தெலுங்கு சினிமாவின் மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடிக்கும் 158வது திரைப்படத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் மற்றும் பாலிவுட் இயக்குநர் அனுராக் கஷ்யப் இணைந்து நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்காலிகமாக மெகா 158 என அழைக்கப்படும் இந்த படத்தில், வால்டேர் வீரய்யா படத்துக்கு பிறகு இயக்குநர் பாபி கொல்லியுடன் சிரஞ்சீவி இணையவுள்ளார். பான் இந்தியா அளவில் உருவாகும் இந்த திரைப்படம் தெலுங்கு, தமிழ், இந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாக திட்டமிடப்பட்டுள்ளது.