Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Nagarjuna : தனுஷின் குபேரா.. டப்பிங் பணியை முடித்த நாகார்ஜுனா!

Nagarjuna completes Kuberaa Movie Dubbing : கோலிவுட் நடிகர் தனுஷின் நடிப்பில் தெலுங்கு மொழியை அடிப்படையாகக் கொண்டு உருவாகியிருக்கும் படம் குபேரா. இந்த படத்தை சேகர் கம்முலா இயக்க, நடிகர் நாகார்ஜுனாவும் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். ரிலீசிற்கு இன்னும் சில நாட்கள் மட்டும் உள்ள நிலையில், குபேரா படத்தின் டப்பிங் பணியை நிறைவு செய்துள்ளார்.

Nagarjuna : தனுஷின் குபேரா.. டப்பிங் பணியை முடித்த நாகார்ஜுனா!
நாகார்ஜுனாவின் குபேரா திரைப்படம் Image Source: X
barath-murugan
Barath Murugan | Published: 07 Jun 2025 18:04 PM

தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலாவின் (Sekhar Kammula) இயக்கத்தில் மிகப் பிரம்மாண்ட கதைக்களத்துடன் உருவாகியுள்ள திரைப்படம் குபேரா (Kuberaa). இப்படத்தில் பிரபல தமிழ் நாயகன் தனுஷ் (Dhanush) முன்னணி ஹீரோவாக நடித்திருக்கிறார். இந்த படத்தில் தனுஷிற்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா (Rashmika Mandanna) இணைந்து நடித்திருக்கிறார். மேலும் தெலுங்கு முன்னணி நடிகரான நாகார்ஜுனாவும் (Nagarjuna) முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். நடிகர் தனுஷ் , நாகார்ஜுனா மற்றும் ஜிம் ஷார்ப் எனத் தமிழ் , தெலுங்கு மற்றும் இந்தி முன்னணி நடிகர்களின் கலவையாக இந்த குபேரா படமானது உருவாகியிருக்கிறது. இந்த படமானது வரும் 2025, ஜூன் 20ம் தேதி முதல் உலகமெங்கும் வெளியாகவுள்ளது. தனுஷின் இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி போன்ற மொழிகளில் வெளியாகவுள்ளதாம்.

இப்படத்தின் ரிலீசிற்கு இன்னும் சில நாட்கள் உள்ள நிலையில், இப்படத்தின் டப்பிங்ப் பணி விறுவிறுப்பாகி நடைபெற்று வந்தது. இதில் நடிகர் நாகார்ஜுனா தனது டப்பிங் பணியை முழுவதுமாக முடித்துள்ளார். இது தொடர்பான தகவலைக் குபேரா படக்குழு வெளியிட்டுள்ளது.

குபேரா படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு :

நாகார்ஜுனாவின் குபேரா :

தெலுங்கு பிரபலம் நாகார்ஜுனா இந்த குபேரா படத்தில் நடிகர் தனுஷிற்கு அடுத்த லீட் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் நாகார்ஜுனா மிகவும் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். படத்தின் டீசரை பார்க்கும்போது , நாகார்ஜுனா ஒரு சமூக ஆர்வல போல நடித்துள்ளார் என்று தெரிகிறது. இந்த குபேரா படமானது அரசியல் கலந்த திரில்லர் கதைக்களத்துடன் உருவாகியுள்ளதாக இயக்குநர் சேகர் கம்முலாவே தெரிவித்திருந்தார்.

தனுஷின் குபேரா படம் :

இந்த குபேரா படத்தில் தனுஷ் இரு வேடத்தில் நடித்திருப்பது போலத் தெரிகிறது. ஒரு வேடத்தில் பிச்சைக்காரனாகவும், மற்றொரு வேடத்தில் சாதாரண நபரைப் போலவும் நடித்திருக்கிறார். இந்த படத்திற்குப் பிரபல இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருக்கிறார். இவரின் இசையமைப்பிலிருந்து இப்படத்தில் இரு பாடல்கள் வெளியாகியிருக்கிறது.

மேலும் இந்த குபேரா படத்தின் ரிலீசிற்கு இன்னும் சில நாட்கள் மட்டும் உள்ள நிலையில், விரைவில் இப்படத்தின் ட்ரெய்லர் குறித்தான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படமானது தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் மலையாளம் பொன்னர் மொழிகளில் வரும் 2025, ஜூன் 20ம் தேதியில் வெளியாகிறது. பான் இந்திய திரைப்படமாக்க உருவாகியுள்ள இந்த குபேரா படமானது நிச்சயம் பெரும் வரவேற்பை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.