AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Tamil Nadu Election 2026 Live: தமிழக வெற்றிக்கழக தேர்தல் அறிக்கையை இன்று வெளியிடுகிறார் விஜய்..

Tamil Nadu Election 2026 Live: தமிழகத்தைப் பொறுத்தவரையில், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம், நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழக வெற்றிக் கழகம் ஆகிய கட்சிகள் இடையே நான்கு முனைப் போட்டி நிலவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. தேர்தல் நடைபெற இன்னும் ஒரு வார காலமே உள்ள நிலையில், தேசிய தலைவர்களும் தமிழகத்திற்கு வருகை தந்து வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Updated On: 16 Apr 2026 08:23 AM IST
Share
Tamil Nadu Election 2026 Live: தமிழக வெற்றிக்கழக தேர்தல் அறிக்கையை இன்று வெளியிடுகிறார் விஜய்..
தமிழ்நாடு தேர்தல் நேரலை

LIVE NEWS & UPDATES

  • 16 Apr 2026 08:23 AM (IST)

    ஸ்டாலின் முன் விஜய்யை விமர்சித்த பிரேமலதா..

    நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் மற்றும் அவரது அரசியல் நிலைப்பாடு குறித்துப் பேசிய பிரேமலதா, அரசியலில் அனுபவம் மிக முக்கியம் என்பதைச் சுட்டிக்காட்டினார். “75 வருஷ பாரம்பரியம் கொண்ட கட்சிகள் இருக்கும் இடத்தில், நீங்கள் இப்போதுதான் லாலிபாப் சாப்பிடும் ஒரு ‘ஃபர்ஸ்ட் பேபி’. அரசியலைப் பொறுத்தவரை நீங்கள் ஒரு ஹீரோ அல்ல, ஒரு ‘லிட்டில் பாய்’ (Little Boy) தான்” என விமர்சித்தார்.

  • 16 Apr 2026 07:33 AM (IST)

    யாரெல்லாம் தபால் வாக்கை பயன்படுத்தலாம்?

    சென்னையில் உள்ள 16 தொகுதிகளில், 85 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் வரையறுக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் வீட்டிலிருந்தபடியே அஞ்சல் வாக்குப்பதிவு செய்யலாம். தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களும் இந்த வாய்ப்பை பயன்படுத்தி தபால் வாக்குகளை பதிவு செய்யலாம்.

  • 16 Apr 2026 07:21 AM (IST)

    சென்னையில் தொடங்கிய தபால் வாக்குப்பதிவு..

    தபால் வாக்குப்பதிவு முறை தற்போது தொடங்கியுள்ளது. சென்னையில் உள்ள 16 தொகுதிகளிலும் அஞ்சல் வாக்குப்பதிவு ஏப்ரல் 16, 17, 18 ஆகிய நாட்களில் நடைபெறும் என மாவட்ட தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.

  • 16 Apr 2026 07:00 AM (IST)

    இன்று வெளியாகும் தவெக தேர்தல் அறிக்கை..

    தேர்தல் நெருங்கும் நிலையில் தமிழக வெற்றிக் கழக தேர்தல் அறிக்கையை இன்று மாலை அக்கட்சியின் தலைவர் விஜய் வெளியிடுகிறார்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் இன்னும் சில நாட்களில் நடைபெற இருக்கக்கூடிய சூழலில், அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் வேட்பாளர்கள் அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், பாஜக முன்னாள் மாநில தலைவர் கே. அண்ணாமலை இன்று 7 தொகுதிகளில் பிரச்சாரம் மேற்கொள்கிறார். அதேபோல், திமுக தலைவர் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின், தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் உள்ளிட்டோரும் தங்களது பிரச்சாரத் திட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் அறிக்கையை இன்று மாலை விஜய் வெளியிடுகிறார்.

தமிழகத்தைப் பொறுத்தவரையில், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம், நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழக வெற்றிக் கழகம் ஆகிய கட்சிகள் இடையே நான்கு முனைப் போட்டி நிலவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. தேர்தல் நடைபெற இன்னும் ஒரு வார காலமே உள்ள நிலையில், தேசிய தலைவர்களும் தமிழகத்திற்கு வருகை தந்து வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Published On - Apr 16,2026 6:58 AM

Follow Us