பிரணவ் மோகன்லால் நடிப்பில் வெளியானது டைஸ் இரே படத்தின் ட்ரெய்லர்!
Dies Irae Movie Release Trailer: நடிகர் பிரனவ் மோகன்லால் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் டைஸ் இரே. பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் இந்தப் படம் வருகின்ற அக்டோபர் மாதம் 31-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்தப் படத்தின் ரிலீஸ் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.

டைஸ் இரே
மலையாள சினிமவில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் மோகன்லால் (Actor Mohanlal). இவரது மகனாக மலையாள சினிமாவில் அறிமுகம் ஆனவர் நடிகர் பிரணவ் மோகன்லால். அதன்படி கடந்த 2002-ம் ஆண்டு மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடித்த பிரணவ் மோகன்லால் கடந்த 2009-ம் ஆண்டு முதல் மலையாள சினிமாவில் தொடர்ந்து படங்களில் நடிக்கத் தொடங்கினார். நடித்தால் நாயகனாக மட்டுமே நடிப்பேன் என்ற கலாச்சாரம் மாலையாள சினிமாவில் இல்லை. மலையாள சினிமாவைப் பொருத்தவரை எவ்வளவு பெரிய நட்சத்திரமாக இருந்தாலும் எந்தவித ஈகோவும் இன்றி மற்ற நடிகர்களின் படத்தில் 5 நிமிட காட்சியில் கூட நடித்துக் கொடுப்பார்கள். இது மலையாள சினிமாவில் மட்டுமே சாத்தியம். மற்ற தென்னிந்திய மொழி நடிகர்களிடையே அவ்வளவு எளிதாக நடக்காது என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படி எல்லா கதாப்பாத்திரங்களிலும் தொடர்ந்து நடித்து வரும் நடிகர் பிரணவ் மோகன்லாலின் நடிப்பு ரசிகர்களிடையே தொடர்ந்து பாராட்டைப் பெற்று வருகின்றது. இவரது நடிப்பு ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றாலும் இவருக்கு நடிப்பதை விட இயற்கையோடு ஒன்றி வாழவே அதிகம் பிடிக்கும் என்று பிரணவ் மோகன்லாலின் தாய் முன்னதாக பேட்டி ஒன்றில் குறிப்பிட்டு இருந்தார். இந்த நிலையில் தற்போது பிரணவ் மோகன்லால் நடிப்பில் உருவாகியுள்ள படம் டைஸ் இரே.
பிரணவ் மோகன்லால் நடிப்பில் உருவாகியுள்ளது டைஸ் இரே படம்:
மலையாள சினிமாவில் மிஸ்ட்ரி ஹாரர் த்ரில்லர் படமாக உருவாகியுள்ள இந்த டைஸ் இரே படத்தை இயக்குநர் ராகுல் சதாசிவம் எழுதி இயக்கி உள்ளார். இதில் நடிகர் பிரணவ் மோகன்லால் உடன் இணைந்து நடிகர்கள் ஜிபின் கோபிநாத், ஜெய குருப், மனோஹரி ஜாய் மற்றும் அருண் அஜிகுமார் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். பிரபல தயாரிப்பு நிறுவனமான நைட் ஷிப்ட் ஸ்டுடியோஸ் மற்றும் YNOT ஸ்டுடியோஸ் சார்பாக தயாரிப்பாளர்கள் சக்ரவர்த்தி ராமச்சந்திரா மற்றும் எஸ். சசிகாந்த் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். இந்தப் படம் வருகின்ற 31-ம் தேதி அக்டோபர் மாதம் 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் படத்தின் ரிலீஸ் ட்ரெய்லரை நடிகர் மோகன்லால் அவரது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். ட்ரெய்லரைப் பார்த்த ரசிகர்கள் படம் சிறப்பாக இருக்கும் என்று தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
Also Read… புதுப்பேட்டை 2, ஆயிரத்தில் ஒருவன் 2 படங்கள் குறித்து சூப்பர் அப்டேட் கொடுத்த செல்வராகவன்
நடிகர் மோகன்லால் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
#DIESIRAE Release Trailer
IN CINEMAS WORLDWIDE FROM OCT 31!https://t.co/GCE3649YOI
— Mohanlal (@Mohanlal) October 25, 2025
Also Read… இது வேறலெவல் ட்விஸ்டா இருக்கே… இந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பெண் போட்டியாளர்?