AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Kanchipuram Constituency Election 2026: கோயில் நகரமான காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதி.. கள நிலவரம் யாருக்கு சாதகம்?

காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி என்பது காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள முக்கிய அரசியல் மற்றும் வரலாற்றுப் பின்னணி கொண்ட தொகுதியாகும். இது காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதியில் உள்ள ஆறு சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இது பொதுத் தொகுதி ஆகும். காஞ்சிபுரம் “கோயில்களின் நகரம்” என்று அழைக்கப்படுகிறது.

Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 27 Mar 2026 23:07 PM IST
காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி என்பது காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள முக்கிய அரசியல் மற்றும் வரலாற்றுப் பின்னணி கொண்ட தொகுதியாகும். இது காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதியில் உள்ள ஆறு சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இது பொதுத் தொகுதி ஆகும். காஞ்சிபுரம் “கோயில்களின் நகரம்” என்று அழைக்கப்படுகிறது.

காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி என்பது காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள முக்கிய அரசியல் மற்றும் வரலாற்றுப் பின்னணி கொண்ட தொகுதியாகும். இது காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதியில் உள்ள ஆறு சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இது பொதுத் தொகுதி ஆகும். காஞ்சிபுரம் “கோயில்களின் நகரம்” என்று அழைக்கப்படுகிறது.

1 / 6
ஏகாம்பரேஸ்வரர் கோவில், காமாட்சி அம்மன் கோவில், கோவிந்தராஜ பெருமாள் கோவில் உள்ளிட்ட பல புகழ்பெற்ற கோவில்கள் இங்கு உள்ளன. அதேபோல், காஞ்சிபுரம் பட்டு உலகப் புகழ்பெற்றதாகும். திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகளில் காஞ்சிபட்டு முக்கிய இடம் பெறுகிறது.

2 / 6
2021ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில், திராவிட முன்னேற்றக் கழகம் கட்சியின் வேட்பாளர் எழிலரசன் 1,02,712 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இரண்டாவது இடத்தில் பட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர் மகேஷ் குமார் 91,117 வாக்குகள் பெற்றார். மூன்றாவது இடத்தில் நாம் தமிழர் கட்சி, நான்காவது இடத்தில் மக்கள் நீதி மையம் இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த தொகுதியின் தேர்தல் வரலாற்றைப் பார்த்தால், 1977ஆம் ஆண்டு முதல் தற்போது வரை அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் 6 முறையும், திராவிட முன்னேற்றக் கழகம் 4 முறையும் வெற்றி பெற்றுள்ளன. இதனால், அதிமுக இத்தொகுதியில் சற்று வலுவாகக் கருதப்படுகிறது.

3 / 6
காஞ்சிபுரம் தொகுதி, பட்டு நெசவாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் அதிகமாக உள்ள பகுதியாகும். அதேபோல், சிறு வணிகர்களும் கணிசமாக உள்ளனர். கோவில்கள் மற்றும் காஞ்சிபட்டு போன்றவை பிரபலமானவை என்றாலும், மக்கள் தரப்பில் பல்வேறு பிரச்சனைகள் தொடர்ந்து முன்வைக்கப்படுகின்றன. குறிப்பாக: கோடை காலங்களில் குடிநீர் தட்டுப்பாடு அதிகம், சில பகுதிகளில் நிலையான குடிநீர் விநியோகம் இல்லை, வடிகால் மற்றும் கழிவுநீர் பிரச்சனைகள், வேகமான நகர வளர்ச்சியின்போதும் அடிப்படை வசதிகள் குறைவு, தொழிலாளர்கள் நலன் மற்றும் நெசவாளர்களுக்கு போதிய சலுகைகள் இல்லாதது

4 / 6
2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நாம் தமிழர் கட்சி சார்பில் வெற்றிச்செல்வி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அதேபோல், அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் சோமசுந்தரம் போட்டியிடுகிறார். திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் தமிழக வெற்றிக் கழகம் உள்ளிட்ட கட்சிகள் விரைவில் தங்களது வேட்பாளர்களை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

5 / 6
நான்கு முனைப் போட்டி நிலவி வருவதால், இந்த முறை யார் வெற்றி பெறுவார்கள் என்ற கேள்வி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. புதிதாக களம் காணும் தமிழக வெற்றிக் கழகம் கணிசமான வாக்குகளை பிரிக்கக்கூடும் எனவும் அரசியல் வட்டாரங்களில் கருத்துக்கள் நிலவுகின்றன.

6 / 6
Follow Us