லவ் இன்சூரன்ஸ் கம்பெனி முதல் TN 2026 முதல்… நாளை எந்தப் படத்தை முதலில் பார்ப்பீங்க
This Week Theatre Release Movies List Here : தமிழ் சினிமாவில் வாரம் வாரம் புதுப் படங்களின் வரவு அதிகரித்துக்கொண்டே இருக்கின்றது. அந்த வகையில் இந்த வாரம் என்ன என்ன புதுப் படங்கள் திரையரங்குகளில் வெளியாகிறது என்பதை தற்போது பார்க்கலாம்.

படங்கள்
லவ் இன்சூரன்ஸ் கம்பெனி: தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநராக வலம் வருபவர் இயக்குநர் விக்னேஷ் சிவன். இவரது இயக்கத்தில் தற்போது உருவாகி உள்ள படம் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி. இந்தப் படத்தில் நடிகர் பிரதீப் ரங்கநாதன் நாயகனாக நடித்து உள்ளார். இவருக்கு ஜோடியாக நடிகை கிருத்தி ஷெட்டி நடித்து உள்ளார். இவர்களுடன் இணைந்து நடிகர்கள் பலர் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர். சோசியல் மீடியா இளைஞர்களை எந்த அளவிற்கு பாதித்து உள்ளது என்பதை மையமாக வைத்து இந்தப் படம் உருவாகி உள்ளது ட்ரெய்லரைப் பார்க்கும் போது தெரிகிறது. மேலும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ள நிலையில் முன்னதாக பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்த நிலையில் படம் நாளை 10-ம் தேதி ஏப்ரல் மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
மனிதன் தெய்வமாகலாம்: இயக்குநர் டெனிஸ் மஞ்சுநாத் எழுதி இயக்கி உள்ள படம் மனிதன் தெய்வமாகலாம். இந்தப் படத்தில் நடிகரும் இயக்குநருமான செல்வராகவன் நாயகனாக நடித்துள்ளார். இவருடன் இணைந்து நடிகர்கள் குஷி ரவி, ஆர்.எஸ்.சதீஷ், கௌசல்யா, மைம் கோபி, ஒய்.ஜி.மகேந்திரா, லிர்த்திகா, சேலம் தீபக், எலா பரத், சுதா, ஜோதிகண்ணன் என பலர் இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர். இந்தப் படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்தது. இந்த நிலையில் படம் நாளை 10-ம் தேதி ஏப்ரல் மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
Also Read… Mamitha Baiju: விஸ்வநாத் அண்ட் சன்ஸ் பட கதையே அப்படிதான்.. முழுக்க ஜாலியான படம் – மமிதா பைஜூ பேச்சு!
TN 2026 படம்: இயக்குநரும் நடிகருமான உமாபதி ராமையா எழுதி இயக்கி உள்ள படம் TN 2026 படம். இந்தப் படம் தமிழ்நாட்டில் நடைபெற்ற அரசியல் ரீதியான நிகழ்வுகளை மையமாக வைத்து ஒரு பொலிட்டிகள் சட்டையர் படமாக உருவாகி உள்ளது. படத்தில் நடிகர்கள் நட்டி நட்ராஜ், தம்பி ராமையா, இளவரசு, எம்.எஸ்.பாஸ்கர், ஷ்ரிதா ராவ், யாஷிகா ஆனந்த், சாந்தினி தமிழரசன், ரெடின் கின்ஸ்லி, சித்ரா லக்ஷ்மன், தலைவாசல் விஜய், ஆண்ட்ரூஸ், விஜி சந்திரசேகர், ஜாவா சுந்தரேசன், வடிவுக்கரசி, தேவி மகேஷ், வடிவுக்கரசி, ஸ்ரீஜாரவி, ஸ்ரீஜா ரவி, ஆதி குமார், இந்திரராஜா ரோபோ, இந்திரராஜா ரோபோ, அத்திராஜா ரோபோ, லொள்ளுசப மாறன் உட்பட பலர் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர். சமீபத்தில் வெளியனா இந்தப் படத்தில் ட்ரெய்லர் தமிழக மக்களிடையே பல கேள்விகளை எழுப்பியது. இந்த நிலையில் படம் நாளை 10-ம் தேதி ஏப்ரல் மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
Also Read… அரசன் படப்பிடிப்பு நிறுத்தம்… பிரச்சனையை முடிக்க முன்வந்த சிலம்பரசன்