பிரியங்கா மோகனின் நடிப்பில் வெளியானது மேட் இன் கொரியா படத்தின் டீசர்

Made In Korea Movie: தமிழ் சினிமாவில் நித்தம் ஒரு வானம் என்ற படத்தை இயக்கியதன் மூலம் இயக்குநராக அறிமுகம் ஆனவர் இயக்குநர் ரா கார்த்திக். இவரது இயக்கத்தில் தற்போது உருவாகியுள்ள படம் மேட் இன் கொரியா. படத்தின் டீசர் தற்போது வெளியாகி உள்ளது.

பிரியங்கா மோகனின் நடிப்பில் வெளியானது மேட் இன் கொரியா படத்தின் டீசர்

மேட் இன் கொரியா

Published: 

04 Feb 2026 18:21 PM

 IST

தமிழ் சினிமாவில் கடந்த 2022-ம் ஆண்டு நவம்பர் மாதம் 4-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் நித்தம் ஒரு வானம். ஃபீல் குட் படமாக உருவான இந்தப் படத்தை இயக்குநர் ரா கார்த்திக் எழுதி இயக்கி இருந்தார். இதில் நடிகர் அசோக் செல்வன் நாயகனாக நடித்து இருந்த நிலையில் இவருடன் இணைந்து நடிகர்கள் ரிது வர்மா,
அபர்ணா பாலமுரளி, ஈஷா ரெப்பா, ஷிவாத்மிகா ராஜசேகர், ஷிவதா, வின்சு ரேச்சல், அர்ஜுனன், அபிராமி, காளி வெங்கட், அழகம் பெருமாள், கல்யாணி நடராஜன், மேத்யூ வர்கீஸ், படவா கோபி, மோனா பெத்ரே, சௌந்தரியா நஞ்சுண்டன், செண்டு என பலர் நடித்து இருந்தனர். இந்தப் படம் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தை தொடர்ந்து அசோக் செல்வனின் சினிமா கெரியர் மாறியது என்றே கூறலாம்.

இந்த நிலையில் இயக்குநர் ரா கார்த்திக் அடுத்ததாக எந்தப் படத்தை இயக்குவார் என்று ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் 4 ஆண்டுகளுக்குப் பிறகு அவர் இயக்கி உள்ள படம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி இந்தப் படத்தில் நடிகை பிரியங்கா மோகன் முன்னணி வேடத்தில் நடித்து உள்ளார். தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் பிரியங்கா மோகன் இதில் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளார்.

பிரியங்கா மோகனின் நடிப்பில் வெளியானது மேட் இன் கொரியா பட டீசர்:

அதன்படி இயக்குநர் ரா கார்த்திக் இயக்கத்தில் நடிகை பிரியங்கா மோகன் நடிப்பில் உருவாகி உள்ள படத்திற்கு மேட் இன் கொரியா என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்தப் படம் நேரடியாக நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. படம் விரைவில் நெட்ஃபிளிக்ஸில் வெளியாக உள்ள நிலையில் மேட் இன் கொரியா படத்தின் டீசரைப் படக்குழு வெளியிட்டுள்ளது. அது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது.

Also Read… நாளை தனுஷ் 55 படத்திலிருந்து வெளியாகிறது முக்கிய அப்டேட்… படக்குழு அறிவிப்பு

நெட்ஃபிளிக்ஸ் இந்தியா வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… கோர்ட் ரூம் பாணியில் வெளியான இந்த நேரு படத்தை மிஸ் செய்யாதீர்கள்

உலகின் ஆபத்து நிறைந்த சவாலான விமான நிலையங்கள்
மனப் பயிற்சிகள் பல வழிகளில் நன்மை பயக்கும்.. வியக்கு வைக்கும் ஆய்வுகள்
7 அடி நீளமுள்ள மலைப்பாம்பை வாயில் கவ்விச்சென்ற புலி... வைரலாகும் அதிர்ச்சி வீடியோ
13 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் திறக்கப்படும் கேதார்நாத் கோவிலுக்கு செல்லும் பாதை