ரஜினிகாந்த் மற்றும் விஜயிடம் உள்ள அதே ஸ்டைல் நயன்தாராவிடம் உள்ளது – இயக்குநர் விஷ்ணு எடவன்

Director Vishnu Edavan Talks About Nayanthara Acting Style: தமிழ் சினிமாவில் தற்போது நடிகர்கள் கவின் மற்றும் நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் படம் ஹாய். இந்தப் படத்தினை இயக்குநர் விஷ்ணு எடவன் எழுதி இயக்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ரஜினிகாந்த் மற்றும் விஜயிடம் உள்ள அதே ஸ்டைல் நயன்தாராவிடம் உள்ளது - இயக்குநர் விஷ்ணு எடவன்

ஹாய் படம்

Updated On: 

04 Apr 2026 15:37 PM

 IST

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார் நடிகை நயன்தாரா. இவரது நடிப்பில் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதன்படி தமிழ் சினிமா மட்டும் இன்றி பான் இந்திய மொழிகளில் தொடர்ந்து நடித்து வருகிறார். இவர் தொடர்ந்து முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக தொடர்ந்து படங்களில் நடிப்பது மட்டும் இன்றி கதையின் நாயகியாகவும் தொடர்ந்து நடித்து வருகிறார். இந்த நிலையில் நடிகை நயன்தாரா நடிப்பில் தமிழ் சினிமாவில் தற்போது வெளியாக உள்ள படம் ஹாய். இந்தப் படத்தை இயக்குநர் விஷ்ணு எடவன் எழுதி இயக்கி உள்ளார். இவர் தமிழ் சினிமாவில் இயகுநராக அறிமுகம் ஆகும் முதல் படம் இது என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தப் படத்தில் நடிகர் கவின் நாயகனாக நடித்து உள்ளார்.

ரொமாண்டிக் காமெடி பாணியில் உருவாகி உள்ள இந்தப் படத்தில் கவின் மற்றும் நயன்தாராவுடன் இணைந்து நடிகர்கள் கே பாக்யராஜ், பூர்ணிமா பாக்யராஜ், ராதிகா சரத்குமார் மற்றும் கேபிஒய் குரேஷி என பலர் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர் என்பது குறீப்பிடத்தக்கது. இந்தப் படத்தின் இயக்குநர் விஷ்ணு எடவன் சமீபத்தில் அளித்தப் பேட்டி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.

ரஜினிகாந்த் மற்றும் விஜயிடம் உள்ள அதே ஸ்டைல் நயன்தாராவிடம் உள்ளது:

லோகேஷ் அண்ணாவுடன் நான் பணியாற்றியபோது, ​​ரஜினிகாந்த் சார் மற்றும் விஜய் சார் ஆகியோரின் படங்களில் பணிபுரியும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அந்த ‘மாஸ்’ நட்சத்திரங்கள் அனைவரும், திரைக்கதையில் எழுதப்பட்டிருப்பதை அப்படியே பின்பற்றுவதையே விரும்புகிறார்கள். அதேவிதமான பணிமுறை நயன்தாராவிடமும் காணப்படுகிறது.

நயன்தாராவை காதலிக்கும் கதாபாத்திரத்திற்கு, வழக்கமான கதாநாயகரைப் போலத் தோற்றமளிக்கும் ஒருவரை நாங்கள் விரும்பவில்லை; மாறாக, இந்தக் கூட்டணியில் ஒரு சிறிய ஆச்சரியக்கூறு இருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்பினோம்.

நயன்தாராதான் கதாநாயகியாக நடிப்பார் என்பது ஆரம்பத்திலேயே முடிவு செய்யப்பட்டுவிட்டதால், நான் திரைக்கதையை மிக விரைவாக எழுதி முடித்தேன். அதன்பிறகு, அந்தக் கதாபாத்திரத்திற்கு என் நினைவுக்கு வந்த நபர் கவின் ஆவார்.

Also Read… அந்த ஒரு பழக்கத்தை கைவிட வேண்டும் என்று நினைக்கிறேன் – செல்வராகவன் ஓபன் டாக்

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… Nooru Saami Movie: விஜய் ஆண்டனியின் நூறு சாமி பட டீசர் எப்போது வெளியாகிறது? – அப்டேட் இதோ!

Follow Us
ரயில் டிக்கெட் ரத்து செய்வதில் புதிய மாற்றம் - இனி முழு கட்டணமும் திரும்ப கிடைக்காது!
அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்களை தாக்குவோம் - ஈரான் எச்சரிக்கையால் மீண்டும் பதற்றம்
துல்கர் சல்மானுடன் மோதலா? டோவினோ தாமஸ் அதிரடி பதில்!
மீண்டும் சரிந்த தங்கம் விலை.