Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

உறுதியையும், எதிர்ப்பையும் பிரதிபவிக்கும் ‘பைசன்’: பாராட்டிய வெற்றிமாறன்!

Vetrimaran praise Bison movie: மாரிசெல்வராஜ் இயக்கத்தில் வெளியாகியுள்ள பைசன் படத்திற்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. சாதிய ஏற்றத்தாழ்வுகளை மீறி, தடைகளை உடைத்து சாதிக்கும் இளைஞனின் ஸ்போர்ட்ஸ் திரில்லராக இப்படம் உருவாகியுள்ளது. குறிப்பாக தென் மாவட்ட இளைஞர்களின் வாழ்வியலை இப்படம் பேசியுள்ளது.

உறுதியையும், எதிர்ப்பையும் பிரதிபவிக்கும் ‘பைசன்’: பாராட்டிய வெற்றிமாறன்!
பைசன் - வெற்றிமாறன்
esakkiraja selvarathinam
Esakkiraja Selvarathinam | Published: 24 Oct 2025 18:54 PM IST

பா.ரஞ்சித்தின் நீலம் புரடெக்ஷன்ஸ் தயாரிப்பில், மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிப்பில் தீபாவளி ரிலீஸாக வெளியாகியுள்ள திரைப்படம் ‘பைசன்’. ரசிகர்கள் அளித்த அதீத வரவேற்பு காரணமாக இப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வருகிறது. இசையமைப்பாளர் நிவாஸ் கே. பிரசன்னா இசையமைத்துள்ள இப்படத்தில், அனுபமா பரமேஷ்வரன், ரஜிஷா விஜயன், அமீர், பசுபதி எனப் பலரும் நடித்துள்ளனர். கபடி வீரரின் வாழ்க்கையை தத்துரூபமாக வெளிப்படுத்தி உள்ள ‘பைசன்’ படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ஆம், அர்ஜுனா விருது பெற்ற கபடி வீரர் மணத்தி கணேசனின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு, மாரி செல்வராஜின் சொந்த அனுபவங்களோடு பின்னப்பட்டு இப்படம் உருவாகியுள்ளது.

தொடர் ஹிட் கொடுக்கும் மாரிசெல்வராஜ்:

இயக்குநர் ராமிடம் உதவி இயக்குநராக இருந்த மாரி செல்வராஜ், தனது வாழ்க்கை அனுபவத்தை எழுத்தின் மூலம் அழுத்தமாக வெளிப்படுத்தி தனி கவனம் பெற்றிருந்தார். இந்நிலையில், கடந்த 2018ல் வெளியான பரியேறும் பெருமாள் திரைப்படத்தின் மூலம் முக்கிய இயக்குநராக கவனம் பெற்றார். முதல் படத்திலேயே வணிக ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பெரும் வெளிச்சத்தை பெற்றார்.

Also read: நான் ரொம்ப ஆச்சரியப்பட்டேன்.. மாரி செல்வராஜின் பைசன் படத்தை வாழ்த்திய அண்ணாமலை!

தொடர்ந்து, கர்ணன், மாமன்னன், வாழை என அடுத்தடுத்து இதுவரை சொல்லப்படாத கோணங்களில் சாதிக்கு எதிரான படங்களை கொடுத்து வந்தார். அந்த வகையில், தற்போது வெளியாகியுள்ள பைசன் மூலம் தொடர்ச்சியாக 5வது ஹிட் படத்தைக் கொடுத்து, கோலிவுட்டில் தோல்வியே கொடுக்காத இயக்குநர் என்ற பெருமையை மாரிசெல்வராஜ் பெற்றுள்ளார்.

பாராட்டை குவிக்கும் பைசன்:

இந்தநிலையில். ‘பைசன்’ படத்தை பார்த்து ரஜினி, லிங்குசாமி, வசந்தபாலன், சேரன், இரா. சரவணன் எனப் பெரும்பாலான திரைப்பிரபலங்களும், அண்ணாமலை, வைகோ போன்ற அரசியல் தலைவர்கள் இப்படத்தை பெருமையோடு பாராட்டி வருகின்றனர். அந்தவகையில், இயக்குநர் வெற்றிமாறன் இப்படத்திற்கு பாராட்டுத் தெரிவித்துள்ளதாக எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ள மாரிசெல்வராஜ், அவருக்கு நன்றியும் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட பதிவில், பைசன் உறுதியையும் எதிர்ப்பையும் பிரதிபவிக்கும் ஆழமான தியானம். துருவ் விக்ரம் அளிக்கும் இயல்பான, மறக்க முடியாத நடிப்பு சக்திவாய்ந்த உவமைகளால் நிறைந்துள்ளது.

Also read: ரஜினி – கமல் இணையும் படம்: முக்கிய அப்டேட் கொடுத்த செளந்தர்யா ரஜினிகாந்த்!

வலிமை மற்றும் உயிர்வாழ்வின் அடையாளமாக பைசனின் எலும்புக்கூடு, மரியாதைக்கான போராட்டமாக கபடி, தடங்களால் மறைக்கப்பட்ட பாதைகளில் ஓடும் பயணம் அனைத்தும் இடையறாத போராட்டத்தை வெளிப்படுத்துகின்றன. அமைதியானாலும் வெடிக்கும் பைசன், கிட்டனின் அடக்கி வைத்த கோபத்தை பிரதிபலிக்கிறது; கருப்பு-வெள்ளை மற்றும் நிறம் மாறும் காட்சிகள் இழப்பு, நினைவு, நம்பிக்கை ஆகியவற்றை வெளிப்படுத்துகின்றன” என வெற்றிமாறன் பாராட்டியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.