அழகி போட்டியில் திடீரென கழன்ற செயற்கை பற்கள்.. தன்நம்பிக்கையுடன் எதிர்கொண்ட தாய்லாந்து அழகி!
Beauty Pageant Contestant's Dentures Fell Off During Speech | உல்கம் முழுவதும் பல்வேறு தலைப்புகளின் கீழ் அழகி போட்டிகள் நடைபெறும். இதில் ஏராளமான அழகிகள் பங்கேற்பர். அந்த வகையில், தாய்லாந்தில் நடைபெற்ற போட்டியில் பங்கேற்ற அழகியின் பல் கழன்று விழுந்த வீடியோ வைரலாகி வருகிறது.
தாய்லாந்து, மாச்ர் 27 : தாய்லாந்து (Thailand) நாட்டில், மிகவும் பிரபலமான மிஸ் கிராண்ட் தாய்லாந்து 2026 (Miss Grand Thailand 2026) என்ற அழகி போட்டி (Beauty Pageant) நடைபெற்றது. இந்த போட்டியில் பங்கேற்ற அழகி ஒருவர் தன்னை அறிமுகம் செய்துக்கொண்டு இருந்த நிலையில், அவரது செயற்கை பற்கள் திடீரென கழன்றன. அதனை அவர் சரிசெய்துக்கொண்டு தன்நம்பிக்கையுடன் மீண்டும் போட்டியில் பங்கேற்றார். இந்த நிலையில், அவரது அந்த வீடியோ இணையத்தில் வெளியாகி மிக வேகமாக வைரலாகி வருகிறது.
மிஸ் கிராண்ட் தாய்லாந்து 2026 அழகி போட்டி
தாய்லாந்தில் நடைபெற்ற இந்த மிஸ் கிராண்ட் தாய்லாந்து போட்டியில் பங்கேற்ற கமோல்வான் சன்கோ என்ற போட்டியாளர் ஒருவர் மேடையில் தன்னை அறிமுகம் செய்துக்கொண்டு இருந்தார். அப்போது, அவரின் செயற்கை பற்கள் திடீரென கழன்று அவரது பேச்சை தடுமாற செய்தது. ஆனால், அவரோ அது குறித்து துலியும் கவலை கொள்ளாமல் மீண்டும் அதே உற்சாகத்துடன் போட்டியில் பங்கேற்றுள்ளார்.
இதையும் படிங்க : விமானத்தில் மோதிய வாகனம்.. ஏர்போர்ட்டில் ஷாக்.. 4 பேர் பலி!
இணையத்தில் வைரலாகும் தாய்லாந்து அழகியின் வீடியோ
En un evento de belleza, Miss Tailandia sufrió un percance cuando se le cayó la dentadura postiza. pic.twitter.com/0o6URHkrcx
— Bandit Mapache (@banditmapache_) March 26, 2026
இணையத்தில் வைரலாகும் அந்த வீடியோவில், கமோல்வான் சன்கோ தன்னை பொதுமக்களுக்கு அறிமுகம் செய்கிறார். அவர் மிகவும் உற்சாகமாக பேசிக்கொண்டிருக்கும் சூழலில், அவரது செயற்கை பற்கள் கழன்று அவரை பேச விடாமல் தடுமாற செய்கிறது. உடனே சுதாரித்துக்கொண்ட அவர், இருக்கும் இடத்தில் இருந்தே பின்பக்கம் திரும்பி தனது பற்களை சரிசெய்கிறார். பின்னர், முன்னர் பேசிக்கொண்டு இருந்த அதே தன்நம்பிக்கையுடன் போட்டியில் அவர் பங்கேற்கிறார். இவை அனைத்தும் அந்த வீடியோ காட்சியில் பதிவாகியுள்ளது.
இதையும் படிங்க : ஹார்முஸ் நீரிணையை கடக்க ரூ.18 கோடி கட்டணம்.. ‘சுங்க வரி’ விதித்து ஈரான் அதிரடி!
இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி மிக வேகமாக வைரலாகி வரும் நிலையில், பலரும் அந்த பெண் மிகவும் தைரியமானவர் என்றும், அவரது தன்நம்பிக்கைக்கு வாழ்த்து தெரிவித்தும் கருத்து பகிர்ந்து வருகின்றனர்.