பைசன் படத்தை மணிரத்னம் பாராட்டி அனுப்பிய மெசேஜ்… மாரி செல்வராஜ் சொன்ன விசயம்
Mari Selvaraj: இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்று வரும் படம் பைசன் காளமாடன். இந்தப் படத்திற்கு இயக்குநர் மணிரத்னம் பாராட்டி வாழ்த்து தெரிவித்தது குறித்து இயக்குநர் மாரி செல்வராஜ் வெளிப்படையாக பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

மணிரத்னம் - மாரி செல்வராஜ்
தமிழ் சினிமா மட்டும் பான் இந்திய அளவில் பிரபல இயக்குநராக வலம் வருபவர் இயக்குநர் மணிரத்னம் (Director Maniratnam). இவரது இயக்கத்தில் வெளியான படங்கள் பல ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. மேலும் சினிமாவில் இயக்குநராக சாதிக்க வேண்டும் என்று கனவுடன் வரும் பலருக்கு இயக்குநர் மணிரத்னம் ரோல் மாடலாக இருந்து வருகிறார். மேலும் இவரது இயக்கத்தில் இறுதியாக வெளியான படம் தக் லைஃப். இந்தப் படத்தில் நடிகர்கள் கமல் ஹாசன் மற்றும் சிலம்பரசன் இருவரும் முன்னணி நட்சத்திரங்களாக நடித்து இருந்தனர். படம் மீது ரசிகர்கள் மாபெரு எதிர்பார்ப்பை வைத்து இருந்த நிலையில் படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. மேலும் இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்ததாக இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் என்ன படம் உருவாகும் என்று ரசிகர்கள் ஆவளுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
மேலும் இவர் தொடர்ந்து தமிழ் சினிமா மட்டும் இன்றி பான் இந்திய அளவில் வெளியாகும் படங்களில் சிறந்த படங்களைப் பாராட்ட தவறியதில்லை மணிரத்னம். அதன்படி சமீபத்தில் இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிகர் துருவ் விக்ரன் நடிப்பில் வெளியான பைசன் காளமாடன் படத்தை பார்த்துவிட்டு பாராட்டி மெசேஜ் அனுப்பியது குறித்து இயக்குநர் மாரி செல்வராஜ் பேட்டி ஒன்றில் பேசியது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
பைசன் படத்தை மணிரத்னம் பாராட்டி அனுப்பிய மெசேஜ்:
இந்த நிலையில் மாரி செல்வராஜ் பேட்டி ஒன்றில் பேசியபோது, பைசன் படத்திற்கு மணிரத்னம் சாரின் பாராட்டு செய்தியைப் பார்த்து நான் அதிர்ச்சியடைந்தேன். நான் வாழையைக் காட்டியிருக்கிறேன், ஆனால் பைசன் எதிர்பாராதது. பரியேறும் பெருமாள் படத்தின் நேரத்தில் இருந்து என் படம் அவருக்குப் பிடிக்கும். மணிரத்னம் சாரை நான் திருப்திப்படுத்தியதில் மகிழ்ச்சி அடைகிறேன் எனறு இயக்குநர் மாரி செல்வராஜ் பேசியது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.
Also Read… அபிஷன் – அனஸ்வரா படத்தின் ஓடிடி உரிமையைப் பெற்ற பிரபல நிறுவனம்
இணையத்தில் கவனம் பெறும் மாரி செல்வராஜ் பேச்சு:
“I was shocked to see appreciation message from #ManiRatnam sir for #Bison🤯. I have shown #Vaazhai, but Bison was unexpected. He likes my film starting from #PariyerumPerumal times♥️. I’m happy that I have satisfied ManiRatnam sir too🤝”
– #Mariselvarajpic.twitter.com/OMIEm6fWtx— AmuthaBharathi (@CinemaWithAB) October 30, 2025
Also Read… ரசிகர்களால் தியேட்டர் போறதையே நிறுத்திட்டேன் – செல்வராகவன் ஓபன் டாக்