பள்ளியில் இருந்தே நானும் சைந்தவியும் நல்ல நண்பர்கள் – ஜிவி பிரகாஷ் குமார்

GV Prakash Kumar: இசையமைப்பாளர் மற்றும் நடிகர் என சினிமாவில் பன்முகத் தன்மை கொண்டவராக இருப்பவர் ஜிவி பிரகாஷ் குமார். இவர் சமீபத்தில் தனது மனைவி பாடகி சைந்தவி உடனான திருமண உறவை முடித்துக்கொண்டார். அதனைத் தொடர்ந்து இவர்களது பாடல் வீடியோக்கள் தொடர்ந்து சமூக வலைதளப் பக்கத்தில் வைரலாகி வருகின்றது.

பள்ளியில் இருந்தே நானும் சைந்தவியும் நல்ல நண்பர்கள் - ஜிவி பிரகாஷ் குமார்

ஜிவி பிரகாஷ் குமார் மற்றும் சைந்தவி

Published: 

27 Jul 2025 18:10 PM

இசையமைப்பாளர் மற்றும் நடிகர் என தமிழ் சினிமாவில் ஒரு கலக்கு கலக்கி வருபவர் ஜி.வி. பிரகாஷ் குமார் (GV Prakash Kumar). இவர் கடந்த 2013-ம் ஆண்டு தனது பள்ளியில் ஒன்றாக படித்த சைந்தவி என்பவரை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். இவரும் பல பாடல்களைப் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் இருவருக்கும் ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் கடந்த 2024-ம் ஆண்டு முதல் தங்கள் திருமண பந்ததில் இருந்து பிரிவதாக இருவரும் அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். அதனைத் தொடர்ந்து 2025-ம் ஆண்டு குடும்பநல நீதிமன்றத்தில் சட்டப்பூர்வமாக விவாகரத்தைப் பெற்றுக் கொண்டனர். 11 ஆண்டு கால திருமண வாழ்க்கையில் இருந்து ஜி.வி.பிரகாஷ் மற்றும் சைந்தவி இருவரும் பிரிந்தது அவர்களின் ரசிகர்களிடையே மிகுந்த வருத்தத்தை கொடுத்தது குறிப்பிடத்தக்கது.

இந்த பிரிவிற்கு பிறகு ஜி.வி. பிரகாஷ் குமார் மற்றும் சைந்தவி இருவரும் பொது நிகழ்ச்சிகளைல் கலந்துகொள்ளும் வீடியோக்கள் அதிகமாக சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றது. மேலும் அவர்கள் இருவரும் இணைந்து இசை நிகழ்ச்சிகளில் பாடும் வீடியோக்களும் இணையத்தில் அதிகமாகப் பகிரப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Also Read… இதனால்தான் எனது குடும்ப வாழ்க்கையை ரகசியமாக வைத்திருக்கிறேன் – லோகேஷ் கனகராஜ் ஓபன் டாக்

சைந்தவி குறித்து வெளிப்படையாக பேசிய ஜி.வி. பிரகாஷ் குமார்:

இந்த நிலையில் இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி. பிரகாஷ் குமார் சமீபத்தில் ஒரு யூடியூப் சேனல் ஒன்றிற்கு பேட்டி அளித்திருந்தார். அதில் சைந்தவி உடனான நட்பு குறித்து ஜி.வி. பிரகாஷ் குமார் வெளிப்படையாக பேசியுள்ளார். அதில் ஜி.வி. பிரகாஷ் குமார் பேசியதாவது நானும் சைந்தவியும் ஸ்கூல் படிக்கும் போது இருந்தே நல்ல ஃப்ரண்ட்ஸ்.

அந்த நட்பு இப்போ வரைக்கும் இருக்கு. எங்களுடைய திருமண பந்தம் முடிவுக்கு வந்தாலும் எங்களுடைய நட்பு எப்போதும் தொடரும். அது மட்டும் இன்றி நாங்கள் இருவரும் எங்களது குழந்தைக்கு எப்போதும் அப்பா அம்மாவாக இருப்போம். அதில் எந்த மற்றமும் இல்லை என்றும் ஜி.வி. பிரகாஷ் அந்த வீடியோவில் பேசியிருந்தது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

ஜிவி பிரகாஷ் குமாரின் எக்ஸ் தள பதிவு:

Also Read… மதராஸி படம் கஜினி மற்றும் துப்பாக்கி மாதிரி இருக்க வேண்டும் என நினைத்தேன் – ஏ.ஆர்.முருகதாஸ்