தனுஷ் 55 படத்தில் மம்முட்டின் கதாப்பாத்திரம் இதுவா? வைரலாகும் தகவல்

Dhanush 55 Movie Mammootty Character: மலையாள சினிமாவில் சூப்பர் ஸ்டாராக இருக்கும் மம்முட்டி பல ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது தமிழ் சினிமாவில் நடிக்க வந்துள்ளார். இந்த நிலையில் தனுஷ் படத்தில் இவரது கதாப்பாத்திரம் தொடர்பான தகவல்கள் இணையத்தில் பரவி வைரலாகி வருகின்றது.

தனுஷ் 55 படத்தில் மம்முட்டின் கதாப்பாத்திரம் இதுவா? வைரலாகும் தகவல்

மம்முட்டி மற்றும் ராஜ்குமார் பெரியசாமி

Published: 

28 Mar 2026 12:34 PM

 IST

மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருவர் நடிகர் மம்முட்டி. இவரது நடிப்பில் மலையாள சினிமாவில் தொடர்ந்து படங்கள் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது. இவர் மலையாள சினிமாவில் பல நூறு படங்களுக்கு மேல் நாயகனாகவும் சிறப்பு கதாப்பாத்திரத்திலும் நடித்து இருந்த நிலையில் அதனைத் தொடர்ந்து பான் இந்திய மொழிகளான தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னடம் மொழிகளிலும் பலப் படங்களில் நடித்துள்ளார். இதில் அதிக அளவில் தமிழ் மொழிப் படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதில் குறிப்பாக 1990-ம் ஆண்டு முதல் நடிகர் மம்முட்டி தமிழ் மொழிப் படங்களில் நடித்துள்ளார். தொடர்ந்து அடுத்தடுத்து பல தமிழ் படங்களில் நடிகர் மம்முட்டி நடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இறுதியாக நடிகர் மம்முட்டி தமிழ் சினிமாவில் நடித்தப் படம் பேரன்பு.

இயக்குநர் ராம் இயக்கத்தில் நடிகர் மம்முத்தி தமிழ் சினிமாவில் இறுதியாக நடித்த பேரன்பு படம் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்தப் படம் இறுதியாக கடந்த 2019-ம் ஆண்டு வெளியாகி இருந்த நிலையில் தொடர்ந்து 7 ஆண்டுகளாக தமிழ் மொழியில் படம் திரையரங்குகளில் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தனுஷ் 55 படத்தில் மம்முட்டின் கதாப்பாத்திரம் இதுவா?

இந்த நிலையில் சுமார் 7 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் மொழியில் நடிகர் மம்முட்டி நடிப்பில் படம் வெளியாகவில்லை. இதனைத் தொடர்ந்து நடிகர் மம்முட்டி தற்போது நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் 55-வது படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகி உள்ளார். இந்தப் படத்தில் நடிகர் மம்முட்டி ஒரு கிரே ஷேட் உடைய காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளதாக தகவல்கள் சினிமா வட்டாரங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றது. மேலும் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகி வரும் இந்தப் படத்தில் நடிகர் மம்முட்டியின் காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

Also Read… அரசன் படத்தில் சிம்புவிற்கு ஜோடி இவரா? வைரலாகும் தகவல்

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… ரசிகர்களிடையே கவனத்தை ஈர்க்கும் சமுத்திரகனியின் கார்மேனி செல்வம் பட ட்ரெய்லர்!

Follow Us
அமெரிக்காவின் அமைதி பேச்சுவார்த்தையை நிராகரித்த ஈரான் - அதிகரிக்கும் எரிபொருள் தட்டுப்பாடு
அதிகரிக்கும் போர் பதற்றம்.. 5 நாள் கெடு கொடுத்த அதிபர் டிரம்ப்..
"முன்பே வா" ரெய்னாவிற்கு மட்டுமல்ல.. தோனிக்கும் ரொம்ப பிடிக்கும்!.. ஏ.ஆர்.ரஹ்மான் பகிர்ந்த சுவாரசியம்!
ஒவ்வொரு இந்தியரும் பார்க்க வேண்டிய படம் - துரந்தர் 2 படத்தை பாராட்டிய ரஜினிகாந்த்