Entertainment News Live Updates: மோனிகா பாடலில் நடனமாடும்போது சிவராத்திரி விரதத்தில் இருந்தேன் – பூஜா ஹெக்டே!
Entertainment News in Tamil, 18 July 2025, Live Updates: ரஜினிகாந்த்தின் கூலி படம் வருகிற ஆகஸ்ட் 14, 2025 அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த நிலையில் இந்தப் படத்தில் இடம்பெற்ற மோனிகா பாடலில் நடனமாடியபோது தான் சிவராத்திரி விரதத்தில் இருந்ததாக பூஜா ஹெக்டே தெரிவித்துள்ளார்.

ரஜினிகாந்த் - பூஜா ஹெக்டே
தமிழ் சினிமாவின் அப்டேட்களை உடனுக்குடன் தெரிந்துகொள்ளும் விதமாக இந்த லைவ் பிளாக் உதவும். நேற்றைய சினிமா அப்டேட்களை பொருத்தவரை, டெங்கு காய்ச்சல் காரணமாக, நடிகர் விஜய் தேவரகொண்டா, (Vijay Deverakonda) தனியார் மருத்துவமனையில அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தற்போது, அவர் மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ளதாகவும், விரைவில் அவர் சிகிச்சை முடிந்து வீடு திரும்புவார் என தகவல் வெளியாகி உள்ளது. அது தொடர்பான அப்டேட்களை உடனுக்குடன் இங்கு காணலாம். அதேபோல புதுப்பட ரிலீஸ் தொடர்பான செய்திகள், புதுப்படங்களுக்கும் வரும் ரிவியூ மற்றும் ரிவிட்டர் ரிவியூக்களை இங்கு பார்க்கலாம்.
தமிழ் சினிமா வரலாற்றை பொருத்தவரை, தனது பயணத்தை 1918 ஆம் ஆண்டில் இயக்குநர் ஆர். நடராஜ முதலியார் இயக்கிய “கீச்சக வாதம்” என்ற ஊமைப் படத்தின் மூலம் தொடங்கியது. இந்த ஆரம்பம், பின்னாளில் ஒரு பெரிய திரையுலக மரபாக வளர்ந்தது. நடிப்பு, இசை, தயாரிப்பு என தமிழ் சினிமா பல துறைகளில் முன்னேறி, பல திறமைசாலிகளை உருவாக்கியுள்ளது. அவர்கள் பலர் இந்தியாவின் பிற மொழிச் சினிமாக்களில் மட்டுமல்ல, உலக நாடுகளிலும் தங்களது திறமையை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், உலகளவில் தமிழ் சினிமாவை “Kollywood” என்றழைப்பது வழக்கமாகியுள்ளது. இந்திய சினிமாவில் ஹிந்தி படங்களுக்கு அடுத்தபடியாக தமிழ்ப்படங்களுக்கே உலகளவில் அதிக ரசிகர்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது. மலேசியா, சிங்கப்பூர், ஜப்பான், இலங்கை உள்ளிட்ட தமிழர்கள் அதிகம் வாழும் நாடுகளில் தமிழ் திரைப்படங்கள் தொடர்ந்து வெளியிடப்படுகின்றன. இதனால், தமிழ் சினிமாவுக்கு உலக அளவில் ஒரு தனித்துவமான அடையாளம் உருவாகியுள்ளது.
சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற க்ளிக் செய்க
LIVE NEWS & UPDATES
-
அர்ஜூன் தாஸ் – அதிதி ஷங்கரின் ஒன்ஸ்மோர் – வெளியான மீண்டுமா பாடல் அப்டேட்!
அர்ஜூன் தாஸ் மற்றும் அதிதி ஷங்கர் இணைந்துள்ள ஒன்ஸ்மோர் திரைப்படத்தில் இருந்து வா கண்ணம்மா, மற்றும் இதயம் ஆகிய பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. குறிப்பாக வா கண்ணம்மா பாடல் சமூக வலைதளங்களில் டிரெண்டானது. இந்த நிலையில் இந்தப் படத்தில் இருந்து மீண்டுமா? என்ற பாடல் ஜூலை 19, 2025 அன்று மாலை 5 மணிக்கு வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
-
உருவாகிறது நரேன் கார்த்திகேயனின் பயோபிக்!
கார் ரேஸ் வீரர் நரேன் கார்த்திகேயனின் வாழ்க்கை வரலாற்றுப் படம் உருவாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தை சியூசூன், மாலிக் போன்ற படங்களை இயக்கிய மகேஷ் நாராயணன் இயக்கவுள்ளார். சில வருடங்களுக்கு முன் மகேஷ் நாராயணன், கமல்ஹாசன் நடிப்பில் ஒரு படத்தை இயக்கவிருந்தார். சில காரணங்களால் அந்தப் படம் கைவிடப்பட்டது. கமலின் விஸ்வரூபம் படத்துக்கு இவர் தான் படத்தொகுப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
நடிகர் விக்ராந்த்திற்கு நன்றி தெரிவித்த பன் பட்டர் ஜாம் படக்குழு!
ராஜூ ஜெயமோகன் நடிப்பில் ஜூலை 18, 2025 அன்று பன் பட்டர் ஜாம் திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்தப் படத்தில் நடிகர் விக்ராந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். இந்த நிலையில் அவருக்கு நன்றி தெரிவித்து தயாரிப்பு நிறுவனம் பதிவிட்டுள்ளது.
நடிகர் விக்ராந்த்திற்கு நன்றி தெரிவித்து படக்குழு வெளியிட்ட பதிவு!
-
கமல் முழு சுந்திரம் கொடுத்தார் – பாபநாசம் இயக்குநர் பேட்டி!
தமிழில் கமல்ஹாசன் நடிப்பில் பாபநாசம் படத்தை இயக்கியவர் ஜீத்து ஜோசப், மலையாள திரிஷ்யம் பட ரீமேக்கான பாபநாசம் தமிழில் ரூ.100 கோடி வசூலித்து வெற்றிப்படமாக அமைந்தது. இந்த நிலையில் ஆனந்த விகடனுக்கு பேட்டியளித்திருந்த ஜீத்து ஜோசப், கமலுடன் பணியாற்றிய அனுபவம் குறித்து பேசியிருக்கிறார். அப்போது பேசிய அவர், கமல் சார் எனக்கு முழு சுதந்திரம் கொடுத்தார். மானிட்டர் பக்கமே வரமாட்டார். பாபநாசம் படம் முடிந்ததும் என்னுடன் மீண்டும் பணியாற்ற விரும்பினார் என்று குறிப்பிட்டுள்ளார்.
-
கிங்டம் படத்தில் அனிருத்தின் இசையால் மகிழ்ச்சியில் விஜய் தேவரகொண்டா!
ஜெர்சி பட இயக்குநர் கௌதம் தின்னூரி இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா ஹீரோவாக நடித்துள்ள படம் கிங்டம். இந்தப் படம் வருகிற ஜூலை 31, 2025 அன்று திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ள நிலையில் அவரது பாடல்கள் மற்றும் பின்னணி இசையைக் கேட்ட விஜய் தேரகொண்டா அவரை அழைத்து பாராட்டியிருக்கிறார்.
-
அமெரிக்காவில் ஒருநாள் முன்னதாக வெளியாகும் கூலி!
நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள கூலி திரைப்படம் இந்தியாவில் வருகிற ஆகஸ்ட் 14, 2025 அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த நிலையில் அதற்கு ஒருநாள் முன்னதாக ஆகஸ்ட் 13, 2025 அன்று இந்திய நேரப்படி காலை 6 மணிக்கு வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது. சன் பிக்சர்ஸின் முந்தைய படங்களான திருச்சிற்றம்பலம், ஜெயிலர், ராயன் ஆகிய படங்கள் அமெரிக்காவில் ஒருநாள் முன்னதாக வெளியாகியிருந்தது.
-
டூரிஸ்ட் ஃபேமிலி எனக்கு ரொம்ப பிடிச்சது – ஜீத்து ஜோசப்
திரிஷ்யம் படம் மூலம் இந்திய அளவில் பிரபலமானவர் இயக்குநர் ஜீத்து ஜோசப். தற்போது இவர் திரிஷ்யம் படத்தின் மூன்றாம் பாகத்தை இயக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில் அவர் தனது சமீபத்திய பேட்டியில் டூரிஸ்ட் ஃபேமிலி படம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அவர் பேசியதாவது, எனக்கு டூரிஸ் ஃபேமிலி படம் பிடிச்சது. கவலைகளோடு படம் பார்க்க வருபவர்களை மேலும் கவலையளிக்க கூடாது எனக் குறிப்பிட்டுள்ளார்.
-
கூலி: மோனிகா பாடலுக்கு நடனமாடும்போது சிவராத்திரி விரதத்தில் இருந்தேன் – பூஜா ஹெக்டே
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள கூலி படத்தில் இருந்து சமீபத்தில் மோனிகா பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்தப் பாடலில் நடனமாடிய அனுபவம் குறித்து நடிகை பூஜா ஹெக்டே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவரது பதிவில், நான் இந்தப் பாடலுக்கு நடனமாடும்போது சிவராத்திரிக்காக விரதத்தில் இருந்தேன் என்று தெரிவித்துள்ளார்.
-
துருவ் விக்ரம் – மாரி செல்வராஜின் பைசன் – வெளியான அப்டேட்!
பா.ரஞ்சித் தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் படம் பைசன். இந்தப் படத்தில் துருவ் விக்ரம் ஹீரோவாக நடிக்க அவருக்கு ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ளார். இந்த நிலையில் இந்தப் படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை ஃபைவ் ஸ்டார் செந்தில் பெற்றுள்ளார். இதுதொடர்பான அறிவிப்பை நடிகர் துருவ் விக்ரம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
பைசன் பட அப்டேட்டை வெளியிட்ட துருவ் விக்ரம்
-
ரஜினிகாந்த்தின் கூலி படத்தில் இருந்து வெளியான அப்டேட்!
நடிகர் ரஜினிகாந்த்தின் கூலி படம் வருகிற ஆகஸ்ட் 14, 2025 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் லோகேஷ் இயக்கியுள்ள இந்தப் படம் பான் இந்திய படமாக உருவாகியுள்ளது. அதற்கு ஏற்ப மலையாளத்தில் இருந்து சௌபின் சாஹிர், தெலுங்கில் இருந்து நாகார்ஜுனா, கன்னடத்தில் இருந்து உபேந்திரா, ஹிந்தியில் இருந்து ஆமிர் கான் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த நிலையில் இந்தப் படத்தின் கேரள வெளியீட்டு உரிமையை ஹசன் மீனு அசோசியேட்ஸ் நிறுவன் வாங்கியுள்ளதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
கூலி பட கேரளா வெளியீடு குறித்து சன் பிக்சர்ஸ் பதிவு!
Kerala, Be ready for the #Coolie takeover🔥😎 #Coolie Kerala distribution by HASSAN MEENU ASSOCIATES#Coolie releasing worldwide August 14th @rajinikanth @Dir_Lokesh @anirudhofficial #AamirKhan @iamnagarjuna @nimmaupendra #SathyaRaj #SoubinShahir @shrutihaasan @hegdepooja… pic.twitter.com/cftFA6omKU
— Sun Pictures (@sunpictures) July 18, 2025
-
அட்லி – அல்லு அர்ஜுன் படம் – முழு வீச்சில் இறங்கிய சாய் அபயங்கர்!
அட்லி இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடித்து வரும் படம், பிரம்மாண்டமான சயின்ஸ் பிக்சன் படமாக உருவாகி வருகிறது. இந்தப் படத்துக்கு இளம் இசையமைப்பாளரான சாய் அபயங்கர் இசையமைத்து வருகின்றார். இந்த நிலையில் சாய் அபயங்கருடன் படத்தின் இசை குறித்து பேசும் ஸ்கிரீன்ஷாட்டை இயக்குநர் அட்லி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
-
சிவகார்த்திகேயன் மீது விமர்சனம் – லவ் மேரேஜ் இயக்குநர் வருத்தம்!
சிவகார்த்திகேயன் தன்னை அழைத்து பாராட்டியது விமர்சனத்துக்குள்ளானதாக லவ் மேரேஜ் இயக்குநர் சண்முக பிரியன் வருத்தம் தெரிவித்தார். இதுகுறித்து அவர் பேட்டி ஒன்றில் பேசிய அவர், சிவகார்த்திகேயன் பாராட்டினால் மட்டும் நெகட்டிவ் விமர்சனங்கள் வருகின்றன என்பது புரியவில்லை. இதுவே சூர்யா சார், தனுஷ் சார் பாராட்டினால் யாரும் தவறான கருத்துக்களை தெரிவிக்க மாட்டார்கள் என்று தெரிவித்துள்ளார்.
-
ராஜூ ஜெயமோகனின் பன் பட்டர் ஜாம் படத்தில் கேமியோ ரோலில் பிரபல நடிகர்!
பிக்பாஸ் மூலம் பிரபலமான ராஜூ ஜெயமோகன் பன் பட்டர் ஜாம் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகியுள்ளார். இந்தப் படம் ஜூலை 18, 2025 அன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தில் நடிகர் விக்ராந்த் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார். இந்தப் படம் பாசிட்டிவான விமர்சனங்களைப் பெற்று வருகிறது.
-
Tamil Nadu Rains Live: அடுத்த ஐந்து நாட்களுக்கு கனமழை.. சென்னை வானிலை ஆய்வு மையம்
தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலும் அடுத்த ஐந்து நாட்களுக்கு கனமழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேசமயம் ஜூலை 19,20 ஆகிய இரு தேதிகளில் நீலகிரி, கோவை மாவட்டங்களில் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க
-
விமல் மற்றும் அட்டகத்தி தினேஷை என்னிடம் அறிமுகப்படுத்தியது விஜய் சேதுபதி – பாண்டிராஜ்
தலைவன் தலைவி படம் வருகிற ஜூன் 25 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் இயக்குநர் பாண்டிராஜ், தொகுப்பாளர் கோபிநாத்தின் யூடியூப் பக்கம் ஒன்றிற்கு பேட்டியளித்தார். அந்த பேட்டியில் 96 பட இயக்குநர் பிரேம் குமார் தான் பசங்க படத்தின் ஒளிப்பதிவாளர். அவர் தான் முதலில் விஜய் சேதுபதியை என்னிடம் அறிமுகப்படுத்துகிறார். ஆனால் அவரை ஹீரோ வேடத்துக்கு வேண்டாம் என சொல்கிறேன். பின்னர் விஜய் சேதுபதி விமல் மற்றும் அட்டகத்தி தினேஷ் ஆகியோரை என்னிடம் அறிமுகப்படுத்தினார். அப்படி தேர்ந்தெடுக்கப்பட்டவர் தான் விமல் என்றார்.
-
2025 ஆம் ஆண்டில் அதிகம் வசூல் செய்த படம்
அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் சசிகுமார், சிம்ரன் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த மே 1 ஆம் தேதி வெளியானது. இந்த நிலையில் ரூ.7 கோடி பொருட் செலவில் உருவான இந்தப் படம் ரூ. 90 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது. இந்த நிலையில் இந்த வருடத்தில் அதிக லாபம் சம்பாதித்த படம் என்ற பெருமையை டூரிஸ்ட் பேமிலி படம் பெற்றுள்ளது.
-
பிக்பாஸ் ராஜூவின் பன் பட்டர் ஜாம் படம் எப்படி இருக்கிறது? ‘எக்ஸ்’ விமர்சனம்!
பிக்பாஸ் ராஜு ஜெயமோகனின் பன் பட்டர் ஜாம் படம் ஜூலை 18, 2025 அன்று வெளியாகியுள்ள நிலையில் எக்ஸ் பக்கத்தில் ரசிகர்கள் தங்கள் விமர்சனங்களை பதிவு செய்து வருகின்ரனர். அந்த வகையில் இந்தப் படம் Gen Z இளைஞர்களின் பிரச்னையை பேசுவதாகவும் அனைவரும் ரசிக்கும் வகையிலான ரொமாண்டிக் காமெடி படமாக இருப்பதாகவும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
-
நாடு முழுவதும் 650 ஸ்டண்ட் கலைஞர்களுக்கு இன்சூரன்ஸ் – அக்சய் குமாரின் செயலுக்கு குவியும் பாராட்டு
சமீபத்தில் பா.ரஞ்சித்தின் வேட்டுவம் படப்பிடிப்பில் சண்டைபயிற்சி கலைஞர் விபத்து ஏற்பட்ட உயிரிழந்தார். இந்த சம்பவம் ரசிகர்களிடையே பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் பாலிவுட் நடிகர் அக்சய் குமார், நாடு முழுவதும் உள்ள 650 ஸ்டண்ட் கலைஞர்களுக்கு இன்சூரன்ஸ் எடுத்து கொடுத்திருக்கிறார். இதனையடுத்து அவருக்கு ரசிகர்கல் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
-
விஜய் சேதுபதியுடன் என்ன பிரச்னை? மனம் திறக்கும் பாண்டிராஜ்
தலைவன் தலைவி தொடர்பாக தொகுப்பாளர் கோபிநாத்தின் ரயூடியூப் பக்கத்தில் விஜய் சேதுபதி பேட்டியளித்திருந்தார். அப்போது பேசிய அவர், என்னைப் பற்றி விஜய் சேதுபதியிடம் தொடர்ந்து தவறாக சொல்லிவந்திருக்கிறார்கள். என்னைப் பற்றி அவர் 15 வருடங்களாக தவறாக நினைத்து வந்தார். மேலும் இது தொடர்பாக அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் தெரிவித்திருக்கிறார் என குறிப்பிட்டுள்ளார்.
-
முதன்முறையாக தமிழில் பதிவிட்ட அமிதாப் பச்சன்!
பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் கடைசியாக தமிழில் ரஜினிகாந்த்துடன் இணைந்து வேட்டையன் படத்தில் நடித்திருந்தார். இந்த நிலையில் அவர் தனது எக்ஸ் பக்கத்தில் தமிழில் பதிவிட்டுள்ளார். அவரது பதிவில், ஒவ்வொரு நொடியும் உங்களுக்கு நன்றாக இருக்கட்டும் எனக் குறிப்பிட்டுள்ளார். அவர் தமிழில் பதிவிட்டிருப்பது தமிழ் ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
அமிதாப் பச்சன் எக்ஸ் பக்கத்தில் தமிழில் பதிவு
T 5446(i) – ஒவ்வொரு நொடியும் உங்களுக்கு நன்றாக இருக்கட்டும் 🛕
— Amitabh Bachchan (@SrBachchan) July 18, 2025
-
சிவகார்த்திகேயன் – ஏ.ஆர்.முருகதாஸின் பட டைட்டில் மாற்றமா?
ஏ.ஆர்.ரஹ்மான் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்துள்ள படம் மதராஸி. இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ருக்மினி வசந்த் நடித்துள்ளார். நீண்ட இடைவேளைக்கு பிறகு சிவகார்த்திகேயன் – அனிருத் காம்போ இந்தப் படத்தில் இணைந்துள்ளதால் இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த நிலையில் இந்தப் படக்குழுவினர் முதலில் Madharasi என சமூக வலைதளங்களில் பதிவிட்டிருந்தனர். ஆனால் தற்போது ஒரு ‘A’ கூடுதலாக சேர்த்து Madharaasi எனக் குறிப்பிட்டிருக்கின்றனர். இந்த மாற்றம் ரசிகர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
-
சிவகார்த்திகேயன் படம் – முதன்முறையாக அனிருத்துடன் கைகோர்க்கும் வெங்கட் பிரபு!
பராசக்தி படத்தில் நடித்து வரும் சிவகார்த்திகேயன் அடுத்ததாக குட் நைட் இயக்குநர் விநாயக் சந்திரசேகரன் இயக்கும் படத்தில் நடிப்பதாக இருந்தது. ஆனால் சில காரணங்களால் அந்தப் படம் தாமதமாகும் நிலையில், அதற்கு பதிலாக வெங்கட் பிரபு இயக்கும் படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவிருக்கிறார். இந்தப் படத்தின் அக்டோபர் மாதம் படப்பிடிப்பு துவங்கும் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்கவுள்ளாராம். இதுவரை யுவனுடன் பணியாற்றிய வெங்கட் பிரபு முதன்முறையாக அனிருத்துடன் இணையவிருப்பதாக கூறப்படுவது யுவன் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
-
கவனிக்கப்படாமல்போன விஷாலின் கதகளி…. பாண்டிராஜ் வருத்தம்!
பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் நித்யா மேனன் இணைந்து நடித்துள்ள தலைவன் தலைவி படம் வருகிற ஜூலை 25, 2025 அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்தப் படம் தொடர்பாக யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் தன்னை குடும்ப பட இயக்குநர் என முத்திரை குத்துவதாகவும், ஆனால் தான் தொடர்ந்து வித்தியாசமான படங்களை இயக்கி வருவதாகவும் தெரிவித்தார். குறிப்பாக விஷாலின் படத்தை ஆக்ஷன் திரில்லர் ஜானரில் உருவாக்கியிருந்ததாகவும், ஆனால் அந்த நேரத்தில் 4 படங்களுடன் வந்ததால் கவனிக்கப்படாமல் போனதாகவும் வருத்தம் தெரிவித்தார்.
-
From Television to Cinema… ராஜூ ஜெயமோகனுக்கு சிவகார்த்திகேயன் வாழ்த்து!
ராஜூ ஜெயமோகன் ஹீரோவாக நடித்துள்ள பன் பட்டர் ஜாம் ஜூலை 18, 2025 அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த நிலையில் அவருக்கு நடிகர் சிவகார்த்திகேயன் வாழ்த்து தெரிவித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவரது பதிவில், தொலைக்காட்சியில் சிறிய ரோலில் நடித்து காத்திருப்புகள், முயற்சிகளுக்கு பிறகு இன்று நீங்கள் ஹீரோவாக நடித்த முதல் படம் வெளியாகவிருக்கிறது. இது எவ்வளவு முக்கியம் என்பது எனக்கு தெரியும். முதல் நாள், ஹீரோவாக முதல் படம் என்பது ரொம்ப ரொம்ப ஸ்பெஷல். உங்கள் முயற்சி வெற்றி பெற வாழ்த்துகள் ராஜு ஜெயமோகன் தம்பி எனக் குறிப்பிட்டுள்ளார்.
-
இன்று திரையரங்குகளில் வெளியாகும் 14 படங்கள்.. என்னென்ன?
கோலிவுட் சினிமாவில் மாதந்தோறும் தொடர்ந்து பல்வேறு திரைப்படங்கள் வெளியாகிவருகின்றனர். அந்த வகையில் இன்று 2025, ஜூலை 18ம் தேதியில் திரையரங்குகளில் சுமார் 14 படங்கள் வெளியாகியுள்ளன. டைட்டானிக், பன் பட்டர் ஜாம் உள்ளிட்ட 14 படங்கள் எளியாகிறது. மேலும் படிக்க..
-
நடிகர் சசிகுமாரின் ப்ரீடம் படம் ரிலீஸ் தள்ளிப்போகிறதா? படக்குழுவினர் சொல்வது என்ன?
நடிகர் சசிகுமாரின் நடிப்பில் ரிலீசிற்கு காத்திருந்த திரைப்படம் ப்ரீடம். இந்த படமானது உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ளது. சத்ய சிவாவின் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம், 2025 ஜூலை 10ம் தேதியில் வெளியாகவிருந்த நிலையில், தற்பொது 2025, ஜூலை 18 ஆம் தேதி வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. மேலும் படிக்க..
-
வேலையில்லா பட்டதாரி படம் ரிலீசாகி 11 ஆண்டுகள் நிறைவு
நடிகர் தனுஷ் நடிப்பில் ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் இயக்கத்தில் வெளியான வேலையில்லா பட்டதாரி படம் ரிலீசாகி இன்றோடு 11 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. அனிருத் இசையமைத்த இப்படத்தில் அமலாபால், சரண்யா பொன்வண்ணன், சமுத்திரகனி, சுரபி,விவேக் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்.
-
தலைவன் தலைவி படத்திற்கு இரண்டு மொழிகளில் டப்பிங் பேசிய நடிகை நித்யா மேனன்..
நடிகை நித்யா மேனன் தலைவன் தலைவி படத்திற்காக இரண்டு மொழிகளில் டப்பிங் பேசியுள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் பேசியுள்ளார். நேற்று படத்தில் ட்ரெய்லர் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்ற நிலையில், நித்யா மேனனின் டப்பிங் வீடியோ எக்ஸ் தளத்தில் வைரலாகி வருகிறது..
Nitya Menen dubbing. pic.twitter.com/dEQ2T8EzHD
— July 25 – in THEATRES! (@paperboat27) July 17, 2025
-
நடிகர் மோகன்லாலின் ஹிருதயபூர்வம் படம்.. நாளை டீசர் வெளியீடு..
மலையாள சினிமாவின் முன்னணி நடிகரான மோகன்லால், இயக்குனர் சத்யன் அந்திக்காடு இயக்கத்தில் உருவாகி வந்த ஹிருதயபூர்வம் என்கிற படத்தில் நடித்துள்ளார். இதில் கதாநாயகியாக மாளவிகா மோகனன் இடம்பெற்றுள்ளார். இந்நிலையில் இந்த படத்தின் டீசர் நாளை மாலை 5 மணிக்கு வெளியாகும் என நடிகர் மோகன்லால் தனது சமூக வலைத்தள பக்கத்தில் அறிவித்துள்ளார்.
The official teaser of #Hridayapoorvam drops tomorrow at 5:00 PM!
Get ready to witness a tale that speaks to the heart. Stay tuned. #HridayapoorvamTeaser #SathyanAnthikkad #AntonyPerumbavoor #AashirvadCinemas pic.twitter.com/yzs8KBDgn0
— Mohanlal (@Mohanlal) July 18, 2025
-
Coolie Movie Update: கூலி படத்தின் 3 வது பாடலை வெளியிட படக்குழு திட்டம்..
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கும் கூலி படத்தின் 3வது பாடலை வெளியிட திட்டமிட்டுள்ளது படக்குழு. ஏற்கனவே வெளியான இரண்டு பாடல்களும் இணையத்தில் வைரலாகும் நிலையில், மூன்றாவது பாடல் வெளியிடப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் படிக்க
-
இயக்குனர் வேலு பிரபாகரன் காலமானார்..
இயக்குனர் வேலு பிரபாகரன் உடல் நலக்குறைவு காரணமாக ஜூலை 18, 2025 தேதியான இன்று காலமானார். கடந்த சில தினங்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று காலை இயற்கை எய்தினார். இவரது மறைவிற்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
-
ஆகஸ்டில் ஷூட்டிங் செய்ய திட்டம்
இயக்குநர் ஸ்டண்ட் மாஸ்டர் என்பதால் இப்படம் அதிரடி காட்சிகள் கொண்ட படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தின் ஷூட்டிங் வரும் ஆகஸ்டில் தொடங்கலாம் என கூறப்படுகிறது. இப்படத்தில் கமிட்டாகவுள்ள கல்யாணி, முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பார் எனவும் சொல்லப்படுகிறது
-
கமலுடன் நடிக்கவுள்ள கல்யாணி
நடிகர் கமல்ஹாசனின் 237வது படத்தை சண்டைகலைஞர்களான அன்பறிவு சகோதரர்கள் இயக்கவுள்ளனர். இந்த படத்தில் மலையாள நாயகி கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
கிங்காங் வீட்டுக்கே சென்ற சிவகார்த்திகேயன்
நடிகர் கிங்காங் மகளின் திருமணத்துக்கு வருகைதர முடியாத நிலையில் அவரது வீட்டுக்கே சென்று வாழ்த்துகளை தெரிவித்துள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன். கிங்காங் குடும்பத்தினரை சந்தித்து மகிழ்ச்சியை பரிமாறிக்கொண்டார். சிவகார்த்திகேயன் வருகையால் மகிழ்ச்சியடைந்த கிங்காங், அவருக்கு நன்றி தெரிவித்துள்ளார்
-
செல்போனில் அப்படி என்ன ஸ்பெஷல்?
பகத்தின் தொலைபேசியானது, பிரீமியம் டைட்டானியம் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இதில் சபையர் படிகம் மற்றும் கையினால் தைக்கப்பட்ட தோல் போன்ற பல்வேறு விஷயங்களைப் பயன்படுத்தி வடிவமைக்கப்பட்டுள்ளது. அதனால்தான் இந்த விலை என கூறப்படுகிறது
-
Fahadh Faasil Mobile : பகத் போன் ரூ.5 லட்சமா?
பகத் பயன்படுத்தும் போன் 17 வருடப் பழமையான போன் என கூறப்படும் நிலையில், அதன் விலையும் அனைவரையும் ஆச்சரியப்படவைத்துள்ளது. அது ஸ்மார்ட் போன் கிடையாது. சாதாரண போன் மாதிரி இருந்தாலும், அந்த செல்போனின் விலை சுமார் ரூ. 5 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது
-
2 வருட காத்திருப்புக்கு பின் ரிலீஸ்
அதர்வாவின் இந்த படத்தை, இயக்குநர் ரவீந்திர மாதவா இயக்கியுள்ளார். அன்னம் பிலிம் புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. சுமார் 2 வருடங்களுக்குப் பின் தற்போது வெளியாகவுள்ளது. இந்த படத்தில் அதர்வாவிற்கு ஜோடியாக நடிகை லாவண்யா திரிபாதி நடித்துள்ளார்
-
Thanal Movie Release Date : அதர்வா பட அப்டேட்
தமிழ் சினிமாவின் முக்கிய நடிகர்களில் ஒருவராக இருந்தவர முரளி. இவரின் மூத்த மகள் நடிகர் அதர்வா. இவர் தமிழில் பல படங்கள் நடித்துள்ள நிலையில், இவரின் நடிப்பில் உருவாகிவந்த புது படம்தான் தணல் இந்த படத்தின் ரிலீஸ் தேதியைப் படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி, 2025 ஆகஸ்ட் 29 தேதியில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
-
விரைவில் வெளியாகவுள்ள கிங்டம் திரைப்படம்
விஜய் தேவரகொண்டா நடித்துள்ள கிங்டம் திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. அப்படத்தின் புரோமோஷன் பணியில் விஜய் தேவரகொண்டா ஈடுபட்டிருந்தபோது, திடீரென டெங்கு காய்ச்சல் ஏற்பட்டதை அடுத்து, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்
-
Vijay Deverakonda Health : விஜய் தேவரகொண்டாவுக்கு டெங்கு.. தொடரும் சிகிச்சை!
முன்னணி நடிகர் விஜய் தேவரகொண்டா டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி அவர் ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நலம் நன்றாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது