Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

நாளை ஜூலை 25-ம் தேதி தியேட்டரில் வெளியாகும் படங்கள் என்னென்ன? லிஸ்ட் இதோ!

Theatre Release Movies: தமிழ் சினிமா மட்டும் இன்றி தென்னிந்திய சினிமா முழுவதும் வாரம் வாரம் புதுப் புதுப் படங்கள் திரையரங்குகளில் தொடர்ந்து வெளியாகி வருகின்றது. அந்த வரிசையில் இந்த வாரமும் தென்னிந்திய மொழிகளில் புதுப் படங்கள் திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கின்றது.

நாளை ஜூலை 25-ம் தேதி தியேட்டரில் வெளியாகும் படங்கள் என்னென்ன? லிஸ்ட் இதோ!
படங்கள்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 24 Jul 2025 19:26 PM

மாரீசன்: இயக்குநர் சுதீஷ் சங்கர் இயக்கத்தில் தமிழில் உருவாகியுள்ள படம் மாரீசன். இந்தப் படத்தில் நடிகர்கள்வடிவேலு மற்றும்  (Actor Vadivelu)  ஃபகத் பாசில் (Actor Fahadh Faasil) இருவரும் முன்னணி வேடத்தில் நடித்துள்ளனர். இதற்கு முன்னதாக இவர்கள் இருவரும் இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான மாமன்னன் படத்தில் இணைந்து நடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தில் இவர்களுடன் இணைந்து நடிகர்கள் கோவை சரளா, சித்தாரா, விவேக் பிரசன்னா, பி.எல்.தேனப்பன், லிவிங்ஸ்டன், சரவண சுப்பையா, ரேணுகா, கிருஷ்ணா,டெலிபோன் ராஜா, ஹரிதா, ஸ்ரீநிவாஸ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் ட்ரெய்லர் மற்றும் டீசர் முன்னதாக வெளியாகி ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் படம் நாளை 25-ம் தேதி ஜூலை மாதம் 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கின்றது.

Also read… இசையமைப்பாளர் டூ ஹீரோ… இன்று 50-வது பிறந்த நாளை கொண்டாடும் விஜய் ஆண்டனி!

மாரீசன் படத்தின் ட்ரெய்லர்:

ஹரி ஹர வீர மல்லு: நடிகர் பவன் கல்யாண் நடிப்பி உருவாகியுள்ள படம் ஹரி ஹர வீர மல்லு. இந்தப் படத்தை இயக்குநர்கள் கிரிஷ் ஜாகர்லமுடி மற்றும் ஏ.எம். ஜோதி கிருஷ்ணா ஆகியோர் இணைந்து இயக்கியுள்ளனர். மேலும் இந்தப் படத்தில் நடிகர் பவன் கல்யாண் உடன் இணைந்து நடிகர்கள் பாபி தியோல், நிதி அகர்வால், நர்கிஸ் ஃபக்ரி, நோரா ஃபதேஹி மற்றும் சத்யராஜ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். தெலுங்கு மொழியில் உருவாகியுள்ள இந்தப் படம் இன்று 24-ம் தேதி ஜூலை மாதம் 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. படத்தை பார்த்த ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

Also read… ஹே மின்னலே… இணையத்தில் கவனம் பெறும் சாய் பல்லவியின் இன்ஸ்டா போஸ்ட்!

ஹரி ஹர வீர மல்லு படத்தின் ட்ரெய்லர்:

தலைவன் தலைவி: பசங்க, மெரினா, வம்சம், கேடி பில்லா கில்லாடி ரங்கா, நம்ம வீட்டு பிள்ளை, கடைக்குட்டி சிங்கம் போன்ற ஃபேமிலி செண்டிமெண்ட் படங்களை கொடுத்த ஹிட் இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ளது தலைவன் தலைவி படம். இந்தப் படத்தில் நடிகர் விஜய் சேதுபதி நாயகனாகவும் நடிகை நித்யாமேனன் நாயகியாகவும் நடித்துள்ளனர். மேலும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். படத்தில் இருந்து பாடல்கள் மற்றும் ட்ரெய்லர் முன்னதாக வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது. படம் நாளை 25-ம் தேதி ஜூலை மாதம் 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கின்றது.

Also read…

தலைவன் தலைவி படத்தின் ட்ரெய்லர்: