ஈரான் போர்.. எரிபொருள் தட்டுப்பட்டால் அவசரநிலை அறிவித்த பிலிப்பைன்ஸ்!
Philippines Announced Emergency For Next One Year | ஈரான் போர் காரணமாக உலக நாடுகள் கடும் சவால்களை எதிர்க்கொண்டு வருகின்றன. இந்த நிலையில், எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், பிலிப்பைன்ஸ் அவரச நிலையை அறிவித்துள்ளது. ஈரான் போர் காரணமாக அவசரநிலையை அறிவித்த முதல் நாடாக மாறியுள்ளது.
மணிலா, மார்ச் 25 : ஈரான் போர் (Iran War) காரணமாக உலக அளவில் எரிபொருள் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில், பிலிப்பைன்ஸ் (Philippines) நாட்டில் அவசரநிலையை அறிவித்துள்ளது. ஈரான் போர் காரணமாக உலக நாடுகள் மிக கடுமையான சவால்களை எதிர்க்கொண்டு வரும் நிலையில், அவசரநிலையை அறிவித்த முதல் நாடாக பிலிப்பைன்ஸ் அமைந்துள்ளது. இந்த நிலையில், பிலிப்பைன்ஸ் அவசரநிலை அறிவித்துள்ளது குறித்து விரிவாக பார்க்கலாம்.
எரிபொருள் தட்டுப்பாட்டை சந்தித்துள்ள உலக நாடுகள்
அமெரிக்கா, இஸ்ரேல் – ஈரான் இடையே நீடித்து வந்த போர் தற்காலிகமாக நிறுத்தி வைகப்பட்டுள்ளது. ஆனால், இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, ஈரான் ஹோர்முஸ் நீரிணையை மூடி வைத்துள்ளது உலக நாடுகள் இடையே எரிபொருள் தட்டுப்பாட்டை ஏற்படுத்தியுள்ளது. கேஸ் சிலிண்டர், பெட்ரோல் டீசல் விலை உயர்வு மற்றும் தட்டுப்பாடு என உலக நாடுகள் கடும் சவால்களை எதிர்க்கொண்டுள்ளன.
இதையும் படிங்க : அடுத்த 5 நாட்களுக்கு ஈரான் மீது தாக்குதல் நடத்தப்படாது – அதிபர் டிரம்ப் அதிரடி அறிவிப்பு
ஈரானின் இந்த நடவடிக்கையால் உலக நாடுகள் மிக கடுமையான சவால்களை எதிர்க்கொண்டுள்ள நிலையில், சர்வதேச எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்வதற்காக ஹோர்முஸ் நீரிணையை திறந்துவிட வேண்டும் என்று இந்தியா உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகள் ஈரானுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றன. இருப்பினும், ஈரான் ஹோர்முஸ் நீரிணையை திறக்கும் முடிவை இதுவரை எடுக்கவில்லை.
எரிபொருள் தட்டுப்பாடால் அவசரநிலையை அறிவித்த பிலிப்பைன்ஸ்
எரிபொருள் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில், பிலிப்பைன்ஸ் அவசரநிலை அறிவித்துள்ளது. பிலிப்பைன்ஸ் தனது எண்ணெய் தேவையில் சுமார் 98 சதவீதத்தை வளைகுடா நாடுகளிடம் இருந்து பூர்த்தி செய்துக்கொள்கிறது. இந்த நிலையில், ஈரான் போரால் அங்கு மிக கடுமையான எண்ணெய் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அங்கு பெட்ரோல் மற்றும் டீசல் விலை இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது.
இதையும் படிங்க : டிரம்ப் உருவம் பதித்த தங்க நாணயத்தை வெளியிடும் அமெரிக்கா.. உருவான சர்ச்சை!
எரிபொருள், உணவு, மருந்து மற்றும் பிற அத்தியாவசிய பொருட்களின் முறையான விநியோகத்தை கண்காணிக்க ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த அவசர நிலை அங்கு ஒரு ஆண்டு காலத்திற்கு அமலில் இருக்கும் என கூறப்பட்டுள்ளது.