Rashmika Mandanna: திருமணமாகி ஒரு மாதம் ஓவர்.. ஸ்பெஷல் பதிவை வெளியிட்ட ராஷ்மிகா மந்தனா!
Rashmika Mandanna Instagram Post: பான் இந்திய பிரபல கதாநாயகியாக கலக்கிவருபவர் ராஷ்மிகா மந்தனா. இவர் தனது நீண்ட நாள் காதலரான நடிகர் விஜய் தேவரகொண்டாவை கடந்த 2026 பிப்ரவரி மாதத்தில் திருமணம் செய்துகொண்டிருந்தார். இவர்களின் திருமண முடிந்து, ஒரு மாதமான நிலையில் அது குறித்து ஸ்பெஷல் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ராஷ்மிகா மந்தனா மற்றும் விஜய் தேவரகொண்டா
பிரபல கதாநாயகியாக கோலிவுட் முதல் பாலிவுட் வரை இருந்துவருபவர் ராஷ்மிகா மந்தனா (Rashmika Mandanna). இவரின் நடிப்பில் தொடர்ந்து தெலுங்கு, தமிழ் மற்றும் இந்தி போன்ற மொழிகளில் தொடர்ந்து திரைப்படங்கள் தயாராகிவருகிறது. அந்த விதத்தில் இவர் லீட் கதாநாயகியாக நடித்துவரும் படம்தான் மைசா (Myssa). அந்த வகையில் நடிகை ராஷ்மிகா மந்தனா, கடந்த 2026 பிப்ரவரி 26ம் தேதியில், தனது நண்பரும் நீண்டநாள் காதலனான நடிகர் விஜய் தேவரகொண்டாவை (Vijay Deverakonda) திருமணம் செய்துகொண்டார். இவர்கள் டேட்டிங் செய்துவருவதாக சில ஆண்டுகளாக தொடர்ந்து தகவல்கள் வெளியாகிவந்த நிலையில், கடந்த 2026 பிப்ரவரி இறுதியில் உதய்பூர் அரண்மனையில் ஒரு ராஜா ராணியின் திருமணத்தை போலவே தங்களின் திருமணத்தையும் நடத்தியிருந்தனர்.
இவர்களின் திருமணத்தில் நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள் மற்றும் பிரபலங்கள் என பல்வேறு நபர்கள் கலந்துகொண்டிருந்தனர். இவர்களின் திருமணம், திருமணத்திற்கு பிந்தைய கொண்டாட்டங்கள் என கிட்டத்தட்ட 10 நாட்களுக்கும் மேலாக நிகழ்ச்சிகள் நடந்துவந்தது. அந்த வகையில் இவர்கள் இருவரின் திருமணம் முடிந்து ஒரு மாதத்தை கடந்துள்ள நிலையில், நடிகை ராஷ்மிகா மந்தனா ஸ்பெஷல் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இதையும் படிங்க: பான் இந்திய வசூல் சாதனை.. 8 நாட்களில் ரன்வீர் சிங்கின் துரந்தர் 2 படத்தின் வசூல் எத்தனை கோடிகள் தெரியுமா?
திருமணம் முடிந்து ஒரு மாதத்தை கடந்த நிலையில் நடிகை ராஷ்மிகா மந்தனா வெளியிட்ட பதிவு:
அந்த பதிவில் நடிகை ராஷ்மிகா மந்தனா, “திருமணமாகி அதற்குள் ஒருமாதம் ஆகிவிட்டது என்பதை என்னால் நம்பவே முடியவில்லை. திருமணம் என்பது எட்டாத கனி என நினைத்தேன். ஆனால் தற்போது திருமணமாகி ஒரு மாதமாகிவிட்டது. இதை என்னால் நம்பவே முடியாவசில்லை. ஆனால் திருமணம் செய்யவிரும்பிய தருணத்திலிருந்து, இப்போதுவரையிலும் இந்த எல்லாச் சூழ்நிலைகளிலும் இந்தப் பெண்கள்தான் எனக்குப் பேருதவியாக இருந்தார்கள்.
இதையும் படிங்க: தனுஷின் கர படத்தின் திரையரங்கு வெளியீட்டு உரிமையை கைப்பற்றியது பிரபல நிறுவனம்
நான் என்றென்றும் அவர்களுக்கு மிகவும் நன்றியுள்ளவளாக இருப்பேன். இது ஒரு நிரந்தரமான காதல்” என அதில், தன்னுடைய நெருங்கிய தோழி, மாமியார் மற்றும் உறவினர்கள் என பல்வேறு நபர்களின் புகைப்படங்களை ராஷ்மிகா மந்தனா பகிர்ந்துள்ளார்.
விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா இணைந்து நடிக்கும் படம்:
கிட்டத்தட்ட 6 ஆண்டுகளுக்கு பிறகு ராஷ்மிகா மந்தனா மற்றும் விஜய் தேவரகொண்டா இருவரும் இணைந்து, ரணபாலி என்ற படத்தில் இணைந்து நடித்துவருகிறார். இந்த படமானது, கடந்த 1960-களில் நடந்த உண்மை சம்பவத்தை மையமாக கொண்டு இயக்கப்பட்டுவருகிறதாம். இதில் விஜய் தேவரகொண்டா ரணபாலி என்ற வேடத்திலும், ராஷ்மிகா மனிதனா ஜெயமா என்ற வேடத்திலும் நடித்துவருகிறார். இப்படம் வரும் 2026 செப்டம்பர் 11ம் தேதியில் வெளியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.