அஜித்குமார் குறித்து நெகிழ்ந்து பேசிய ஜிவி பிரகாஷ் குமார் – வைரலாகும் வீடியோ

GV Prakash Kumar Talks About Ajith Kumar: தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார். இவர் சமீபத்தில் விழா ஒன்றில் கலந்துகொண்ட போது அங்கு நட்டிகர் அஜித் குமார் குறித்து பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

அஜித்குமார் குறித்து நெகிழ்ந்து பேசிய ஜிவி பிரகாஷ் குமார் - வைரலாகும் வீடியோ

ஜிவி பிரகாஷ் மற்றும் அஜித் குமார்

Published: 

01 Mar 2026 11:34 AM

 IST

தமிழ் சினிமாவில் குழந்தையாக இருக்கும் போதே பாடல்களைப் பாடி பிரபலமானவர் ஜிவி பிரகாஷ் குமார். அதனைத் தொடர்ந்து இவர் கடந்த 2006-ம் ஆண்டு வெளியான வெயில் என்ற படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகம் ஆனார். இந்தப் படத்தில் வெளியான பாடல்கள் அனைத்துமே பட்டிதொட்டி முதல் சிட்டி வரை மாபெருவம் வரவேற்பைப் பெற்றது. மேலும் தற்போது வரை அந்தப் பாடல்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. இசையமைப்பாளராக அறிமுகமாகி ஒரு படம் மட்டுமே இசையமைத்து இருந்த ஜிவி பிரகாஷிற்கு இரண்டாவது படத்திலேயே நடிகர் அஜித் குமார் படத்திற்கு இசையமைக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்த வாய்ப்பு அவருக்கு மிகப்பெரியதாக இருந்தது என்றே கூறலாம். அதன்படி கடந்த 2007-ம் ஆண்டு நடிகர் அஜித் குமார் நடிப்பில் வெளியான கிரீடம் படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்து இருந்தார்.

இந்தப் படத்தில் நடிகர்கள் அஜித் குமார் மற்றும் த்ரிஷா கிருஷ்ணன் இருவரும் ஜோடியாக நடித்து இருந்த நிலையில் படத்தை இயக்குநர் ஏ.எல்.விஜய் இயக்கி இருந்தார். படம் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது போல பாடல்களும் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்தப் படத்தில் இசையமைத்தது குறித்தும் அடுத்தடுத்து அஜித் படங்களுக்கு இசையமைத்தது குறித்து எமோஷ்னலாக ஜிவி பிரகாஷ் குமார் பேசியாது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

அஜித்குமார் குறித்து நெகிழ்ந்து பேசிய ஜிவி பிரகாஷ் குமார்:

இந்த நிலையில் சமீபத்தில் விழா ஒன்றில் பேசிய ஜிவி பிரகாஷ் குமார் அஜித் குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார். அதில் அவர் கூறியதாவது, கீரீடம் படக் காலத்தில், அஜித் குமார் சார் என்னுடைய இரண்டாவது படத்தில் வாய்ப்பு கொடுத்த போதிலும், நான் ஒரு வளர்ந்து வரும் இசையமைப்பாளராக தான் இருந்தேன். அதனைத் தொடர்ந்து நாங்கள் குட் பேட் அக்லி படத்தின் மூலம் இணைந்து வெற்றி பெற்றோம். இப்போது மூன்றாவது முறையாக பந்தயம் தொடர்பான படத்தில் இணைந்து பணியாற்றுகிறேன் என்றும் தெரிவித்தார். இது தற்போது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

Also Read… விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா மந்தனா கல்யாண ஸ்பெஷல்… ரணபாலி படத்திலிருந்து வெளியானது பாடல்!

இணையத்தில் வைரலாகும் ஜிவி பிரகாஷ் குமார் பேச்சு:

Also Read… ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகும் டெக்ஸ்லா படம்… கவனம் ஈர்க்கும் டீசர்

Follow Us
பழைய ரூபாய் நோட்டுகளை கண்டுபிடித்த பெண் - வைரலாகும் வீடியோ
லாபத்தின் 70% போனஸாக வழங்கிய சீன நிறுவனம்.. இணையத்தில் வைரல்..
கனவில் துரத்தும் மர்ம நபர்… ஜியோ ஹாட்ஸ்டாரில் வெளியாகும் ‘சீக்ரெட் ஸ்டோரீஸ்
பழைய சிம் கார்டுகளிலிருந்து தங்கம்: வைரலான வீடியோவும் எழுந்த எச்சரிக்கையும்