இது 1950 மாடல்… பார்ட்ஸ் எல்லாம் மாத்திட்டாங்க – கூலி பட விழாவில் கலகலப்பாக பேசிய ரஜினிகாந்த்!

Super Star Rajinikanth: நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் கூலி. இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைப்பெற்றது. அதில் நடிகர் ரஜினிகாந்த் பேசிய வீடியோ தற்போது வைரலாகி வருகின்றது.

இது 1950 மாடல்... பார்ட்ஸ் எல்லாம் மாத்திட்டாங்க - கூலி பட விழாவில் கலகலப்பாக பேசிய ரஜினிகாந்த்!

ரஜினிகாந்த்

Published: 

11 Aug 2025 15:04 PM

 IST

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் (Rajinikanth) படம் வெளியீட்டிற்கு தயாராக உள்ளது என்றால் படத்திற்கு ரசிகர்கள் எப்படி காத்திருப்பார்களோ அதே மாதிரி இசை வெளியீட்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் படக்குழுவினர் குறித்து என்ன என்ன பேசப் போகிறார் என்பதைப் பார்க்க ரசிகர்கள் ஆவளுடன் காத்திருப்பார்கள். ஏன் என்றால் படம் எவ்வளவு மாஸாக இருக்கிறதோ அதேப் போல நடிகர் ரஜினிகாந்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசும் பேச்சும் மாஸாக இருக்கும். ஒவ்வொரு இசை வெளியீட்டு விழாவிலும் அந்தப் படத்தின் இயக்குநர் குறித்தும் படத்தில் தன்னுடன் நடித்த நடிகர்கள் குறித்து, அவர்கள் ரஜிகாந்திடம் எப்படி பழகினார்கள் என்பது குறித்தும் மிகவும் நகைச்சுவையாக ரஜினிகாந்த் பேசுவார். அது ஒவ்வொரு முறையும் இணையத்தில் வைரலாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த முறை இசை வெளியீட்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் குறித்து பேசியபோது கூறியதாவது, லோகேஷ் கனகராஜ் என்னிடம் முதல்முறையாக கதை சொல்ல வந்தார். அப்போ கதையை ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடியே நான் ஒரு கமல் ஃபேன் என்றா. நான் கேட்டேனா அவர யார் ஃபேன்னு. என்ன சொல்ல வரார்னா இது மாஸ் டயலாக் பேசிட்டு போற படம் இல்ல இண்டலெக்சுவலான படம் என்று சொல்லாமல் சொல்கிறாராம் என்று கலகலப்பாக பேசியிருந்தார்.

டான்ஸ் மாஸ்டர் சாண்டி குறித்து பேசிய நடிகர் ரஜினிகாந்த்:

இந்த நிலையில் கடந்த 2-ம் தேதி ஆகஸ்ட் மாதம் 2025-ம் ஆண்டு சென்னையில் நடைப்பெற்ற கூலி படத்தின் இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சியை நேற்று 10-ம் தேதி ஆகஸ்ட் மாதம் 2025-ம் ஆண்டு சன் தொலைக்காட்சி ஒளிபரப்பு செய்தது. இதில் ரஜினிகாந்த் பேசியது தற்போது இணையத்தில் கவனம் பெற்று வருகின்றது.

அதன்படி அந்த வீடியோவில் கூலி படத்தில் டான்ஸ் ஆடியது குறித்து பேசிய நடிகர் ரஜினிகாந்த், நான் மாஸ்டர்கிட்ட சொல்லிட்டேன். மாஸ்டர் இது 1950 மாடல். பல லட்சம் கிலோமீட்டர் தூரம் ஓடிடுச்சு. பார்ட்ஸ் எல்லாம் மாத்தி இருக்காங்க அதனால பாத்து பண்ணுங்க ஹெவியா ஸ்டெப் எல்லாம் குடுக்காதீங்க சொன்னேன் அவரும் எப்படியோ என்ன ஆட வச்சுட்டார் என்று மிகவும் கலகலப்பாக பேசியிருந்தார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Also Read… சிலம்பரசன் பட ஷூட்டிங் எப்போது? வெற்றிமாறன் கொடுத்த அப்டேட்!

இணையத்தில் வைரலாகும் ரஜினிகாந்தின் பேச்சு:

Also Read… Samantha Ruth Prabhu: மீண்டும் சிறப்புப் பாடலுக்கு நடனமாடும் சமந்தா.. எந்த படத்தில் தெரியுமா?