வருண் தவான், பூஜா ஹெக்டே – மிருணாள் தாகூரின் புது படம் – வெளியானது ஃபர்ஸ்ட் லுக் டீசர்!
Hai Jawani Toh Ishq Hona Hai: பான் சினிமாவில் பிரபலமான நடிகராக இருந்துவருபவர் வருண் தவான். இவர் நடித்துவரும் புதிய திரைப்படம்தான் ஹை ஜவானி தோ இஷ்க் ஹோனா ஹை. தற்போது இப்படத்திலிருந்து நடிகர்களின் முதல் பார்வை போஸ்டர் மற்றும் டீசரை படக்குழு வெளியிட்பட்டுள்ளது.

ஹை ஜவானி தோ இஷ்க் ஹோனா ஹை திரைப்படம்
பாலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருந்துவருபவர் வருண் தவான் (Varun Dhawa). இவருக்கு பாலிவுட் சினிமாவில் ரசிகர்கள் இருப்பதுபோலவே தமிழ் சினிமாவிலும் ரசிகர்கள் உள்ளனர். அந்த வகையில் இவர் இறுதியாக பார்டர் 2 (Border 2) என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த படமானது இவருக்கு சிறப்பான வரவேற்பை கொடுத்திருந்தது. இதையடுத்ததாக இவர் நடித்துவந்த புதிய திரைப்படம்தான் “ஹை ஜவானி தோ இஷ்க் ஹோனா ஹை” (Hai Jawani Toh Ishq Hona Hai). இப்படத்தை இந்தி இயக்குநர் டேவிட் தவான் இயக்க, பான் இந்திய மொழிகளில் தயாராகிவருகிறது. இதில் நடிகர் வருண் தவான் ஹீரோவாக நடிக்க, அவருக்கு ஜோடியாக இரு நடிகைகள் நடித்துள்ளனர். நடிகை பூஜா ஹெக்டே (Pooja Hegde) மற்றும் நடிகை மிருணாள் தாக்கூர் (Mrunal Thakur) என இரு நடிகைகள் இப்படத்தில் இணைந்து நடித்துள்ளனர்.
இந்த படமானது முற்றிலும் காதல் மற்றும் பொழுதுபோக்கு கதையை மையமாக கொண்டு இயக்கப்பட்டுள்ளதாம். அந்த வகையில் இப்படமானது எப்போது வெளியாகும் மற்றும் இப்படத்தின் முதல் பார்வை டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. இதுகுறித்த தகவல் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது.
இதையும் படிங்க: லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தில் நடிக்க கிரித்தி ஷெட்டி சம்பளம் எவ்வளவு தெரியுமா?
பூஜா ஹெக்டே, வருண் தவான் மற்றும் மிருணாள் தாகூரின் ஹை ஜவானி தோ இஷ்க் ஹோனா ஹை பட அறிவிப்பு பதிவு:
VARUN DHAWAN – MRUNAL THAKUR – POOJA HEGDE: ‘HAI JAWANI TOH ISHQ HONA HAI’ FIRST LOOK UNVEILED – 22 MAY 2026 RELEASE… Here’s the first look of the feel-good, massy entertainer #HaiJawaniTohIshqHonaHai, starring #VarunDhawan, #MrunalThakur, and #PoojaHegde.
🔗:… pic.twitter.com/RHPjtOLVyC
— taran adarsh (@taran_adarsh) April 14, 2026
ஹை ஜவானி தோ இஷ்க் ஹோனா ஹை படத்தின் ரிலீஸ் தேதி:
நடிகை பூஜா ஹெக்டே தமிழ் சினிமாவில் லீட் கதாநாயகியாக நடித்துவருகிறார். அதுபோன்று தெலுங்கு மற்றும் இந்தி மொழி படங்களில் நடிப்பதிலும் ஆர்வம் காட்டிவருகிறார். இவர் இறுதியாக தேவா என்ற இந்தி படத்தில் நடிகர் ஷாஹித் கபூருக்கு ஜோடியாக நடித்திருந்தார். கடந்த 2025ம் ஆண்டில் வெளியான இப்படம் இவருக்கு கலவையான விமர்சனங்களை கொடுத்திருந்தது. இதைத்தடுக்க நடித்துவந்த புதிய இந்தி படம்தான் ஹை ஜவானி தோ இஷ்க் ஹோனா ஹை. இந்த படத்தில் வருண் தவானுக்கு ஜோடியாக இவர் நடித்துள்ளார்.
இதையும் படிங்க: ராதிகா சரத்குமார் நடிப்பில் வெளியானது காலனி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்
மேலும் நடிகை மிருணாள் தாகூரும் இப்படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படமானது வித்தியாசமான காதல் கதைக்களத்தில் தயாராகியுள்ள நிலையில், வரும் 2026ம் ஆண்டு மே 22ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. தற்போது இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீசரும் வெளியாகியுள்ள நிலையில், அந்த வகையில் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துவருகிறது.