விஜயை நேரில் சந்தித்த எதிர்நீச்சல் சீரியல் நடிகை – வைரலாகும் பதிவு!
Kaniha Instagram Post: சன் தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமான சீரியல்களில் ஒன்றாக இருந்துவருவதுதான் எதிர்நீச்சல். இந்த சீரியலின் சீசன் ஒன்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்த நிலையில், சீசன் 2 தற்போது ஒளிபரப்பாகிவருகிறது. இந்த் சீரியல்ல நடிகை கனிஹா நடித்துவரும் நிலையில், இவர் சமீபத்தில் விஜய்யை நேரில் சந்தித்துள்ளார்.
தமிழில் கடந்த 90ஸ் மற்றும் 2000ம் ஆண்டு தொடக்கத்தில் பிரபலமான நடிகைகளில் ஒருவராக இருந்தவர் நடிகை கனிஹா (Kaniha). இவர் தமிழில் தல அஜித்குமாருடன் (Ajith Kumar) படத்தில் ஜோடியாக நடித்துள்ளார். இவர் தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் போன்ற மொழி படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். இவர் தமிழில் பைவ் ஸ்டார் (Five Star) என்ற படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமான நிலையில், அதை தொடர்ந்து படங்களில் நாயகியாக நடிக்க தொடங்கியிருந்தார். மேலும் கடந்த 2006ம் ஆண்டில் வெளியான அஜித்தின் வரலாறு (Varalaru) என்ற படத்தில், காயத்ரி என்ற வேடத்தில் நடித்து மிகுந்த வரவேற்பை பெற்றிருந்தார். அந்த வகையில் இதையடுத்து இவர் சில படங்களில் நடித்துவந்தார். மேலும் அவ்வப்போது படங்களில் முக்கியமான வேடங்களிலும் நடித்துவருகிறார்.
கடந்த 2025ம் ஆண்டில் பாதிராஜாவின் நடிப்பில் வெளியான நிறங்கள் மாறும் உலகில் என்ற படத்தில் நடித்திருந்தார். மேலும் தற்போது தமிழில் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் எதிர்நீச்சல் சீசன் 2 சீரியலில் ஈஸ்வரி குணசேகரன் என்ற வேடத்தில் நடித்துவருகிறார். அந்த வகையில் இவர் சமீபத்தில் தளபதி விஜயை (Thalapathy Vijay) நேரில் சந்தித்துள்ளார். இது தொடர்பான பதிவை அவர் வெளியிட்டுள்ளார்.




இதையும் படிங்க: சிவகார்த்திகேயன் – வெங்கட்பிரபு படம் என்ன ஆனது? தயாரிப்பாளர் சொன்ன சுவாரஸ்ய விசயம்
விஜயை சந்தித்தது குறித்து நடிகை கனிஹா வெளியிட்ட இன்ஸ்டாகிராம் பதிவு:
View this post on Instagram
அந்த பதிவில் அவர், “அது நடந்துவிட்டது. அவருடன் திரையைப் பகிர்ந்துகொள்ளும் வாய்ப்பே கிடைக்கவில்லை. ஆனால் இன்று அவரை நேரில் பார்த்தது உண்மையிலேயே ஒரு அற்புதமான தருணம். பாதுகாப்புப் படையினர் அவரை அவசரமாக அழைத்துச் சென்றுகொண்டிருந்தபோதிலும், அவர் சற்று நின்று, எங்களைக் கவனித்து, பணிவுடன் சில கனிவான வார்த்தைகளைப் பேசினார். வெற்றி சக்தி உங்களுடன் இருக்கட்டும் விஜய் சார். நாங்கள் அனைவரும் உங்களுக்காக இருக்கிறோம்” என அதில் நடிகை கனிஹா குறிப்புட்டு எழுதியுள்ளார். தற்போது இந்த பதிவானது ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது.
இதையும் படிங்க: வண்டார்கொடி என் வண்ணக்கிளி என் உள்ளாரா உன்னால காயம் – சூர்யாவின் நடிப்பில் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்ற ரெட்ரோ ஒரு ஆண்டு நிறைவடைந்தது
சன் தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமான சீரியல்களில் ஒன்றாக இருந்துவர்வது எதிர்நீச்சல். இந்த சீரியலின் சீசன் ஒன்றில் நடிகை மதுமிதா நடித்திருந்த நிலையில், டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடத்தில் இருந்தது. அந்த வகையில் அவர் விஜய் டிவியில் அய்யனார் துணை சீரியலுக்கு மாறிவிட்டார். அந்த வகையில் தற்போது எதிர்நீச்சல் சீசன் 2 சீரியல் ஒளிபரப்பாகிவரும் நிலையில், நடிகை கனிஹாவும் மிகவும் முக்கியமான வேடத்தில் நடித்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.