சின்னஞ்சிறு சின்னஞ்சிறு ரகசியமே… 11 ஆண்டுகளை நிறைவு செய்தது ஓ காதல் கண்மணி படம்!

11 Years Of O Kadhal Kanmani Movie: இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் முன்னதாக வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றப் படம் ஓ காதல் கண்மணி. இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி இன்றுடன் 11 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளதை கொண்டாடி வருகின்றனர்.

சின்னஞ்சிறு சின்னஞ்சிறு ரகசியமே... 11 ஆண்டுகளை நிறைவு செய்தது ஓ காதல் கண்மணி படம்!

ஓ காதல் கண்மணி படம்

Published: 

17 Apr 2026 20:15 PM

 IST

தமிழ் சினிமாவில் கடந்த 2015-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 17-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் ஓ காதல் கண்மணி. பிரபல இயக்குநர் மணிரத்னம் இந்தப் படத்தினை எழுதி இயக்கி உள்ளார். ரொமாண்டிக் ட்ராமா பாணியில் வெளியான இந்தப் படத்தில் நடிகர் துல்கர் சல்மான் நாயகனாகவும் நடிகை நித்யா மேனன் நாயகனாகவும் நடித்து இருந்தார். இவர்களுடன் இணைந்து நடிகர்கள்பிரகாஷ் ராஜ்,
லீலா சாம்சன், வினோதினி வைத்தியநாதன், ரம்யா எஸ், பிரபு லக்ஷ்மன், சிவா ஆனந்த், ராம ராமசாமி, ஜான் தேவசகாயம், கனிகா, பி.வி. தோஷி, சிபி புவனா சந்திரன், அஸ்வின் குமார் லட்சுமிகாந்தன், பவித்ரா லட்சுமி, ஆரவ் என பலர் இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தப் படம் திரையரங்குகளில் வெளியான போது ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து இந்தப் படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான மெட்ராஸ் டாக்கீஸ் சார்பாக இயக்குநர் மணிரத்னம் தான் இந்தப் படத்தை தயாரித்து இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து இருந்த நிலையில் படத்தைப் போல பாடல்களும் ரசிகர்களிடையே மாபபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

11 ஆண்டுகளை நிறைவு செய்தது ஓ காதல் கண்மணி படம்:

தமிழ் சினிமா ரசிகர்களிடையே லிவின் ரிலேசன்ஷிப் என்ற ஒன்றை அறிமுகம் செய்து வைத்ததே இந்தப் படம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இந்தப் படத்திற்கு பிறகு அந்த வார்த்தை மிகவும் இயல்பான ஒன்றாக மாறியது. அதன்படி ஒரு திருமணத்தில் சந்தித்திக்கொள்ளும் துல்கர் மற்றும் நித்யா மேனன் இவரும் பேசி பழகி காதலில் விழுகின்றனர். அதன் பிறகு இவர்கள் இருவரும் ஒன்றாக லிவின் வாழ்க்கையை வாழ்ந்து வரும் நிலையில் இறுதியில் எப்படி அவர்களின் வாழ்க்கை மாறுகிறது என்பதே படத்தின் கதை. இந்தப் படத்தை ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்தது குறிப்பிடத்தக்கது. மேலும் படம் திரையரங்குகளில் வெளியாகி இன்றுடன் 11 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. அதனை அமேசான் ப்ரைம் ஓடிடி நிறுவனம் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

Also Read… இருமுகன் பட இயக்குநருடன் விக்ரம் இணையும் புதிய படம்.. அப்டேட் குறித்து படக்குழு வெளியிட்ட பதிவு!

அமேசான் ப்ரைம் நிறுவனம் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… அஜித் சாருடன் பணியாற்றுவது எனது கனவு – அவருடன் படம் கைவிடப்பட்டது குறித்து விக்னேஷ் சிவன் பேச்சு!

Follow Us
Related Stories
யூத் முதல் உஸ்தாத் பகத் சிங் வரை… தென்னிந்திய மொழிகளில் இந்த வாரம் ஓடிடி ரிலீஸ அப்டேட் இதோ
Yash: தந்தை – மகன் பழிவாங்கும் கதை.. டாக்ஸிக் படம் இப்படித்தான் இருக்கும் – யாஷ் சொன்ன விஷயம்!
அன்பு பொழிந்துகொண்டே இருக்கிறது… வசூலில் ரூபாய் 50 கோடியைக் கடந்தது லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படம்
தளபதி விஜய்யின் தவெக-வில் இணைந்த சீரியல் நடிகர்கள்.. அட யார் யார் தெரியுமா?
Sai Abhynkkar: தனுஷின் டி55 படத்தின் இசையமைப்பில் தீவிரமாக இறங்கிய சாய் அபயங்கர் – வைரலாகும் பதிவு!
இவருக்கு 60 வயசுனு சொன்னா யாராச்சும் நம்புவாங்களா? பிறந்த நாளில் வீடியோ வெளியிட்ட விக்ரம் – கொண்டாட்டத்தில் ரசிகர்கள்
வெறும் 9 ரூபாய் சம்பள உயர்வு.. இணையத்தில் வைரலாகும் பதிவு..
பெங்களூருவில் 500 ரூபாயில் வாழ முடியும் - வைரலாகும் பெண்ணின் அனுபவம்
கிளினிக்குள் சிக்கிய சிறுவன்: இணையத்தில் வைரலாகும் வீடியோ..
காதலனுக்காக பெற்றோருக்கு விஷம் கொடுத்த சிறுமி.. இணையத்தில் கசிந்த ஆடியோ..