அமெரிக்காவின் போர் நிறுத்த முன்மொழிவை நிராகரித்த ஈரான் – போரை நிறுத்த 5 கோரிக்கைகள்
Iran Rejects US Proposal: போரை நிறுத்துவது என்பது எங்களுடைய முடிவு என்று ஈரான் அதிகாரிகள் உறுதியாக தெரிவித்துள்ளனர். இதனுடன், அமெரிக்காவுக்கு எதிராக தங்கள் பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெறும் என்றும், தங்கள் நிபந்தனைகள் நிறைவேறும் வரை கடுமையான தாக்குதல்கள் மேற்கொள்ளப்படும் என்றும் எச்சரித்துள்ளது.
போரைக் முடிப்பது எப்போது, எப்படி என்பது எங்களுடைய முடிவு என்று ஈரான் அதிகாரிகள் உறுதியாக தெரிவித்துள்ளனர். இதனுடன், அமெரிக்காவுக்கு எதிராக தங்கள் பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெறும் என்றும், தங்கள் நிபந்தனைகள் நிறைவேறும் வரை கடுமையான தாக்குதல்கள் மேற்கொள்ளப்படும் என்றும் எச்சரித்துள்ளது. இந்த தகவலை வெளியிட்ட ஈரான் அதிகாரி, அமெரிக்காவின் பேச்சு அதிகமானது என்றும், அதில் நம்பிக்கை வைக்க முடியாது என்றும் கூறியுள்ளார்.
அமெரிக்காவிற்கு எச்சரிக்கை விடுத்த ஈரான்
இதுகுறித்து ஈரான் தரப்பில், எங்கள் தரப்பில் நிபந்தனைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும். அமெரிக்கா மற்றும் அதனுடன் இணைந்து செயல்படும் நாடுகளுக்கு எதிராக கடும் தாக்குதல்கள் தொடரும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் கடந்த காலங்களில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளில் அமெரிக்கா நம்பகத்தன்மையுடன் செயல்பவில்லை. சமரசம் செய்வதற்கான நோக்கம் அமெரிக்காவுக்கு இல்லை என குற்றம்சாட்டியுள்ளது.
இதையும் படிக்க : மத்திய கிழக்கில் அதிகரிக்கும் பதற்றம்.. பிரதமர் மோடியுடன் அதிபர் டிரம்ப் தொலைப்பேசி உரையாடல்..




ஈரான் முன்வைத்த 5 முக்கிய நிபந்தனைகள்
போரைக் கைவிட ஈரான் 5 முக்கிய நிபந்தனைகள் நிறைவேற்றப்பட வேண்டும் என தெரிவித்துள்ளது.
- அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தாக்குதல்களை முழுமையாக நிறுத்த வேண்டும்.
- எதிர்காலத்தில் ஈரானுக்கு எதிரான ராணுவ நடவடிக்கைகள் நடைபெறாதபடி உறுதியான பாதுகாப்பு உத்தரவாதங்களை வழங்கப்பட வேண்டும்.
- போரால் ஏற்பட்ட சேதங்களுக்கு சரியான இழப்பீடு வழங்கப்பட வேண்டும்.
- தங்களுக்கு எதிராக செயல்படும் அனைத்து நாடுகளும் அமைப்புகளும் போர் நிறுத்தத்துக்கு உடன்பட வேண்டும்.
- ஹார்முஸ் நீர்பாதை பகுதியில் ஈரானின் அதிகாரத்தை சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளது.
இந்த நிபந்தனைகள் ஏற்கனவே ஜெனீவாவில் நடைபெற்ற இரண்டாம் சுற்று பேச்சுவார்த்தைகளில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் என கூறப்படுகிறது.
இதையும் படிக்க : 100க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்களை ஏற்றிச் சென்ற ராணுவ விமானம் விபத்து.. கொலம்பியாவில் அதிர்ச்சி
அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே நடைபெற்று வரும் போர், கடந்த பிப்ரவரி 28, 2026 அன்று ஈரானின் முக்கிய தலைவர்கள் உயிரிழந்த சம்பவத்திற்கு பின் மேலும் தீவிரமடைந்தது. இதனால் ஹார்முஸ் கடல் வழியை ஈரான் போடிய காரணத்தால் எரிபொருள் விநியோகம் தடைபட்டுள்ளது. குறிப்பாக இந்தியா போன்ற நாடுகளில் சமையல் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மேலும் வணிக பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர்கள் தட்டுப்பாடு காரணமாக ஹோட்டல்கள் மூடப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் இந்த பிரச்னை சரியாக வேண்டும் என்றால் போர் முடிவுக்கு வரவேண்டும். இந்தியா போரை நிறுத்த முன் வந்த நிலையில் அதில் ஈரான் சம்மதிக்கவில்லை என்பதால் இந்த போர் சிறிது காலம் பாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இந்தியாவில் சமையல் எரிவாயு தீவிரமடையுமா என்ற கேள்வி மக்களிடையே எழுந்துள்ளது.