பிக்பாஸ் வழக்காடு மன்றத்தில் எஃப்ஜே மீது புகாரளித்த பார்வதி… என்ன சொல்லியிருக்கார் பாருங்க

Bigg Boss Tamil Season 9: பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி தற்போது 10-வது வாரம் சென்று கொண்டிருக்கின்றது. இந்த வாரம் பிக்பாஸில் வழக்காடு மன்றம் டாஸ்க் வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வீடியோ தற்போது வெளியாகி இணையத்தில் ரசிகர்களிடையே வைரலாகி வருகின்றது.

பிக்பாஸ் வழக்காடு மன்றத்தில் எஃப்ஜே மீது புகாரளித்த பார்வதி... என்ன சொல்லியிருக்கார் பாருங்க

பிக்பாஸ்

Published: 

10 Dec 2025 11:03 AM

 IST

பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியில் தற்போது 10-வது வாரத்தை எட்டியுள்ளது. இந்த வாரம் வீட்டுத் தலையாக அமித் பார்கவ் வெற்றிப்பெற்று தலையாக உள்ள நிலையில் இந்த வார இறுதியில் நடைபெறும் எவிக்‌ஷனுக்காக பிக்பாஸ் போட்டியாளர்கள் வினோத், கம்ருதின், வியானா, சாண்ட்ரா, ரம்யா ஜோ, சபரி மற்றும் எஃப்ஜே ஆகியோர் இந்த வாரத்திற்கான எவிக்‌ஷன் ப்ராசசிற்காக நாமினேட் செய்யப்பட்டுள்ளனர். மேலும் இவர்களில் யார் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறுவார்கள் என்பது குறித்து வார இறுதியில் தெரியவரும். இந்த நிலையில் தொடர்ந்து இந்த வாரம் முழுவதும் நடைபெறும் நிகழ்வுகளைப் பொருத்தே வார இறுதியில் எவிக்‌ஷன் ப்ராசசில் என்ன நடக்கும் என்பதும் வெளிப்படையாக தெரியவரும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த வாரத்திற்கான டாஸ்க் போட்டியாளர்களிடையே எரியும் நெருப்பில் எண்ணை ஊற்றுவது போல உள்ளது குறிப்பிடத்தக்கது.

அதன்படி பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியில் தற்போது 10வது வாரத்திற்கான டாஸ்காக வழக்காடு மன்றம் அறிவிக்கப்பட்டது. இதில் வீட்டில் உள்ள போட்டியாளர்கள் ஒரு நீதிமன்ற செட்டப்பில் அமர்ந்து தங்களது புகார்களை வாதாடுவது குறிப்பிடத்தக்கது. போட்டியாளர்களே நீதிபதிகளாகவு, வழக்கறிஞர்களாகவும், வழக்கு தொடர்ந்தவர் என ஒரு முழு நீதிமன்ற செட்டப்பில் நடைப்பெற்று வருகின்றது. நேற்று முதல் இந்த டாஸ்கை விளையாடி வருகின்றனர் பிக்பாஸ் போட்டியாளர்கள்.

பிக்பாஸ் வழக்காடு மன்றத்தில் எஃப்ஜே மீது புகாரளித்த பார்வதி:

அதன்படி இன்று பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியில் 66-வது நாளிற்கான முதல் ப்ரோமோ வீடியோவை நிகழ்ச்சி குழு வெளியிட்டுள்ளது. அதில் வழக்காடு மன்றத்தில் போட்டியாளர் பார்வதி எஃப்ஜேவிற்கு எதிராக புகார் அளிக்கிறார். இந்த வழக்கு இன்று விசாரிக்கப்படுவது போல அந்த வீடியோவில் காட்டப்பட்டது. மேலும் பார்வதிக்கு ஆதரவாக விக்ரமும் எஃப்ஜேவிற்கு ஆதரவாக சபரி ஆகியோ வாதாடுவது இந்த வீடியோவைப் பார்க்கையில் தெரிகின்றது.

Also Read… சிவகார்த்திகேயன் – வெங்கட் பிரபு படம் இப்படிதான் இருக்கும்… வைரலாகும் தகவல்

பிக்பாஸ் நிகழ்ச்சி குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… பிக்பாஸில் மீண்டும் மோதிக்கொள்ளும் ஆதிரை மற்றும் கானா வினோத் – வைரலாகும் வீடியோ

சிக்கலில் இண்டிகோ விமான சேவை.. எனினும் டிக்கெட் விற்பனையாவது எப்படி?
திருமணமான அடுத்த 4வது நாளில் படப்பிடிப்பில் சமந்தா
5 வயது சிறுவனை தாக்க முயற்சித்த சிறுத்தை.. சாதுரியமாக செயல்பட்டதால் தப்பிய சம்பவம்..
அதிகரித்து வரும் தங்க குத்தகை.. என்ன காரணம்?