‘லோகா’ படத்தின் ஒடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Lokah Chapter 1 Ott release: இந்திய அளவில் அதிக வசூலை குவித்த முதல் ஃபீமேல் சென்ட்ரிக் சூப்பர் ஹீரோ திரைப்படம் என்கிற பெருமையை பெற்ற ‘லோகா’ திரைப்படத்தின் ஒடிடி ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஏற்கெனவே, படத்தின் இரண்டாம் பாகம் டொவினோ தாமஸின் கதையை மையப்படுத்தியதாக இருக்கும் என்று அறிவிக்கப்பட்டது. அத்துடன், 'Lokah Chapter 2' பற்றிய அறிவிப்பு வீடியோ எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.

லோகா படத்தின் ஒடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

லோகா ஒடிடி ரிலீஸ் அறிவிப்பு

Updated On: 

24 Oct 2025 16:49 PM

 IST

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் துல்கர் சல்மானின் வேஃபேரர் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் உருவான ‘லோகா’ (Lokah) திரைப்படத்தின் ஒடிடி ரிலீஸ் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. அண்மையில் வெளியான இப்படத்திற்கு மலையாளத்தில் மட்டுமில்லாமல், தெலுங்கு, தமிழ், இந்தி ஆகிய பிற மொழிகளிலும் நல்ல வரவேற்பு கிடைத்தது. இதைத்தொடர்ந்து, பிற மாநிலங்களிலும் படத்தை டப் செய்து தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டது. ஓணம் பண்டிகையை ஒட்டி வெளியான இப்படம் உலகளவில் ரூ.300 கோடி வசூலை தாண்டி மலையாளத்தின் அதிக வசூலை குவித்த படமாக மாறியது. இப்படத்திற்கு எதற்கு இவ்வளவு வரவேற்பு கிடைத்தது என்பதே தெரியாத அளவுக்கு எதிர்பாராத வரவேற்பு கிடைத்ததாகவும் விமர்சங்கள் எழுந்தன.

‘லோகா’ எதைப் பற்றிய கதை:

மலையாள நாட்டுப்புற தொன்ம காதாபாத்திரமான ‘கள்ளியங்காடு நீலி’ ஐ இன்ஸ்பிரேஷனாக கொண்டு ஆக்ஷன் ஜானரில் உருவான திரைப்படமே ‘லோகா’. இது இந்தியாவின் முதல் பெண் சூப்பர் ஹீரோ படம் என்று கருதப்படுகிறது. கல்யாணி பிரியதர்ஷன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். டான்ஸ் மாஸ்டர் சாண்டி இப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்த நிலையில், அவரது வில்லத்தனம் அச்சுறுத்தம் வகையில் அசத்தலாக இருந்ததாக பெரிதும் பேசப்பட்டது.

Also read: மம்மூட்டியின் பிளாக் அன்ட் வைட் திரில்லர் படம்.. உங்களை நிச்சயம் அறவிடும்.. மிஸ் பண்ணாம பாருங்க!

கடந்த சில ஆண்டுகளில் மலையாள திரைப்படங்களுக்கு இந்தியளவில் பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது. அப்படி மலையாளத்தில் வெளியாகி இந்திய அளவில் பெரும் வெற்றி பெற்ற ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ திரைப்படம் ரூ.200 கோடி வசூலித்த முதல் மலையாள படமாக சாதனை படைத்தது. அதன்பின், மோகன்லால் நடித்த எம்புரான் திரைப்படம் உலகளவில் ரூ.260 கோடிக்கும் மேல் வசூலித்து அதிக வசூல் ஈட்டிய படமாக சாதனை படைத்தது. இந்நிலையில், மோகன்லால் படத்தின் சாதனையை முறியடித்து ரூ.300 கோடிக்கும் மேல் வசூலித்து லோகா திரைப்படம் முதலிடத்தை பிடித்துள்ளது.

தாமதமான ஒடிடி ரிலீஸ்:

முன்னதாக, இப்படம் 25 நாட்களை கடந்து திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருந்த நிலையில் ஒடிடியில் விரைவில் வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகின. இந்த தகவலுக்கு மறுப்பு தெரிவித்து விளக்கமளித்த படத்தின் தயாரிப்பாளர் துல்கர் சல்மான், இப்போதைக்கு லோகா திரைப்படம் ஒடிடியில் வெளியாகாது. போலியான தகவல்களை நம்ப வேபாமல் அதிகாரப்பூர்வமான அறிவிப்பிற்காக ரசிகர்கள் காத்திருக்குமாறு கூறியிருந்தார்.

Also read: பர்த்டே பாய் நிவின் பாலியின் ஓம் சாந்தி ஓஷானா படத்தை பார்த்து இருக்கீங்களா? அப்போ மிஸ் செய்யாமல் பாருங்க

ஒடிடி ரிலீஸ் தேதி:

இதைத்தொடர்ந்து, திரையரங்குகளில் படத்தை பார்க்க முடியாதாவர்கள் ஒடிடி ரீலிஸூக்காக காத்திருந்த நிலையில் தற்போது அதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் அக்டோபர் 31ம் தேதி ஜியோ ஹாட்ஸ்டார் ஒடிடி தளத்தில் வெளியாகும் என படக்குழு இன்று போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.