தலைவன் எறங்க… சரிதம் எழுத… கூலி படக்குழு வெளியிட்ட புதிய போஸ்டர்
Coolie Movie: நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் கூலி. இந்தப் படம் வெளியாக இன்னும் சில நாட்களே உள்ளது. இந்த நிலையில் கூலி படத்தின் புதிய போஸ்டர் ஒன்றை படக்குழு தற்போது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

கூலி
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் (Director Lokesh Kanagaraj) இயக்கத்தில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கும் படம் கூலி. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் (Super Star Rajinikanth) நாயகனாக நடித்துள்ள இந்தப் படம் வருகின்ற ஆகஸ்ட் மாதம் 14-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கின்றது. ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்து காத்து இருக்கும் கூலி படத்தின் ரிலீஸிற்கு இன்னும் 9 நாட்களே உள்ளது. இந்த நிலையில் படத்தின் புரமோஷன் பணிகளில் படக்குழு தீவிரமாக இறங்கியுள்ளது. தமிழ் மொழியில் இந்தப் படம் வெளியாகி இருந்தாலும் பான் இந்திய அளவில் படம் 5 மொழிகளில் வெளியாக உள்ளது. இந்தப் படத்தில் தமிழ் நடிகர்கள் மட்டும் இன்றி பான் இந்திய நட்சத்திரங்களான நாகர்ஜுனா, அமீர் கான், உப்பேந்திரா, சௌபின் ஷாகிர் என பலர் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் படத்தின் இசை வெளியீட்டு விழா மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைப்பெற்றது. இந்த விழாவில் கலந்துகொண்டு பேசிய நடிகர்கள் மற்றும் படக்குழுவினரின் பேச்சு தொடர்ந்து இணையத்தில் வைரலாகி ரசிகர்களிடையே கவனத்தைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
புதிய போஸ்டரை வெளியிட்ட கூலி படக்குழு:
கூலி படம் திரையரங்குகளில் வெளியாக இன்னும் 9 நாட்களே உள்ள நிலையில் படத்தில் இருந்து புதிய போஸ்டரைப் படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. அதில் இன்னும் 9 நாட்கள் மட்டுமே வெளியீட்டிற்கு இருக்கு என்றும் தலைவன் எறங்க… சரிதம் எழுத என்று பதிவிட்டு தங்களது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளது.
இந்தப் பதிவு தற்போது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. முன்னதாக படத்தின் ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. குறிப்பாக படத்தின் ட்ரெய்லர் அதிக பார்களைப் பெற்று யூடியூபில் ட்ரெண்டிங்கில் இடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கூலி படக்குழு வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவு:
Thalaivan eranga, Saritham eludha!⚡
9 Days to go for #Coolie 💥#Coolie releasing worldwide August 14th @rajinikanth @Dir_Lokesh @anirudhofficial #AamirKhan @iamnagarjuna @nimmaupendra #SathyaRaj #SoubinShahir @shrutihaasan @hegdepooja @anbariv @girishganges @philoedit… pic.twitter.com/GDZbBvkWoC— Sun Pictures (@sunpictures) August 5, 2025