை ராசு, நீலிமா ராணி, தேசிக ஸ்ரீ, சத்திய கிருஷ்ணன் ஆகியோர் இணைந்து நடித்து இருந்தனர்.
ரொமாண்டிக் காமெடி பாணியில் உருவாகி இருந்த இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் தேதி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து இருந்த நிலையில் படத்தைப் போல பாடல்களும் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
18 ஆண்டுகளை நிறைவு செய்தது சந்தோஷ் சுப்ரமணியம் படம்:
தமிழ் சினிமாவில் வெளியான இந்தப் படம் ஒரு கண்டிப்பான அப்பாவிற்கு மகனாக பிறந்து தனது சொந்த விருப்ப வெறுப்புகள் எதையும் வெளிப்படுத்தாமல் வாழும் பிள்ளை எப்படி எல்லாம் வாழ்க்கையை அனுகிறான் என்பதையும் அப்படி இருக்கும் ஒரு இளைஞனுக்கு காதல் ஏற்படும் போது அது அவனை எப்படி மாற்றுகிறது என்பதையும் இந்தப் படம் வெளிப்படையாக காட்டி இருந்தது. ஏஜிஎஸ் எண்டர்டெய்ன்மெண்ட் சார்பாக தயாரிப்பாளர்கள் கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ்.கணேஷ் மற்றும் கல்பாத்தி எஸ். சுரேஷ் ஆகியோர் இணைந்து தயாரித்து இருந்த நிலையில் படம் இன்றுடன் 18 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இதனை கொண்டாடும் வகையில் படக்குழு போஸ்டர் வெளியிட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
Also Read… அய்யனார் துணை சீரியலில்.. சோழனாக நடிக்க அரவிந்த் வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா?
சந்தோஷ் சுப்ரமணியம் படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
18 Years of Love, Laughter & Lessons #SantoshSubramaniam ❤️#KalpathiSAghoram#KalpathiSGanesh#KalpathiSSuresh@archanakalpathi @aishkalpathi
.@iam_RaviMohan @geneliad @prakashraaj @ThisIsDSP @Ags_production pic.twitter.com/unwVhSziu9— AGS Entertainment (@Ags_production) April 11, 2026
Also Read… ஓடிடியில் வெளியாகியுள்ள தாய் கிழவி படம் எப்படி இருக்கு? விமர்சனம் இதோ