AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

பங்குனி உத்திரம்.. 1000 பௌர்ணமிக்குச் சமமான பலன்களை அள்ளித்தரும்.. தலைவிதியையே மாற்றும்!!

Panguni uthiram 2026: பங்குனி உத்திரம் என்பது வெறும் சடங்கு மட்டுமல்ல, அது உறவுகளைப் புதுப்பித்துக் கொள்ளவும், பிறருக்கு உதவி செய்யவும் (நீர்மோர், அன்னதானம் போன்றவை) கிடைத்த ஒரு அரிய வாய்ப்பு. இந்த நன்னாளில் மனக்கசப்புகளை நீக்கி, இறைவனைத் துதித்துத் தெளிவான சிந்தனையைப் பெறுவோம்.

esakkiraja selvarathinam
Esakkiraja Selvarathinam | Published: 27 Mar 2026 14:43 PM IST
பங்குனி உத்திரம் என்பது வெறும் ஆன்மீக விழா மட்டுமல்ல, அதற்குப் பின்னால் ஆழமான அறிவியலும், குடும்ப உறவுகளை மேம்படுத்தும் உன்னத நோக்கமும் ஒளிந்துள்ளது. 2026-ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரும் இந்தப் பங்குனி உத்திரம் 1000 பௌர்ணமிக்குச் சமமான பலன்களைத் தரக்கூடியது எனப் போற்றப்படுகிறது.

1 / 5
தெய்வங்களின் திருமண நன்னாள்: பங்குனி உத்திரம் என்பது தெய்வங்கள் மணக்கோலம் பூண்ட மிக முக்கியமான நாள். சிவபெருமான் - பார்வதி, ராமன் - சீதை, முருகன் - தெய்வானை எனப் பல தெய்வத் திருமணங்கள் இந்தத் திருநாளில்தான் நடைபெற்றன. இதுமட்டுமின்றி, பாற்கடலில் இருந்து மகாலட்சுமி அவதரித்ததும், அர்ஜுனன் மற்றும் சபரிமலை ஐயப்பன் அவதரித்ததும் இதே உத்திர நட்சத்திரத்தில்தான்.

2 / 5
நமது முன்னோர்கள் எந்தவொரு பண்டிகையையும் காரணமின்றி உருவாக்கவில்லை. பங்குனி பௌர்ணமி அன்று நிலவு பூமிக்கு மிக அருகில் இருக்கும். இதனால் மனிதர்களின் மனதில் ஏற்படும் ஒருவித படபடப்பு அல்லது குழப்பத்தைச் சீர் செய்யவே, இந்த நேரத்தில் கோவிலுக்குச் சென்று பஜனை பாடி தியானம் செய்யும் முறையை முன்னோர்கள் வகுத்தனர்.

3 / 5
கோடைக்காலம் தொடங்குவதால் உடல் சூட்டைத் தணிக்கக் காவடி எடுத்தல், பால் குடம் தூக்குதல் மற்றும் நீர்மோர், பானகம் தானம் செய்தல் போன்ற சடங்குகள் ஒரு 'டீடாக்ஸ்' (Detox) முறையாகக் கடைப்பிடிக்கப்படுகின்றன. பங்குனி உத்திரம் குலதெய்வ வழிபாட்டிற்கு மிக உகந்த நாள். குலதெய்வம் என்பது ஒரு குடும்பத்தின் வேர் போன்றது. இந்நாளில் குலதெய்வக் கோவிலுக்குச் சென்று வழிபடுவது அந்தப் பரம்பரையின் பித்ருக்களின் ஆசியைப் பெற்றுத்தரும். ஒருவேளை மட்டும் உணவருந்தி விரதமிருந்து மாலையில் இறைவனைத் தரிசிப்பது உடலுக்கும் மனதிற்கும் வலிமை சேர்க்கும். முருகன் கோவில்கள் அல்லது அறுபடை வீடுகளில் நடைபெறும் திருக்கல்யாண வைபவத்தை நேரில் காண்பது குடும்ப ஒற்றுமையை வளர்க்கும்.

4 / 5
முக்கியக் கோவில் திருவிழாக்கள்: பங்குனி மாதத்தில் தமிழகத்தின் பல முக்கியக் கோவில்களில் திருவிழாக்கள் கோலாகலமாக நடைபெறும். பழனி: 10 நாள் பிரம்மோற்சவம் மற்றும் லட்சக்கணக்கான பக்தர்களின் காவடி ஊர்வலம். மயிலாப்பூர்: உலகப் புகழ்பெற்ற கபாலீஸ்வரர் கோவில் தேரோட்டம் மற்றும் 63-வர் திருவிழா. திருவாரூர்: ஆசியாவிலேயே மிகப்பெரிய தேரான 'ஆழித்தேர்' ஓட்டம். ஸ்ரீரங்கம்: ரங்கநாதர் மற்றும் கமலவள்ளி நாச்சியாரின் 'சேர்த்தி சேவை' தரிசனம்.

5 / 5
Follow Us