OTT Movies: காமெடி கலந்த பேய் படம்.. ஹாலிவுட் ரசிகர்களே மிஸ் பண்ணாதீங்க!
2025 இல் வெளிவந்த "தி மங்கி" திரைப்படம், ஸ்டீபன் கிங் சிறுகதையை அடிப்படையாகக் கொண்டது. கொலின் ஓ'பிரையன், தியோ ஜேம்ஸ் உள்ளிட்டோர் நடித்த இப்படம், ஒரு பழங்காலக் குரங்கு பொம்மையை மையமாகக் கொண்டு, தொடர் மரணங்கள் மற்றும் அமானுஷ்ய சம்பவங்களைச் சித்தரிக்கும் வகையில் உருவாக்கப்பட்டிருந்தது.

பலருக்கும் பேய் படம் பார்ப்பதில் அலாதி பிரியம் இருக்கும். அதுவும் காமெடி கலந்து இருந்தால் இன்னும் சுவாரஸ்யமாக இருக்கும். இந்திய சினிமாவில் வெளியாகும் பேய் படங்கள் யாவும் இந்த வகையில் இருக்கும் நிலையில் ஹாலிவுட்டில் நம்மை கலங்கடிக்க வைக்கும் அளவுக்கு திகில் இருக்கும். ஆனால் காமெடி குறைவாகவே இருக்கும். ஒருவேளை தமிழ் டப் செய்யப்பட்டு வெளியாகும் படங்களில் ரசிகர்களை ஈர்க்க நகைச்சுவையான வசனங்கள் வைக்கப்பட்டிருக்கலாம். இப்படியான நிலையில் 2025 ஆம் ஆண்டு வெளியான டார்க் காமெடி திகில் திரைப்படமான The Monkey பற்றி நாம் பார்க்கலாம். இந்த படமானது 1980 ஆம் ஆண்டு ஸ்டீபன் கிங் எழுதிய ஒரு சிறுகதையை அடிப்படையாகக் கொண்டதாகும். ஆஸ்குட் பெர்கின்ஸ் எழுதி இயக்கிய இப்படத்தில்,தியோ ஜேம்ஸ், டாட்டியானா மஸ்லானி,கொலின் ஓ’பிரையன்,ரோஹன் கேம்பல்,எலிஜா வுட் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். நிகோ அகுய்லர் ஒளிப்பதிவு செய்த The Monkey படத்திற்கு எடோ வான் ப்ரீமென் இசையமைத்திருந்தார்.
படத்தின் கதை
Stephen King. James Wan. Osgood Perkins. Everybody dies.
THE MONKEY. In theaters 2.21. pic.twitter.com/Aevo3ECcqs— NEON (@neonrated) January 16, 2025
1999 ஆம் ஆண்டில் இந்த கதையானது நடைபெறுகிறது. ஒரு பழங்காலப் பொருட்கள் கடையில் டிரம்ஸ் வாசிக்கும் பொம்மை குரங்கைத் திருப்பித் தர கொலின் ஓ’பிரையன் முடிவு செய்கிறார். ஆனால் அந்த குரங்கால் அடுத்தடுத்து எதிர்பாராத சம்பவங்கள் நிகழ்கிறது. அது கொலின் ஓ’பிரையன் வீட்டில் தொடர் மரணங்களை உண்டாக்குகிறது. பெற்றோரை இழந்து தவிக்கும் இரட்டையர்களான தியோ ஜேம்ஸ் காஸ்கோவில் உள்ள தங்கள் மாமா வீட்டிற்கு செல்ல முடிவெடுக்கிறார். போகும் முன் வீட்டில் உள்ள குரங்கு பொம்மையை அப்புறப்படுத்துகிறார்கள். ஆனால் அது அவர்களின் மாமா வீட்டில் மீண்டும் தோன்றுகிறது. அங்கு மாமா கொல்லப்படுகிறார். இதனால் அதை ஒரு பெட்டியில் அடைத்து கிணற்றில் வீசுகிறார்கள். 25 ஆண்டுகள் எந்தவித பிரச்னையும் இல்லாமல் வாழ்க்கை செல்லும் நிலையில் மீண்டும் அசாம்பாவித சம்பவங்கள் நடக்க தொடங்க குரங்கு மீண்டும் வந்து விட்டதாக நினைக்க இதன் பின்னர் என்ன நடந்தது என்பதே இப்படத்தின் கதையாகும்.




படத்தின் சிறப்புகள்
2023 ஆம் ஆண்டு நடைபெற்ற கேன்ஸ் திரைப்பட விழாவில் தான் தயாரிப்பு நிறுவனமான பிளாக் பியர் பிக்சர்ஸ் தி மங்கி திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தது. இந்த படத்தின் ட்ரெய்லர் 24 மணி நேரத்துக்குள் அதிக பேர் பார்த்த சிறப்பை பெற்றது. 72 மணி நேரத்தில் 100 மில்லியன் பார்வையாளர்களை கடந்த தி மங்கி படம் விமர்சகர்களிடையேயும் பாராட்டைப் பெற்ற படமாக அமைந்தது. திகில் மற்றும் நகைச்சுவை கலந்த கதையை பார்வையாளர்க்ளை கவரும் வகையில் ஆஸ்குட் பெர்கின்ஸ் அசத்தலாக இயக்கியுள்ளதாக பாராட்டு தெரிவித்தனர். இந்த படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் காணக் கிடைக்கிறது.