படையப்பா படத்தில் ஒரு காட்சிக்கு ரஜினியிடம் கெஞ்சி தான் நடிக்க வைத்தேன் – கே.எஸ்.ரவிக்குமார்!
Director KS Ravikumar: தமிழ் சினிமாவில் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற இயக்குநர்கள் ஒருவர் கே.எஸ்.ரவிக்குமார். குறிப்பாக 90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரைட் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் படையப்பா படத்தின் ஷூட்டிங் அனுபவம் குறித்து பேட்டி ஒன்றில் பேசியுள்ளார். அந்த வீடியோ தற்போது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

ரஜினிகாந்த் மற்றும் கே.எஸ்.ரவிகுமார்
நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது படையப்பா படம். இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் (Director KS Ravikumar) எழுதி இயக்கிய இந்தப் படம் கடந்த 10-ம் தேதி ஏப்ரல் மாதம் 1999-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியானது. இந்தப் படத்தில் நடிகர் ரஜினிகாந்த் உடன் இணைந்து நடிகர்கள் சிவாஜி கணேசன், ரம்யா கிருஷ்ணன், சௌந்தர்யா, லட்சுமி, சித்தாரா, ராதா ரவி, நாசர், மணிவண்ணன், செந்தில், அப்பாஸ், ப்ரீதா, அனிதா வெங்கட், அனு மோகன், ரமேஷ் கண்ணா, வடிவுக்கரசி, சத்தியப்ரியா, மன்சூர் அலி கான், பிரகாஷ் ராஜ், வாசு விக்ரம், ராஜா ரவீந்தர், ராஜேஷ் குமார், விஜய சாரதி, லாவண்யா, ரவி ராகவேந்திரா, கனல் கண்ணன், ஏ.கே.செந்தில், மோகன் ராம், கே.எஸ்.ரவிக்குமார், மாஸ்டர் மகேந்திரன், அரவிந்த் ஆகாஷ், ரோபோ சங்கர் என பலர் இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தனர்.
இந்தப் படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான அருணாச்சலா சினி கிரியேஷன்ஸ் சார்பாக தயாரிப்பாளர்கள் கே. சத்தியநாராயணா, எம்.வி. கிருஷ்ணா ராவ், கே.விட்டல் பிரசாத் ராவ் மற்றும் பி.எல்.தேனப்பன் ஆகியோர் இணைந்து இந்தப் படத்தை தயாரித்து இருந்தனர். படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து இருந்த நிலையில் படத்தின் பாடல்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
ரஜினியிடம் கெஞ்சி தான் அந்த சீன் நடிக்க வைத்தேன்:
படையப்பா படத்தில் நடிகர் ரஜினிகாந்தின் தங்கை விரும்பிய நபர் அவர்களிடம் இருந்து சொத்துகள் எல்லாம் பறிபோனதால் அவரை விட்டுவிட்டு வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்துக்கொள்வார். அந்தக் காட்சியில் தனது தங்கையை சமாதானம் செய்யும் நடிகர் ரஜினிகாந்த் அவருக்கு சாப்பாடு உட்டிவிட்டபடி கண்கலங்க வேண்டும். இந்த காட்சியில் ரஜினிகாந்த் முதலில் நடிக்க ஒப்புக்கொள்ளவில்லை என்றும் அவரிடம் கெஞ்சிதான் நடிக்க வைத்ததாகவும் படத்தின் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் பேட்டி ஒன்றில் தெரிவித்து இருந்தார். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகின்றது.
Also Read… பார்வையாளர்களுக்கு எப்போதும் ட்ரெய்லரில் ஒரு சர்ப்ரைஸ் வைப்பேன் – விஷ்ணு விஷால்
இணையத்தில் கவனம் பெறும் நடிகர் கே.எஸ்.ரவிக்குமார் பேச்சு:
Also Read… விஜயின் நடிப்பில் வெளியாகி 14 வருடத்தை நிறைவு செய்கிறது வேலாயுதம் படம்!