நாளை திரையரங்குகளில் வெளியாகும் வித் லவ் படம்… பிரிவியூ ஷோ பார்த்தவர்களின் விமர்சனம் இதோ
With Love Movie X Review: தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆகி தற்போது நாயகனாகவும் அறிமுகம் ஆகிறார் அபிஷன் ஜீவிந்த். இவரது நடிப்பில் உருவாகி உள்ள வித் லவ் படத்தின் பிரிவியூ ஷோவை பார்த்தவர்கள் தங்களது விமர்சனத்தை தெரிவித்து உள்ளனர்.

வித் லவ்
தமிழ் சினிமாவில் கடந்த 2025-ம் ஆண்டு வெளியாகி மக்களிடையே தமிழ் சினிமா ரசிகர்களிடையே மட்டும் இன்றி தென்னிந்தியா முழுவதும் மாபெரும் வரவேற்பைப் பெற்றப் படம் டூரிஸ்ட் ஃபேமிலி. இந்தப் படத்தை இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் எழுதி இயக்கி இருந்தார். இவர் இயக்குநராக அறிமுகம் ஆன முதல் படமே மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தை தொடர்ந்து அவர் படம் இயக்குவார் என்று எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் அடுத்ததாக அவர் நாயகனாக அறிமுகம் ஆகும் செய்தி மக்களிடையே சர்ப்ரைஸாக இருந்தது. இந்தப் படத்தை அவருடன் இணைந்து டூரிஸ்ட் ஃபேமிலி படத்தில் பணியாற்றிய மதன் இயக்கியுள்ளார். வித் லவ் என்று பெயர் வைக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில் அபிஷனுக்கு ஜோடியாக நடிகை அனஸ்வரா ராஜன் நடித்துள்ளார்.
மேலும் சௌந்தர்யா ரஜினிகாந்த் இந்தப் படத்தை தயாரித்து உள்ள நிலையில் படத்திற்கு இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். படம் நாளை 06-ம் தேதி பிப்ரவரி மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த நிலையி இந்தப் படத்தின் பிரிவியூ ஷோவைப் பார்த்தவர்கள் தங்களது விமர்சனங்களை தெரிவித்து உள்ளனர். அதனைத் தற்போது பார்க்கலாம்.
வித் லவ் படத்தின் எக்ஸ் விமர்சனம் இதோ:
#WithLove is wrapped with Lots and Lots of Love ♥️♥️♥️. The journey they set out to meet their High School sweet hearts for one last time is Heartwarming 🫠. Movie feels like reading a treasured Greeting card, long lost slam book, a personal diary.
Dear @Abishanjeevinth. You… pic.twitter.com/gQourVl8wr
— Rathna kumar (@MrRathna) February 4, 2026
வித் லவ் படம் மிகுந்த அன்புடன் பொதிந்துள்ளது. தங்கள் உயர்நிலைப் பள்ளி காதலர்களைக் கடைசியாக ஒருமுறை சந்திப்பதற்காக அவர்கள் மேற்கொள்ளும் பயணம் மனதை உருக்கும் விதமாக உள்ளது. இந்தத் திரைப்படம் ஒரு பொக்கிஷமான வாழ்த்து அட்டை, நீண்ட நாட்களுக்கு முன்பு தொலைந்துபோன ஸ்லாம் புக், ஒரு தனிப்பட்ட நாட்குறிப்பு ஆகியவற்றைப் படிப்பது போன்ற உணர்வைத் தருகிறது.
வித் லவ் படத்தின் எக்ஸ் விமர்சனம் இதோ:
#WithLove [4/5] : A Fantastic Rom-com with lot of nostalgia..
Two high-school friends set out on a journey to meet their respective first lovers.. In the process, they fall in love..
First love vs Present love..
The entire movie feels very fresh, fun and relatable..… pic.twitter.com/Iz4RmLQuXa
— Ramesh Bala (@rameshlaus) February 3, 2026
உயர்நிலைப் பள்ளி நண்பர்களான இருவர், தங்களின் முதல் காதலர்களைச் சந்திக்க ஒரு பயணத்தைத் தொடங்குகிறார்கள். அந்தப் பயணத்தின்போது, அவர்கள் ஒருவரையொருவர் காதலிக்கத் தொடங்குகிறார்கள். முதல் காதல் Vs தற்போதைய காதல்.. இந்த முழுப் படமும் மிகவும் புத்துணர்ச்சியுடனும், வேடிக்கையாகவும், யதார்த்தமாகவும் இருக்கிறது.
வித் லவ் படத்தின் எக்ஸ் விமர்சனம் இதோ:
#WithLove the school portions bring a lot of nostalgic moments ♥️
They’re very convincing and easily relatable to our own school memories 👨🏫👩🏫
The actors have done an extraordinary job 👌
Especially @Abishanjeevinth that too in his first film ⭐ He is here to stay for the long… pic.twitter.com/tHUd1PxY5G— Sugumar Srinivasan (@Sugumar_Tweetz) February 4, 2026
பள்ளிப் பகுதிகள் நிறைய ஏக்கமான தருணங்களைக் கொண்டு வருகின்றன.
அவை மிகவும் நம்பகத்தன்மையுடன் இருப்பதோடு, நம்முடைய சொந்தப் பள்ளி நினைவுகளுடன் எளிதில் ஒன்றிப்போக வைக்கின்றன. நடிகர்கள் மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.
வித் லவ் படத்தின் எக்ஸ் விமர்சனம் இதோ:
Watched #WithLove ❤️ — LOVED IT!
• A beautiful, heartwarming rom-com on relationships 💕
• Perfectly rekindles nostalgic school days while keeping us entertained throughout
• Clean, lovable comfort film with bright visuals, good music & natural performances 👏
•… pic.twitter.com/9kC9QlbsZD— Cinema Cinema (@Reyas_Cena25) February 3, 2026
உறவுகளைப் பற்றிய அழகான, மனதைத் தொடும் காதல் நகைச்சுவைத் திரைப்படம். பள்ளி நாட்களை மீண்டும் நினைவுபடுத்தி, நம்மை மகிழ்விக்கிறது. பிரகாசமான காட்சிகள், நல்ல இசை மற்றும் இயல்பான நடிப்புடன் கூடிய சுத்தமான, அன்பான ஆறுதல் படம்.
Also Read… அனிமல் பார்க் படத்தின் ஷூட்டிங் எப்போது தொடங்கும் – இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா ஓபன் டாக்
வித் லவ் படத்தின் எக்ஸ் விமர்சனம் இதோ:
#WithLove – Entertaining First Half 😁
School Portion Scenes Work Well 🤝 Kutty Twist Before Intermission Is Unexpected And Hilarious 😅@Abishanjeevinth Perfectly Suits The Role 👍 #AnaswaraRajan Cute 😍
Aiyoo Kadhale Song Gives Good Vibes In The Theatre 🕺
— Trendsetter Bala (@trendsetterbala) February 3, 2026
பள்ளிப் பகுதி காட்சிகள் சிறப்பாக அமைந்துள்ளன. இடைவேளைக்கு முந்தைய சிறிய திருப்பம் எதிர்பாராததாகவும் வேடிக்கையாகவும் இருக்கிறது. அபிஷன் ஜீவிந்த் அந்த கதாபாத்திரத்திற்கு கச்சிதமாகப் பொருந்துகிறார். அனஸ்வரா ராஜன் அழகாக இருக்கிறார்.
Also Read… என்னால் விஜயை பிரித்து பார்க்க முடியாது – நடிகர் சிலம்பரசன்