AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

“இந்திய மக்களுக்கு நன்றி”.. இஸ்ரேல் மீது ஏவிய ஏவுகணைகள் மூலம் உலக நாட்டு மக்களுக்கு ஈரான் நன்றி!

Iran Thanked People From World Countries | ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களுக்கு, ஈரான் பதிலடி கொடுத்து வருகிறது. அந்த வகையில், இஸ்ரேல் மீது ஏவிய ஏவுகணைகளின் மீது இந்திய மக்களுக்கு நன்றி என்று ஈரான் குறிப்பிட்டு அனுப்பியுள்ளது.

“இந்திய மக்களுக்கு நன்றி”.. இஸ்ரேல் மீது ஏவிய ஏவுகணைகள் மூலம் உலக நாட்டு மக்களுக்கு ஈரான் நன்றி!
ஏவுகணைகள் மூலம் இந்தியாவுக்கு நன்றி சொன்ன ஈரான்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 28 Mar 2026 16:01 PM IST

தெஹ்ரான், மார்ச் 28 : ஈரான் (Iran) மீது அமெரிக்கா (America) மற்றும் இஸ்ரேல் (Israel) இணைந்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஈரானும் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த நிலையில், இஸ்ரேலை தாக்க ஈரான் அனுப்பிய ஏவுகனைகளில் இந்தியாவுக்கு நன்றி தெரிவிக்கும் வாசகங்கள் இடம்பெற்றுள்ளதாக சமூக வலைத்தளங்களில் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் வெளியாகி கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த விவகாரம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

அமெரிக்கா, இஸ்ரேலுக்கு பதிலடி கொடுத்து வரும் ஈரான்

பிப்ரவரி 28, 2026 முதல் இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா ஈரான் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஈரான் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக உலக நாடுகளின் எண்ணெய் கப்பல்கள் கடந்துச் செல்லக்கூடிய ஹோர்முஸ் நீரிணை (Strait Of Hormuz) வழித்தடத்தை மூடி, உலக நாடுகளை எண்ணெய் தட்டுப்பாடால் ஸ்தம்பிக்க வைத்துள்ளது.

இதையும் படிங்க : அமெரிக்காவின் போர் நிறுத்த முன்மொழிவை நிராகரித்த ஈரான் – போரை நிறுத்த 5 கோரிக்கைகள்

இந்தியாவுக்கு நன்றி தெரிவித்து ஈரான் ஏவுகணை

ஈரான் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு ஈரான் ராணுவம் பதிலடி தாக்குதல் நடத்தி வருகிறது. அந்த வகையில், இஸ்ரேலை தாக்க ஈரான் ஏவிய ஏவுகணைகளில் ஜெர்மனி, ஸ்பெயின், பாகிஸ்தான், இந்தியா ஆகிய நாடுகளுக்கு நன்றி தெரிவிக்கும் வாசகங்களை ஈரான் அதில் குறிப்பிட்டுள்ளது. குறிப்பாக ஜெர்மன் மக்களுக்கு நன்றி, இந்திய மக்களுக்கு நன்றி, பாகிஸ்தான் மக்களுக்கு நன்றி, ஸ்பெயின் மக்களுக்கு நன்றி என ஏவுகணைகளில் கைகளால் எழுதப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : ஈரான் போர்.. எரிபொருள் தட்டுப்பட்டால் அவசரநிலை அறிவித்த பிலிப்பைன்ஸ்!

ஈரான் இஸ்ரேல் மீது ஏவிய தனது ஏவுகணைகள் மூலம் உலக நாட்டு மக்கள்களுக்கு நன்றி தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Follow Us